1
பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல்சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானேஎஞ்ஞான்று தீர்ப்ப திடர்.
சொற்பிரிப்பு
பிறந்து மொழி பயின்ற பின்எல்லாம் காதல்சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன் – நிறந்திகழும்மைஞ் ஞான்ற கண்டத்து வானோர் பெருமானேஎஞ்ஞான்று தீர்ப்பது இடர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
2
இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்படரும் நெறிபணியா ரேனும் -சுடர்உருவில்என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்கன்பறா தென்னெஞ் சவர்க்கு.
சொற்பிரிப்பு
இடர் களையாரேனும் எமக்கு இரங்காரேனும்படரும் நெறி பணியாரேனும் – சுடர் உருவில்என்பு அறாக் கோலத்து எரியாடும் எம்மானார்க்குஅன்பு அறாது என் நெஞ்சு அவர்க்கு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
3
அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்அவர்க்கேநாம் அன்பாவ தல்லாற் - பவர்ச்சடைமேற்பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்.
சொற்பிரிப்பு
அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்அவர்க்கே நாம் அன்பாவது அல்லால் – பவர்ச்சடைமேல்பாகாப் போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்குஆ காப்போம் எஞ்ஞான்றும் ஆள்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
4
ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டாற்கேளாத தென்கொலோ கேளாமை - நீளாகம்செம்மையா னாகித் திருமிடறு மற்றொன்றாம்எம்மைஆட் கொண்ட இறை.
சொற்பிரிப்பு
ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டால்கேளாதது என்கொலோ கேளாமை – நீள்ஆகம்செம்மையான் ஆகித் திருமிடறு மற்றொன்றாம்எம்மை ஆட்கொண்ட இறை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
5
இறைவனே எவ்வுயிரும் தோற்றுவிப்பான் தோற்றிஇறைவனே ஈண்டிறக்கம் செய்வான் - இறைவனேஎந்தாய் எனஇரங்கும் எங்கள்மேல் வெந்துயரம்வந்தால் அது மாற்றுவான்.
சொற்பிரிப்பு
இறைவனே எவ்வுயிரும் தோற்றுவிப்பான் தோற்றிஇறைவனே ஈண்டு இறக்கம் செய்வான் – இறைவனேஎந்தாய் எனஇரங்கும் எங்கள்மேல் வெந்துயரம்வந்தால் அது மாற்றுவான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
6
வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன்தானத்தான் என்பாரும் தாமென்க - ஞானத்தான்முன்நஞ்சத் தாலிருண்ட மொய்யொளிசேர் கண்டத்தான்என்நெஞ்சத் தானென்பன் யான்.
சொற்பிரிப்பு
வானத்தான் என்பாரும் என்க மற்று உம்பர்கோன்தானத்தான் என்பாரும் தாம் என்க – ஞானத்தான்முன்நஞ்சத்தால் இருண்ட மொய்ஒளிசேர் கண்டத்தான்என் நெஞ்சத்தான் என்பன் யான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
7
யானே தவமுடையேன் என்நெஞ்சே நன்னெஞ்சம்யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானேயக்கைம்மா உரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணீற்றஅம்மானுக் காளாயி னேன்.
சொற்பிரிப்பு
யானே தவம் உடையேன் என் நெஞ்சே நன்னெஞ்சம்யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் – யானே அக்கைம்மா உரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணீற்றஅம்மானுக்கு ஆள் ஆயினேன்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
8
ஆயினேன் ஆள்வானுக் கன்றே பெறற்கரியன்ஆயினேன் அஃதன்றே யாமாறு - தூயபுனற்கங்கை ஏற்றானோர் பொன்வரையே போல்வான்அனற்கங்கை ஏற்றான் அருள்.
சொற்பிரிப்பு
ஆயினேன் ஆள்வானுக்கு அன்றே பெறற்குஅரியன்ஆயினேன் அஃதன்றே ஆமாறு – தூயபுனல்கங்கை ஏற்றான் ஓர் பொன்வரையே போல்வான்அனற்குஅங்கை ஏற்றான் அருள்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
9
அருளே உலகெலாம் ஆள்விப்ப தீசன்அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலேமெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்எப்பொருளு மாவ தெனக்கு.
சொற்பிரிப்பு
அருளே உலகெலாம் ஆள்விப்பது ஈசன்அருளே பிறப்பறுப்பதானால் – அருளாலேமெய்ப்பொருளை நோக்கும் விதிஉடையேன் எஞ்ஞான்றும்எப்பொருளும் ஆவது எனக்கு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
10
எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும்மனக்கினிய வைப்பாக வைத்தேன் - எனக்கவனைக்கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்உண்டே யெனக்கரிய தொன்று.
சொற்பிரிப்பு
எனக்குஇனிய எம்மானை ஈசனை யான் என்றும்மனக்குஇனிய வைப்பாக வைத்தேன் – எனக்குஅவனைக்கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்உண்டே எனக்கு அரியது ஒன்று.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
11
ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன்ஒன்றேஎன் உள்ளத்தின் உள்ளடைத்தேன் - ஒன்றேகாண்கங்கையான் திங்கட் கதிர்முடியான் பொங்கொளிசேர்அங்கையாற் காளாம் அது.
சொற்பிரிப்பு
ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்துஒழிந்தேன்ஒன்றே என் உள்ளத்தின் உள்அடைத்தேன் – ஒன்றேகாண்கங்கையான் திங்கள் கதிர்முடியான் பொங்கொளிசேர்அங்கையாற்கு ஆளாம் அது.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
12
அதுவே பிரானாமா றாட்கொள்ளு மாறும்அதுவே இனியறிந்தோ மானால் - அதுவேபனிக்கணங்கு கண்ணியா ரொண்ணுதலின் மேலோர்தனிக்கணங்கு வைத்தார் தகவு.
