திருமுறை 11 · 11.006 · 24

க்ஷேத்திரத் திருவெண்பா

அருளியவர்
ஐயடிகள் காடவர்கோன் நாயனார்

1

ஓடுகின்ற நீர்மை ஒழிதலுமே உற்றாரும்கோடுகின்றார் மூப்புங் குறுகிற்று -நாடுகின்றநல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன் நன்னெஞ்சேதில்லைச்சிற் றம்பலமே சேர்.
சொற்பிரிப்பு
ஓடுகின்ற நீர்மை ஒழிதலுமே உற்றாரும்கோடுகின்றார் மூப்பும் குறுகிற்று - நாடுகின்றநல்லச்சு இற்று அம்பலமே நண்ணாமுன் நன்னெஞ்சேதில்லைச் சிற்றம்பலமே சேர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

கடுவடுத்த நீர்கொடுவா காடிதா என்றுநடுநடுத்து நாவடங்கா முன்னம் - பொடியடுத்தபாழ்க்கோட்டஞ் சேராமுன் பன்மாடத் தென்குடந்தைக்கீழ்க்கோட்டஞ் செப்பிக் கிட.
சொற்பிரிப்பு
கடுவடுத்த நீர்கொடுவா காடிதா என்றுநடுநடுத்து நாவடங்கா முன்னம் – பொடியடுத்தபாழ்கோட்டம் சேராமுன் பன்மாடத் தென்குடந்தைக்கீழ்க்கோட்டம் செப்பிக் கிட.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றிநொந்திருமி ஏங்கி நுரைத்தேறி - வந்துந்திஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமேஐயாறு வாயால் அழை.
சொற்பிரிப்பு
குந்தி நடந்து குனிந்துஒருகை கோலூன்றிநொந்துஇருமி ஏங்கி நுரைத்தேறி – வந்துஉந்திஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமேஐயாறு வாயால் அழை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

காளை வடிவொழிந்து கையுறவோ டையுறவாய்நாளும் அணுகி நலியாமுன் - பாளைஅவிழ்கமுகம் பூஞ்சோலை ஆருரற் காளாய்க்கவிழ்கமுகம் கூம்புகஎன் கை.
சொற்பிரிப்பு
காளை வடிவுஒழிந்து கையறவோடுஐயுறவாய்நாளும் அணுகி நலியாமுன் – பாளைஅவிழ்கமுகம் பூஞ்சோலை ஆருரற்குஆளாய்க்கவிழ்க முகம் கூம்புக என்கை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

வஞ்சியன நுண்ணிடையார் வாள்தடங்கண் நீர்சோரக்குஞ்சி குறங்கின்மேற் கொண்டிருந்து - கஞ்சிஅருத்தொருத்தி கொண்டுவா என்னாமுன் நெஞ்சேதிருத்துருத்தி யான்பாதஞ் சேர்.
சொற்பிரிப்பு
வஞ்சிஅன நுண்ணிடையார் வாள்தடங்கண் நீர்சோரக்குஞ்சி குறங்கின்மேல் கொண்டிருந்து – கஞ்சிஅருத்தஒருத்தி கொண்டுவா என்னாமுன் நெஞ்சேதிருத்துருத்தியான் பாதம் சேர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

காலைக் கலையிழையாற் கட்டித்தன் கையார்த்துமாலை தலைக்கணிந்து மையெழுதி - மேலோர்பருக்கோடி மூடிப் பலரழா முன்னம்திருக்கோடி காஅடைநீ சென்று.
சொற்பிரிப்பு
காலைக் கலைஇழையால் கட்டித்தன் கையார்த்துமாலை தலைக்கணிந்து மைஎழுதி – மேலோர்பருக்கோடி மூடிப் பலர் அழாமுன்னம்திருக்கோடிகா அடை நீ சென்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