சொற்பிரிப்பு
அதுவே பிரான்ஆமாறும் ஆட்கொள்ளும்ஆறும்அதுவே இனி அறிந்தோம் ஆனால் – அதுவேபனிக்குஅணங்கு கண்ணியார் ஒண்ணுதலின் மேலோர்தனிக்கண்அங்கு வைத்தார் தகவு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
13
தகவுடையார் தாமுளரேல் தாரகலஞ் சாரப்புகவிடுதல் பொல்லாது கண்டீர் - மிகவடரஊர்ந்திடுமா நாகம் ஒருநாள் மலைமகளைச்சார்ந்திடுமே லேபாவந் தான்.
சொற்பிரிப்பு
தகவுடையார் தாம் உளரேல் தார் அகலம் சாரப்புகவிடுதல் பொல்லாது கண்டீர் – மிகஅடரஊர்ந்திடு மாநாகம் ஒருநாள் மலைமகளைச்சார்ந்திடுமேல் ஏ பாவம் தான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
14
தானே தனிநெஞ்சந் தன்னையுயக் கொள்வான்தானே பெருஞ்சேமஞ் செய்யுமால் - தானேயோர்பூணாகத் தாற்பொலிந்து பொங்கழல்சேர் நஞ்சுமிழும்நீணாகத் தானை நினைந்து.
சொற்பிரிப்பு
தானே தனி நெஞ்சம் தன்னை உயக்கொள்வான்தானே பெருஞ்சேமம் செய்யுமால் – தானேஓர்பூண் ஆகத்தால் பொலிந்து பொங்கழல்சேர் நஞ்சுஉமிழும்நீள் நாகத்தானை நினைந்து.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
15
நினைந்திருந்து வானவர்கள் நீள்மலராற் பாதம்புனைந்தும் அடிபொருந்த மாட்டார் - நினைந்திருந்துமின்செய்வான் செஞ்சடையாய் வேதியனே என்கின்றேற்கென்செய்வான் கொல்லோ இனி.
சொற்பிரிப்பு
நினைந்திருந்து வானவர்கள் நீள்மலரால் பாதம்புனைந்தும் அடிபொருந்த மாட்டார் – நினைந்திருந்துமின்செய்வான் செஞ்சடையாய் வேதியனே என்கின்றேற்குஎன்செய்வான் கொல்லோ இனி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
16
இனியோ நாம்உய்ந்தோம் இறைவன் அருள்சேர்ந்தோம்இனியோ ரிடரில்லோம் நெஞ்சே - இனியோர்வினைக்கடலை யாக்குவிக்கும் மீளாப் பிறவிக்கனைக்கடலை நீந்தினோம் காண்.
சொற்பிரிப்பு
இனி ஓ நாம் உய்ந்தோம் இறைவன் அருள்சேர்ந்தோம்இனியோர் இடர் இல்லோம் நெஞ்சே – இனியோர்வினைக்கடலை ஆக்குவிக்கும் மீளாப் பிறவிக்கனைக்கடலை நீந்தினோம் காண்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
17
காண்பார்க்குங் காணலாந் தன்மையனே கைதொழுதுகாண்பார்க்குங் காணலாங் காதலாற் - காண்பார்க்குச்சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக்காதியாய் நின்ற அரன்.
சொற்பிரிப்பு
காண்பார்க்கும் காணலாம் தன்மையனே கைதொழுதுகாண்பார்க்கும் காணலாம் காதலால் – காண்பார்க்குச்சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்உலகுக்குஆதியாய் நின்ற அரன்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
18
அரனென்கோ நான்முகன் என்கோ அரியபரனென்கோ பண்புணர மாட்டேன் - முரணழியத்தானவனைப் பாதத் தனிவிரலாற் செற்றானையானவனை எம்மானை இன்று.
சொற்பிரிப்பு
அரன் என்கோ நான்முகன் என்கோ அரியபரன் என்கோ பண்புணர மாட்டேன் – முரண்அழியத்தானவனைப் பாதத் தனிவிரலால் செற்றானையான்அவனை எம்மானை இன்று.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
19
இன்று நமக்கெளிதே மாலுக்கும் நான்முகற்கும்அன்றும் அளப்பரியன் ஆனானை - என்றுமோர்மூவா மதியானை மூவே ழுலகங்கள்ஆவானைக் காணும் அறிவு.
சொற்பிரிப்பு
இன்று நமக்குஎளிதே மாலுக்கும் நான்முகற்கும்அன்றும் அளப்பரியன் ஆனானை – என்றும்ஓர்மூவா மதியானை மூவேழ் உலகங்கள்ஆவானைக் காணும் அறிவு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
20
அறிவானுந் தானே அறிவிப்பான் தானேஅறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்றமெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பார் ஆகாயம்அப்பொருளுந் தானே அவன்.
சொற்பிரிப்பு
அறிவானும் தானே அறிவிப்பான் தானேஅறிவாய் அறிகின்றான் தானே – அறிகின்றமெய்ப்பொருளும் தானே விரிசுடர்பார் ஆகாயம்அப்பொருளும் தானே அவன்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
21
அவனே இருசுடர்தீ ஆகாசம் ஆவான்அவனே புவிபுனல்காற் றாவான் - அவனேஇயமானனாய் அட்ட மூர்த்தியுமாய் ஞானமயனாகி நின்றானும் வந்து.
சொற்பிரிப்பு
அவனே இருசுடர்தீ ஆகாசம் ஆவான்அவனே புவிபுனல்காற்று ஆவான் – அவனேஇயமானனாய் அட்ட மூர்த்தியுமாய் ஞானமயனாகி நின்றானும் வந்து.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
22
வந்திதனைக் கொள்வதே யொக்கும்இவ் வாளரவின்சிந்தை யதுதெரிந்து காண்மினோ- வந்தோர்இராநீர் இருண்டனைய கண்டத்தீர் எங்கள்பிரானீர்உம் சென்னிப் பிறை.
சொற்பிரிப்பு
வந்துஇதனைக் கொள்வதே ஒக்கும் இவ்வாள்அரவின்சிந்தை அதுதெரிந்து காண்மினோ - வந்தோர்இரா நீர் இருண்டனைய கண்டத்தீர் எங்கள்பிரானீர் உம் சென்னிப் பிறை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
23
பிறையும் புனலும் அனலரவுஞ் சூடும்இறைவர் எமக்கிரங்கா ரேனுங் - கறைமிடற்றஎந்தையார்க் காட்பட்டேம் என்றென் றிருக்குமேஎந்தையா உள்ள மிது.
சொற்பிரிப்பு
பிறையும் புனலும் அனல்அரவும் சூடும்இறைவர் எமக்கு இரங்காரேனும் – கறைமிடற்றஎந்தையார்க்கு ஆட்பட்டேம் என்றென்று இருக்குமேஎந் தயா உள்ளம் இது.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
24
இதுவன்றே ஈசன் திருவுருவம் ஆமாறிதுவன்றே என்றனக்கோர் சேமம் - இதுவன்றேமின்னுஞ் சுடருருவாய் மீண்டாயென் சிந்தனைக்கேஇன்னுஞ் சுழல்கின்ற திங்கு.
சொற்பிரிப்பு
இதுவன்றே ஈசன் திருவுருவம் ஆமாறுஇதுவன்றே என்தனக்கோர் சேமம் – இதுவன்றேமின்னும் சுடர்உருவாய் மீண்டாய்என் சிந்தனைக்கேஇன்னும் சுழல்கின்றது இங்கு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
25
இங்கிருந்து சொல்லுவதென் எம்பெருமான் எண்ணாதேஎங்கும் பலிதிரியும் எத்திறமும் - பொங்கிரவில்ஈமவனத் தாடுவதும் என்னுக்கென் றாராய்வோம்நாமவனைக் காணலுற்ற ஞான்று.
சொற்பிரிப்பு
இங்கிருந்து சொல்லுவதுஎன் எம்பெருமான் எண்ணாதேஎங்கும் பலிதிரியும் எத்திறமும் – பொங்குஇரவில்ஈமவனத்து ஆடுவதும் என்னுக்குஎன்று ஆராய்வோம்நாம்அவனைக் காணல் உற்ற ஞான்று.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
26
ஞான்ற குழற்சடைகள் பொன்வரைபோல் மின்னுவனபோன்ற கறைமிடற்றான் பொன்மார்பின் - ஞான்றெங்கும்மிக்கயலே தோன்ற விளங்கி மிளிருமேஅக்கயலே வைத்த அரவு.
சொற்பிரிப்பு
ஞான்ற குழல்சடைகள் பொன்வரைபோல் மின்னுவனபோன்ற கறைமிடற்றான் பொன்மார்பின் – ஞான்றுஎங்கும்மிக்குஅயலே தோன்ற விளங்கி மிளிருமேஅக்குஅயலே வைத்த அரவு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
27
அரவமொன் றாகத்து நீநயந்து பூணேல்பரவித் தொழுதிரந்தோம் பன்னாள் - முரணழியஒன்னாதார் மூவெயிலும் ஓரம்பால் எய்தானேபொன்னாரம் மற்றொன்று பூண்.
சொற்பிரிப்பு
அரவம்ஒன்று ஆகத்து நீநயந்து பூணேல்பரவித் தொழுதுஇரந்தோம் பன்னாள் – முரண்அழியஒன்னாதார் மூவெயிலும் ஓர்அம்பால் எய்தானேபொன்ஆரம் மற்றொன்று பூண்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
28
பூணாக வொன்று புனைந்தொன்று பொங்கதளின்நாணாக மேல்மிளிர நன்கமைத்துக் - கோள்நாகம்பொன்முடிமேற் சூடுவது மெல்லாம் பொறியிலியேற்கென்முடிவ தாக இவர்.
சொற்பிரிப்பு
பூணாக ஒன்று புனைந்துஒன்று பொங்குஅதளின்நாணாக மேல்மிளிர நன்குஅமைத்துக் – கோள்நாகம்பொன்முடிமேல் சூடுவதும் எல்லாம் பொறியிலியேற்குஎன்முடிவது ஆக இவர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
29
இவரைப் பொருளுணர மாட்டாதா ரெல்லாம்இவரை இகழ்வதே கண்டீர் -இவர் தமதுபூக்கோல மேனிப் பொடிபூசி என்பணிந்தபேய்க்கோலங் கண்டார் பிறர்.
சொற்பிரிப்பு
இவரைப் பொருள் உணர மாட்டாதார் எல்லாம்இவரை இகழ்வதே கண்டீர் - இவர் தமதுபூக்கோல மேனிப் பொடிபூசி என்புஅணிந்தபேய்க்கோலம் கண்டார் பிறர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
30
பிறரறிய லாகாப் பெருமையருந் தாமேபிறரறியும் பேருணர்வுந் தாமே - பிறருடையஎன்பே அணிந்திரவில் தீயாடும் எம்மானார்வன்பேயும் தாமும் மகிழ்ந்து.