மாண்டுவாய் அங்காவா முன்னம் மடநெஞ்சேவேண்டுவாய் ஆகி விரைந்தொல்லைப் - பாண்டவாய்த்தென்னிடைவாய் மேய சிவனார் திருநாமம்நின்னிடைவாய் வைத்து நினை.
சொற்பிரிப்பு
மாண்டு வாய் அங்காவா முன்னம் மடநெஞ்சேவேண்டுவாய் ஆகி விரைந்தொல்லைப் – பாண்டவாய்த்தென்னிடைவாய் மேய சிவனார் திருநாமம்நின்னிடை வாய்வைத்து நினை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாதுபெட்டப் பிணமென்று பேரிட்டுக் - கட்டிஎடுங்களத்தா என்னாமுன் ஏழைமட நெஞ்சேநெடுங்களத்தான் பாதம் நினை.
சொற்பிரிப்பு
தொட்டுத் தடவித் துடிப்புஒன்றும் காணாதுபெட்டப் பிணம்என்று பேரிட்டுக் – கட்டிஎடுங்கள்அத்தா என்னாமுன் ஏழைமடநெஞ்சேநெடுங்களத்தான் பாதம் நினை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

அழுகு திரிகுரம்பை ஆங்கதுவிட் டாவிஒழுகும் பொழுதறிய ஒண்ணா - கழுகுகழித்துண் டலையாமுன் காவிரியின் தென்பால்குழித்தண் டலையானைக் கூறு.
சொற்பிரிப்பு
அழுகு திரி குரம்பை ஆங்குஅதுவிட்டு ஆவிஒழுகும் பொழுதுஅறிய ஒண்ணா – கழுகுகழித்துஉண்டுஅலையாமுன் காவிரியின் தென்பால்குழித்தண்டலையானைக் கூறு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

படிமுழுதும் வெண்குடைக்கீழ்ப் பாரெலாம் ஆண்டமுடியரசர் செல்வத்து மும்மைக் - கடியிலங்குதோடேந்து கொன்றையந்தார்ச் சோதிக்குத் தொண்டுபட்டோடேந்தி உண்ப துறும்.
சொற்பிரிப்பு
படிமுழுதும் வெண்குடைக்கீழ்ப் பார்எலாம் ஆண்டமுடியரசர் செல்வத்து மும்மைக் – கடிஇலங்குதோடுஏந்து கொன்றைஅம்தார்ச் சோதிக்குத் தொண்டுபட்டுஓடுஏந்தி உண்பது உறும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

குழீஇயிருந்த சுற்றம் குணங்கள்பா ராட்டவழீஇயிருந்த அங்கங்கள் எல்லாம் - தழீஇயிருந்தும்என்னானைக் காவா இதுதகா தென்னாமுன்தென்னானைக்கா அடைநீ சென்று.
சொற்பிரிப்பு
குழீஇ இருந்த சுற்றம் குணங்கள் பாராட்டவழீஇ இருந்த அங்கங்கள் எல்லாம் – தழீஇ இருந்தும்என்ஆனைக்குஆவா இது தகாதுஎன்னாமுன்தென்ஆனைக்கா அடை நீ சென்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

குயிலொத் திருள்குஞ்சி கொக்கொத் திருமல்பயிலப் புகாமுன்னம் நெஞ்சே - மயிலைத்திருப்புன்னை யங்கானல் சிந்தியா யாகில்இருப்பின்னை யங்காந் திளைத்து.
சொற்பிரிப்பு
குயில்ஒத்துஇருள் குஞ்சி கொக்குஒத்துஇருமல்பயிலப் புகாமுன்னம் நெஞ்சே – மயிலைத்திருப்புன்னை அம்கானல் சிந்தியாய்ஆகில்இருப் பின்னை அங்காந்து இளைத்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