சொற்பிரிப்பு
பிறர்அறியல் ஆகாப் பெருமையரும் தாமேபிறர்அறியும் பேர்உணர்வும் தாமே – பிறருடையஎன்பே அணிந்துஇரவில் தீயாடும் எம்மானார்வன்பேயும் தாமும் மகிழ்ந்து.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
31
மகிழ்தி மடநெஞ்சே மானுடரில் நீயும்திகழ்தி பெருஞ்சேமஞ் சேர்ந்தாய் - இகழாதேயாரென்பே யேனும் அணிந்துழல்வார்க் காட்பட்டபேரன்பே இன்னும் பெருக்கு.
சொற்பிரிப்பு
மகிழ்தி மடநெஞ்சே மானுடரில் நீயும்திகழ்தி பெருஞ்சேமம் சேர்ந்தாய் – இகழாதேயார்என்பே ஏனும் அணிந்துஉழல்வார்க்கு ஆட்பட்டபேரன்பே இன்னும் பெருக்கு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
32
பெருகொளிய செஞ்சடைமேற் பிள்ளைப் பிறையின்ஒருகதிரே போந்தொழுகிற் றொக்கும் - தெரியின்முதற்கண்ணான் முப்புரங்கள் அன்றெரித்தான் மூவாநுதற்கண்ணான் தன்மார்பின் நூல்.
சொற்பிரிப்பு
பெருகொளிய செஞ்சடைமேல் பிள்ளைப் பிறையின்ஒருகதிரே போந்துஒழுகிற்று ஒக்கும் – தெரியின்முதற்கண்ணான் முப்புரங்கள் அன்றுஎரித்தான் மூவாநுதற்கண்ணான் தன்மார்பின் நூல்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
33
நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிகநீல மணிமிடற்றான் நீர்மையே - மேலுவந்ததெக்கோலத் தெவ்வுருவா யெத்தவங்கள் செய்வார்க்கும்அக்கோலத் தவ்வுருவே ஆம்.
சொற்பிரிப்பு
நூல்அறிவு பேசி நுழைவிலாதார் திரிகநீலமணி மிடற்றான் நீர்மையே – மேல்உவந்ததுஎக்கோலத்து எவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும்அக்கோலத்து அவ்வுருவே ஆம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
34
ஆமா றறியாவே வல்வினைகள் அந்தரத்தேநாமாளென் றேத்தார் நகர்மூன்றும் - வேமாறுஒருகணையாற் செற்றானை உள்ளத்தால் உள்ளிஅருகணையா தாரை அடும்.
சொற்பிரிப்பு
ஆமாறு அறியாவே வல்வினைகள் அந்தரத்தேநாம்ஆள்என்று ஏத்தார் நகர்மூன்றும் – வேம்ஆறுஒருகணையால் செற்றானை உள்ளத்தால் உள்ளிஅருகு அணையாதாரை அடும்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
35
அடுங்கண்டாய் வெண்மதியென் றஞ்சி யிருள்போந்திடங்கொண் டிருக்கின்ற தொக்கும் - படங்கொள்அணிமிடற்ற பேழ்வாய் அரவசைத்தான் கோலமணிமிடற்றின் உள்ள மறு.
சொற்பிரிப்பு
அடுங்கண்டாய் வெண்மதிஎன்று அஞ்சி இருள்போந்துஇடங்கொண்டு இருக்கின்றது ஒக்கும் – படங்கொள்அணிமிடற்ற பேழ்வாய் அரவசைத்தான் கோலமணிமிடற்றின் உள்ள மறு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
36
மறுவுடைய கண்டத்தீர் வார்சடைமேல் நாகம்தெறுமென்று தேய்ந்துழலும் ஆஆ - உறுவான்தளரமீ தோடுமேல் தான்அதனை அஞ்சிவளருமோ பிள்ளை மதி.
சொற்பிரிப்பு
மறுவுடைய கண்டத்தீர் வார்சடைமேல் நாகம்தெறுமென்று தேய்ந்துஉழலும் ஆவா – உறுவான்தளரமீது ஓடுமேல் தான்அதனை அஞ்சிவளருமோ பிள்ளை மதி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
37
மதியா அடலவுணர் மாமதில்மூன் றட்டமதியார் வளர்சடையி னானை - மதியாலேஎன்பாக்கை யாலிகழா தேத்துவரேல் இவ்வுலகில்என்பாக்கை யாய்ப்பிறவார் ஈண்டு.
சொற்பிரிப்பு
மதியா அடல்அவுணர் மாமதில்மூன்று அட்டமதிஆர் வளர்சடையினானை – மதியாலேஎன்புஆக்கையால் இகழாது ஏத்துவரேல் இவ்வுலகில்என்புஆக்கையாய்ப் பிறவார் ஈண்டு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
38
ஈண்டொளிசேர் வானத் தெழுமதியை வாளரவம்தீண்டச் சிறுகியதே போலாதே - பூண்டதோர்தாரேறு பாம்புடையான் மார்பில் தழைந்திலங்குகூரேறு காரேனக் கொம்பு.
சொற்பிரிப்பு
ஈண்டொளிசேர் வானத்து எழுமதியை வாள்அரவம்தீண்டச் சிறுகியதே போலாதே – பூண்டதோர்தார்ஏறு பாம்புடையான் மார்பில் தழைத்துஇலங்குகூர்ஏறு கார்ஏனக் கொம்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
39
கொம்பினைஓர் பாகத்துக் கொண்ட குழகன்தன்அம்பவள மேனி அதுமுன்னஞ் - செம்பொன்அணிவரையே போலும் பொடியணிந்தால் வெள்ளிமணிவரையே போலும் மறித்து.
சொற்பிரிப்பு
கொம்பினைஓர் பாகத்துக் கொண்ட குழகன்தன்அம்பவள மேனி அதுமுன்னம் – செம்பொன்அணிவரையே போலும் பொடியணிந்தால் வெள்ளிமணிவரையே போலும் மறித்து.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
40
மறித்து மடநெஞ்சே வாயாலுஞ் சொல்லிக்குறித்துத் தொழுதொண்டர் பாதம் - குறித்தொருவர்கொள்ளாத திங்கள் குறுங்கண்ணி கொண்டார்மாட்டுள்ளாதார் கூட்டம் ஒருவு.
சொற்பிரிப்பு
மறித்து மடநெஞ்சே வாயாலும் சொல்லிக்குறித்துத் தொழுதொண்டர் பாதம் – குறித்துஒருவர்கொள்ளாத திங்கள் குறுங்கண்ணி கொண்டார்மாட்டுஉள்ளாதார் கூட்டம் ஒருவு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
41
ஒருபால் உலகளந்த மாலவனாம் மற்றைஒருபால் உமையவளாம் என்றால் - இருபாலும்நின்னுருவ மாக நிறந்தெரிய மாட்டோமால்நின்னுருவோ மின்னுருவோ நேர்ந்து.
சொற்பிரிப்பு
ஒருபால் உலகளந்த மாலவனாம் மற்றைஒருபால் உமையவளாம் என்றால் – இருபாலும்நின்உருவம் ஆக நிறந்தெரிய மாட்டோமால்நின்உருவோ மின்உருவோ நேர்ந்து.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
42
நேர்ந்தரவங் கொள்ளச் சிறுகிற்றோ நீயதனைஈர்ந்தளவே கொண்டிசைய வைத்தாயோ - பேர்ந்துவளங்குழவித் தாய்வளர மாட்டாதோ என்னோஇளங்குழவித் திங்கள் இது.
சொற்பிரிப்பு
நேர்ந்துஅரவம் கொள்ளச் சிறுகிற்றோ நீஅதனைஈர்ந்தளவே கொண்டுஇசைய வைத்தாயோ – பேர்ந்துவளங்குழவித் தாய் வளர மாட்டாதோ என்னோஇளங்குழவித் திங்கள் இது.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
43
திங்க ளிதுசூடிச் சில்பலிக்கென் றூர்திரியேல்எங்கள் பெருமானே என்றிரந்து - பொங்கொளியவானோர் விலக்காரேல் யாம்விலக்க வல்லமேதானே அறிவான் தனக்கு.
சொற்பிரிப்பு
திங்கள் இதுசூடிச் சில்பலிக்கென்று ஊர்திரியேல்எங்கள் பெருமானே என்றுஇரந்து – பொங்கொளியவானோர் விலக்காரேல் யாம்விலக்க வல்லமேதானே அறிவான் தனக்கு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
44
தனக்கே அடியனாய்த் தன்னடைந்து வாழும்எனக்கே அருளாவா றென்கொல் - மனக்கினியசீராளன் கங்கை மணவாளன் செம்மேனிப்பேராளன் வானோர் பிரான்.
சொற்பிரிப்பு
தனக்கே அடியனாய்த் தன்அடைந்து வாழும்எனக்கே அருளாவாறு என்கொல் – மனக்குஇனியசீராளன் கங்கை மணவாளன் செம்மேனிப்பேராளன் வானோர் பிரான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
45
பிரானவனை நோக்கும் பெருநெறியே பேணிப்பிரானவன்தன் பேரருளே வேண்டிப் - பிரானவனைஎங்குற்றான் என்பீர்கள் என்போல்வார் சிந்தையினும்இங்குற்றான் காண்பார்க் கெளிது.
சொற்பிரிப்பு
பிரானவனை நோக்கும் பெருநெறியே பேணிப்பிரானவன்தன் பேரருளே வேண்டிப் – பிரானவனைஎங்குற்றான் என்பீர்கள் என்போல்வார் சிந்தையினும்இங்குற்றான் காண்பார்க்கு எளிது.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
46
எளிய திதுவன்றே ஏழைகாள் யாதும்அளியீர் அறிவிலீர் ஆஆ - ஒளிகொள்மிடற்றெந்தைஅராப் பூண்டுழலும் எம்மானை உள்நினைந்தசிந்தையராய் வாழுந் திறம்.
சொற்பிரிப்பு
எளியது இதுஅன்றே ஏழைகாள் யாதும்அளியீர் அறிவிலீர் ஆவா – ஒளிகொள்மிடற்றுஎந்தைஅராப் பூண்டுஉழலும் எம்மானை உள்நினைந்தசிந்தையராய் வாழுந்திறம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
47
திறத்தான் மடநெஞ்சே சென்றடைவ தல்லால்பெறத்தானும் ஆதியோ பேதாய் - நிறத்தஇருவடிக்கண் ஏழைக் கொருபாகம் ஈந்தான்திருவடிக்கட் சேருந் திரு.
சொற்பிரிப்பு
திறத்தால் மடநெஞ்சே சென்றடைவது அல்லால்பெறத்தானும் ஆதியோ பேதாய் – நிறத்தஇருவடிக்கண் ஏழைக்கு ஒருபாகம் ஈந்தான்திருவடிக்கண் சேரும் திரு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
48
திருமார்பில் ஏனச் செழுமருப்பைப் பார்க்கும்பெருமான் பிறைக்கொழுந்தை நோக்கும் - ஒருநாள்இதுமதியென் றொன்றாக இன்றளவுந் தேராததுமதியொன் றில்லா அரா.