13

காளையர்கள் ஈளையர்க ளாகிக் கருமயிரும்பூளையெனப் பொங்கிப் பொலிவழிந்து - சூளையர்கள்ஓகாளஞ் செய்யாமுன் நெஞ்சமே உஞ்சேனைமாகாளங் கைதொழுது வாழ்த்து.
சொற்பிரிப்பு
காளையர்கள் ஈளையர்களாகிக் கரு மயிரும்பூளைஎனப் பொங்கிப் பொலிவுஅழிந்து – சூளையர்கள்ஓகாளம் செய்யாமுன் நெஞ்சமே உஞ்சேனைமாகாளம் கை தொழுது வாழ்த்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

14

இல்லும் பொருளும் இருந்த மனையளவேசொல்லும் அயலார் துடிப்பளவே - நல்லகிளைகுளத்து நீரளவே கிற்றியே நெஞ்சேவளைகுளத்துள் ஈசனையே வாழ்த்து.
சொற்பிரிப்பு
இல்லும் பொருளும் இருந்த மனையளவேசொல்லும் அயலார் துடிப்பளவே – நல்லகிளைகுளத்து நீரளவே கிற்றியேல் நெஞ்சேவளைகுளத்துள் ஈசனையே வாழ்த்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

15

அஞ்சனஞ்சேர் கண்ணார் அருவருக்கும் அப்பதமாய்க்குஞ்சி வெளுத்துடலங் கோடாமுன் - நெஞ்சமேபோய்க்காடு கூடப் புலம்பாது பூம்புகார்ச்சாய்க்காடு கைதொழுநீ சார்ந்து.
சொற்பிரிப்பு
அஞ்சனம்சேர் கண்ணார் அருவருக்கும் அப்பதமாய்க்குஞ்சி வெளுத்துஉடலம் கோடாமுன் – நெஞ்சமேபோய்க்காடு கூடப் புலம்பாது பூம்புகார்ச்சாய்க்காடு கை தொழு நீ சார்ந்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

16

இட்ட குடிநீர் இருநாழி ஓருழக்காச்சட்டஒரு முட்டைநெய் தான்கலந் - தட்டஅருவாச்சா றென்றங் கழாமுன்னம் பாச்சில்திருவாச்சி ராமமே சேர்.
சொற்பிரிப்பு
இட்ட குடி நீர் இரு நாழி ஓர் உழக்காச்சட்ட ஒரு முட்டை நெய்தான் கலந்து - அட்டஅருவாய்ச்சாறுஎன்று அங்குஅழா முன்னம் பாச்சில்திருவாச்சிராமமே சேர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

17

கழிந்தது நென்னற்றுக் கட்டுவிட்டு நாறிஒழிந்த துடல்இரா வண்ணம் - அழிந்ததிராமலையா கொண்டுபோ என்னாமுன் நெஞ்சேசிராமலையான் பாதமே சேர்.
சொற்பிரிப்பு
கழிந்தது நென்னற்றுக் கட்டுவிட்டு நாறிஒழிந்ததுஉடல் இராவண்ணம் – அழிந்ததுஇராமல் ஐயா கொண்டு போ என்னாமுன் நெஞ்சேசிராமலையான் பாதமே சேர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

18

இழவாடிச் சுற்றத்தார் எல்லாருங் கூடிவிழவாடி ஆவிவிடா முன்னம் - மழபாடிஆண்டானை ஆரமுதை அன்றயன்மால் காணாமைநீண்டானை நெஞ்சே நினை.
சொற்பிரிப்பு
இழவுஆடிச் சுற்றத்தார் எல்லாரும் கூடிவிழவுஆடி ஆவி விடாமுன்னம் – மழபாடிஆண்டானை ஆரமுதை அன்றுஅயன்மால் காணாமைநீண்டானை நெஞ்சே நினை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