சொற்பிரிப்பு
திருமார்பில் ஏனச் செழுமருப்பைப் பார்க்கும்பெருமான் பிறைக்கொழுந்தை நோக்கும் – ஒருநாள்இதுமதிஎன்று ஒன்றாக இன்றளவும் தேராதுஅதுமதிஒன்று இல்லா அரா.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
49
அராவி வளைத்தனைய அங்குழவித் திங்கள்விராவு கதிர்விரியஓடி - விராவுதலால்பொன்னோடு வெள்ளிப் புரிபுரிந்தாற் போலாவேதன்னோடே யொப்பான் சடை.
சொற்பிரிப்பு
அராவி வளைத்தனைய அங்குழவித் திங்கள்விராவு கதிர் விரிய ஓடி – விராவுதலால்பொன்னோடு வெள்ளிப் புரி புரிந்தால் போலவேதன்னோடே ஒப்பான் சடை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
50
சடைமேல்அக் கொன்றை தருகனிகள் போந்துபுடைமேவித் தாழ்ந்தனவே போலும் - முடிமேல்வலப்பால்அக் கோல மதிவைத்தான்தன் பங்கின்குலப்பாவை நீலக் குழல்.
சொற்பிரிப்பு
சடைமேல் அக்கொன்றை தரு கனிகள் போந்துபுடைமேவித் தாழ்ந்தனவே போலும் – முடிமேல்வலப்பால் அக்கோல மதி வைத்தான் தன்பங்கின்குலப்பாவை நீலக் குழல்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
51
குழலார் சிறுபுறத்துக் கோல்வளையைப் பாகத்தெழிலாக வைத்தேக வேண்டா - கழலார்ப்பப்பேரிரவில் ஈமப் பெருங்காட்டில் பேயோடும்ஆரழல்வாய் நீயாடும் அங்கு.
சொற்பிரிப்பு
குழலார் சிறுபுறத்துக் கோல்வளையைப் பாகத்துஎழிலாக வைத்துஏக வேண்டா – கழல்ஆர்ப்பப்பேர்இரவில் ஈமப் பெருங்காட்டில் பேயோடும்ஆர்அழல்வாய் நீயாடும் அங்கு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
52
அங்கண் முழுமதியஞ் செக்கர் அகல்வானத்தெங்கும் இனிதெழுந்தால் ஒவ்வாதே - செங்கண்திருமாலைப் பங்குடையான் செஞ்சடைமேல் வைத்தசிரமாலை தோன்றுவதோர் சீர்.
சொற்பிரிப்பு
அங்கண் முழுமதியம் செக்கர் அகல்வானத்துஎங்கும் இனிதுஎழுந்தால் ஒவ்வாதே – செங்கண்திருமாலைப் பங்குடையான் செஞ்சடைமேல் வைத்தசிரமாலை தோன்றுவதோர் சீர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
53
சீரார்ந்த கொன்றை மலர்தழைப்பச் சேணுலவிநீரார்ந்த பேரியாறு நீத்தமாய்ப் - போரார்ந்தநாண்பாம்பு கொண்டசைத்த நம்மீசன் பொன்முடிதான்காண்பார்க்குச் செவ்வேயோர் கார்.
சொற்பிரிப்பு
சீரார்ந்த கொன்றை மலர்தழைப்பச் சேண்உலவிநீரார்ந்த பேரியாறு நீத்தமாய்ப் – போர்ஆர்ந்தநாண்பாம்பு கொண்டுஅசைத்த நம்ஈசன் பொன்முடிதான்காண்பார்க்குச் செவ்வேயோர் கார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
54
காருருவக் கண்டத்தெங் கண்ணுதலே எங்கொளித்தாய்ஓருருவாய் நின்னோ டுழிதருவான் - நீருருவமேகத்தாற்செய்தனைய மேனியான் நின்னுடையபாகத்தான் காணாமே பண்டு.
சொற்பிரிப்பு
கார்உருவக் கண்டத்துஎம் கண்ணுதலே எங்குஒளித்தாய்ஓர்உருவாய் நின்னோடு உழிதருவான் – நீர்உருவமேகத்தால் செய்தனைய மேனியான் நின்னுடையபாகத்தான் காணாமே பண்டு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
55
பண்டமரர் அஞ்சப் படுகடலின் நஞ்சுண்டுகண்டங் கறுத்ததுவு மன்றியே - உண்டுபணியுறுவார் செஞ்சடைமேற் பால்மதியி னுள்ளேமணிமறுவாய்த் தோன்றும் வடு.
சொற்பிரிப்பு
பண்டமரர் அஞ்சப் படுகடலின் நஞ்சுண்டுகண்டம் கறுத்ததும் அன்றியே – உண்டுபணியுறுவார் செஞ்சடைமேல் பால்மதியின் உள்ளேமணிமறுவாய்த் தோன்றும் வடு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
56
வடுவன் றெனக்கருதி நீமதித்தி யாயின்சுடுவெண் பொடிநிறத்தாய் சொல்லாய் - படுவெண்புலாற்றலையின் உள்ளூண் புறம்பேசக் கேட்டோம்நிலாத்தலையிற் சூடுவாய் நீ.
சொற்பிரிப்பு
வடுவன்று எனக்கருதி நீ மதித்தியாயின்சுடுவெண்பொடி நிறத்தாய் சொல்லாய் – படுவெண்புலால் தலையின் உள்ஊண் புறம்பேசக் கேட்டோம்நிலாத்தலையில் சூடுவாய் நீ.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
57
நீயுலகம் எல்லாம் இரப்பினும் நின்னுடையதீய அரவொழியச் செல்கண்டாய் - தூயமடவரலார் வந்து பலியிடார் அஞ்சிவிடஅரவம் மேலாட மிக்கு.
சொற்பிரிப்பு
நீஉலகம் எல்லாம் இரப்பினும் நின்னுடையதீய அரவுஒழியச் செல்கண்டாய் – தூயமடவரலார் வந்து பலியிடார் அஞ்சிவிடஅரவம் மேலாட மிக்கு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
58
மிக்க முழங்கெரியும் வீங்கிய பொங்கிருளும்ஒக்க வுடனிருந்தால் ஒவ்வாதே - செக்கர்போல்ஆகத்தான் செஞ்சடையும் ஆங்கவன்தன் பொன்னுருவில்பாகத்தாள் பூங்குழலும் பண்பு.
சொற்பிரிப்பு
மிக்க முழங்கெரியும் வீங்கிய பொங்குஇருளும்ஒக்க உடன்இருந்தால் ஒவ்வாதே – செக்கர்போல்ஆகத்தான் செஞ்சடையும் ஆங்கவன்தன் பொன்உருவில்பாகத்தாள் பூங்குழலும் பண்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
59
பண்புணர மாட்டேன்நான் நீயே பணித்துக்காண்கண்புணரும் நெற்றிக் கறைக்கண்டா - பெண்புணரும்அவ்வுருவோ மாலுருவோ ஆனேற்றாய் நீறணிவதெவ்வுருவோ நின்னுருவ மேல்.
சொற்பிரிப்பு
பண்புணர மாட்டேன்நான் நீயே பணித்துக்காண்கண்புணரும் நெற்றிக் கறைக்கண்டா – பெண்புணரும்அவ்உருவோ மால்உருவோ ஆன்ஏற்றாய் நீறுஅணிவதுஎவ்உருவோ நின்உருவம் மேல்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
60
மேலாய மேகங்கள் கூடியோர் பொன்விலங்கல்போலாம் ஒளிபுதைத்தால் ஒவ்வாதே - மாலாயகைம்மா மதக்களிற்றுக் காருரிவை போர்த்தபோதம்மான் திருமேனி அன்று.
சொற்பிரிப்பு
மேலாய மேகங்கள் கூடியோர் பொன்விலங்கல்போலாம் ஒளிபுதைத்தால் ஒவ்வாதே – மாலாயகைம்மா மதக்களிற்றுக் கார்உரிவை போர்த்தபோதுஅம்மான் திருமேனி அன்று.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
61
அன்றுந் திருவுருவங் காணாதே ஆட்பட்டேன்இன்றுந் திருவுருவங் காண்கிலேன் - என்றுந்தான்எவ்வுருவோன் உம்பிரான் என்பார்கட் கென்னுரைக்கேன்எவ்வுருவோ நின்னுருவம் ஏது.
சொற்பிரிப்பு
அன்றும் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன்இன்றும் திருவுருவம் காண்கிலேன் – என்றும்தான்எவ்உருவோன் நும்பிரான் என்பார்கட்கு என்உரைக்கேன்எவ்வுருவோ நின்உருவம் ஏது.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
62
ஏதொக்கும் ஏதொவ்வா தேதாகும் ஏதாகாதேதொக்கும் என்பதனை யாரறிவார் - பூதப்பால்வில்வேட னாகி விசயனோ டேற்றநாள்வல்வேட னான வடிவு.
சொற்பிரிப்பு
ஏதுஒக்கும் ஏதுஒவ்வாது ஏதுஆகும் ஏதுஆகாதுஏதுஒக்கும் என்பதனை யார்அறிவார் – பூதப்பால்வில்வேடன் ஆகி விசயனோடு ஏற்றநாள்வல்வேடன் ஆன வடிவு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
63
வடிவுடைய செங்கதிர்க்கு மாறாய்ப் பகலேநெடிதுலவி நின்றெறிக்குங் கொல்லோ - கடியுலவுசொன்முடிவொன் றில்லாத சோதியாய் சொல்லாயால்நின்முடிமேல் திங்கள் நிலா.
சொற்பிரிப்பு
வடிவுடைய செங்கதிர்க்கு மாறாய்ப் பகலேநெடிதுஉலவி நின்றுஎறிக்கும் கொல்லோ – கடிஉலவுசொல்முடிவொன்று இல்லாத சோதியாய் சொல்லாயால்நின்முடிமேல் திங்கள் நிலா.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
64
நிலாஇலங்கு வெண்மதியை நேடிக்கொள் வான்போல்உலாவி உழிதருமா கொல்லோ - நிலாஇருந்தசெக்கரவ் வானமே ஒக்குந் திருமுடிக்கேபுக்கரவங் காலையே போன்று.
சொற்பிரிப்பு
நிலாஇலங்கு வெண்மதியை நேடிக்கொள்வான் போல்உலாவி உழிதருமா கொல்லோ – நிலாஇருந்தசெக்கர் அவ்வானமே ஒக்கும் திருமுடிக்கேபுக்கஅரவம் காலையே போன்று.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
65
காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு - மாலையின்தாங்குருவே போலுஞ் சடைக்கற்றை மற்றவற்குவீங்கிருளே போலும் மிடறு.
சொற்பிரிப்பு
காலையே போன்றுஇலங்கும் மேனி கடும்பகலின்வேலையே போன்றுஇலங்கும் வெண்ணீறு – மாலையின்தாங்குருவே போலும் சடைக்கற்றை மற்றவர்க்குவீங்கிருளே போலும் மிடறு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
66
மிடற்றில் விடமுடையீர் உம்மிடற்றை நக்கிமிடற்றில் விடங்கொண்ட வாறோ - மிடற்றகத்துமைத்தாம் இருள்போலும் வண்ணங் கரிதாலோபைத்தாடும் நும்மார்பிற் பாம்பு.