19

உள்ளிடத்தான் வல்லையே நெஞ்சமே ஊழ்வினைகள்கள்ளிடத்தான் வந்து கலவாமுன் - கொள்ளிடத்தின்தென்திருவாப் பாடியான் தெய்வமறை நான்கினையும்தன்திருவாய்ப் பாடியான் தாள்.
சொற்பிரிப்பு
உள்ளிடத்தான் வல்லையே நெஞ்சமே ஊழ்வினைகள்கள்இடத் தான் வந்து கலவா முன் – கொள்ளிடத்தின்தென் திருஆப்பாடியான் தெய்வ மறை நான்கினையும்தன் திருவாய்ப் பாடியான் தாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

20

என்னெஞ்சே உன்னை இரந்தும் உரைக்கின்றேன்கன்னஞ்செய் வாயாகிற் காலத்தால் - வன்னெஞ்சேய்மாகம்பத் தானை உரித்தானை வண்கச்சிஏகம்பத் தானை இறைஞ்சு.
சொற்பிரிப்பு
என்னெஞ்சே உன்னை இரந்தும் உரைக்கின்றேன்கன்னம் செய்வாய் ஆகில் காலத்தால் – வன்நஞ்சுஏய்மாகம்பத்து ஆனை உரித்தானை வண்கச்சிஏகம்பத்தானை இறைஞ்சு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

21

கரம்ஊன்றிக் கண்ணிடுங்கிக் கால்குலைய மற்றோர்மரம்ஊன்றி வாய்குதட்டா முன்னம் - புரம்மூன்றுந்தீச்சரத்தாற் செற்றான் திருப்பனந்தாள் தாடகையஈச்சரத்தான் பாதமே ஏத்து.
சொற்பிரிப்பு
கரம்ஊன்றிக் கண்இடுங்கிக் கால்குலைய மற்றோர்மரம்ஊன்றி வாய் குதட்டா முன்னம் – புரம்மூன்றும்தீச்சரத்தால் செற்றான் திருப்பனந்தாள் தாடகையஈச்சரத்தான் பாதமே ஏத்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

22

தஞ்சாக மூவுலகும் ஆண்டு தலையளித்திட்டெஞ்சாமை பெற்றிடினும் யான்வேண்டேன் - நஞ்சங்கரந்துண்ட கண்டர்தம் ஒற்றியூர் பற்றிஇரந்துண் டிருக்கப் பெறின்.
சொற்பிரிப்பு
தஞ்சாக மூவுலகும் ஆண்டு தலையளித்திட்டுஎஞ்சாமை பெற்றிடினும் யான்வேண்டேன் – நஞ்சம்கரந்துண்ட கண்டர்தம் ஒற்றியூர் பற்றிஇரந்துண்டு இருக்கப் பெறின்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

23

நூற்றனைத்தோர் பல்லூழி நுண்வயிர வெண்குடைக்கீழ்வீற்றிருந்த செல்வம் விழையாதே - கூற்றுதைத்தான்ஆடரவங் கச்சா அரைக்கசைத்த அம்மான்தன்பாடரவங் கேட்ட பகல்.
சொற்பிரிப்பு
நூற்றுஅனைத்துஓர் பல்ஊழி நுண்வயிர வெண்குடைக்கீழ்வீற்றிருந்த செல்வம் விழையாதே – கூற்றுஉதைத்தான்ஆடரவம் கச்சா அரைக்கு அசைத்த அம்மான்தன்பாடரவம் கேட்ட பகல்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

24

உய்யும் மருந்திதனை உண்மின் எனஉற்றார்கையைப் பிடித்தெதிரே காட்டியக்காற் - பையஎழுந்திருமி யான்வேண்டேன் என்னாமுன் நெஞ்சேசெழுந்திரும யானமே சேர்.
சொற்பிரிப்பு
உய்யும் மருந்து இதனை உண்மின் என உற்றார்கையைப் பிடித்துஎதிரே காட்டியக்கால் – பையஎழுந்துஇருமி யான்வேண்டேன் என்னா முன் நெஞ்சேசெழும் திருமயானமே சேர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.