சொற்பிரிப்பு
மிடற்றில் விடம் உடையீர் உம்மிடற்றை நக்கிமிடற்றில் விடம் கொண்டவாறோ – மிடற்றுஅகத்துமைத்தாம் இருள்போலும் வண்ணம் கரிதாலோபைத்தாடும் நும்மார்பில் பாம்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
67
பாம்பும் மதியும் மடமானும் பாய்புலியுந்தாம்பயின்று தாழருவி தூங்குதலால் - ஆம்பொன்உருவடிவில் ஓங்கொளிசேர் கண்ணுதலான் கோலத்திருவடியின் மேய சிலம்பு.
சொற்பிரிப்பு
பாம்பும் மதியும் மடமானும் பாய்புலியும்தாம்பயின்று தாழ்அருவி தூங்குதலால் – ஆம்பொன்உருவடிவில் ஓங்கொளிசேர் கண்ணுதலான் கோலத்திருவடியின் மேய சிலம்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
68
சிலம்படியாள் ஊடலைத் தான்தவிர்ப்பான் வேண்டிச்சிலம்படிமேற் செவ்வரத்தஞ் சேர்த்தி - நலம்பெற்றெதிராய செக்கரினும் இக்கோலஞ் செய்தான்முதிரா மதியான் முடி.
சொற்பிரிப்பு
சிலம்படியாள் ஊடலைத் தான்தவிர்ப்பான் வேண்டிச்சிலம்படிமேல் செவ்வரத்தம் சேர்த்தி – நலம்பெற்றுஎதிராய செக்கரினும் இக்கோலம் செய்தான்முதிரா மதியான் முடி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
69
முடிமேற் கொடுமதியான் முக்கணான் நல்லஅடிமேற் கொடுமதியோங் கூற்றைப் - படிமேற்குனியவல மாம்அடிமை கொண்டாடப் பெற்றோம்இனிஅவலம் உண்டோ எமக்கு.
சொற்பிரிப்பு
முடிமேல் கொடுமதியான் முக்கணான் நல்லஅடிமேல் கொடுமதியோம் கூற்றைப் – படிமேல்குனியவலம்ஆம் அடிமை கொண்டாடப் பெற்றோம்இனிஅவலம் உண்டோ எமக்கு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
70
எமக்கிதுவோ பேராசை யென்றுந் தவிராதெமக்கொருநாள் காட்டுதியோ எந்தாய் - அமைக்கவேபோந்தெரிபாய்ந் தன்ன புரிசடையாய் பொங்கிரவில்ஏந்தெரிபாய்ந் தாடும் இடம்.
சொற்பிரிப்பு
எமக்குஇதுவோ பேராசை என்றும் தவிராதுஎமக்குஒருநாள் காட்டுதியோ எந்தாய் – அமைக்கவேபோந்துஎரிபாய்ந்து அன்ன புரிசடையாய் பொங்குஇரவில்ஏந்துஎரிபாய்ந்து ஆடும் இடம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
71
இடப்பால வானத் தெழுமதியை நீயோர்மடப்பாவை தன்னருகே வைத்தால் - இடப் பாகங்கொண்டாள் மலைப்பாவை கூறொன்றுங் கண்டிலங்காண்கண்டாயே முக்கண்ணாய் கண்.
சொற்பிரிப்பு
இடப்பால வானத்து எழுமதியை நீஓர்மடப்பாவை தன்னருகே வைத்தால் – இடப் பாகம்கொண்டாள் மலைப்பாவை கூறுஒன்றும் கண்டிலம்காண்கண்டாயே முக்கண்ணாய் கண்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
72
கண்டெந்தை என்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல்அண்டம் பெறினும் அதுவேண்டேன் - துண்டஞ்சேர்விண்ணாளுந் திங்களாய் மிக்குலகம் ஏழினுக்கும்கண்ணாளா ஈதென் கருத்து.
சொற்பிரிப்பு
கண்டுஎந்தை என்றுஇறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல்அண்டம் பெறினும் அதுவேண்டேன் – துண்டம்சேர்விண்ணாளும் திங்களாய் மிக்குஉலகம் ஏழினுக்கும்கண்ணாளா ஈதுஎன் கருத்து.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
73
கருத்தினால் நீகருதிற் றெல்லாம் உடனேதிருத்தலாஞ் சிக்கென நான்சொன்னேன் - பருத்தரங்கவெள்ளநீ ரேற்றான் அடிக்கமலம் நீவிரும்பிஉள்ளமே எப்போதும் ஓது.
சொற்பிரிப்பு
கருத்தினால் நீகருதிற்று எல்லாம் உடனேதிருத்தலாம் சிக்கென நான்சொன்னேன் – பருத்தரங்கவெள்ளநீர் ஏற்றான் அடிக்கமலம் நீவிரும்பிஉள்ளமே எப்போதும் ஓது.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
74
ஓத நெடுங்கடல்கள் எத்தனையும் உய்த்தட்டஏது நிறைந்தில்லை என்பரால் - பேதையர்கள்எண்ணா திடும்பலியால் என்னோ நிறைந்தவாகண்ணார் கபாலக் கலம்.
சொற்பிரிப்பு
ஓத நெடுங்கடல்கள் எத்தனையும் உய்த்துஅட்டஏதும் நிறைந்தில்லை என்பரால் – பேதையர்கள்எண்ணாது இடும்பலியால் என்னோ நிறைந்தவாகண்ணார் கபாலக் கலம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
75
கலங்கு புனல்கங்கை ஊடால லாலும்இலங்கு மதிஇயங்க லாலும் - நலங்கொள்பரிசுடையான் நீண்முடிமேற் பாம்பியங்க லாலும்விரிசடையாங் காணில் விசும்பு.
சொற்பிரிப்பு
கலங்கு புனல்கங்கை ஊடுஆடலாலும்இலங்கு மதி இயங்கலாலும் – நலங்கொள்பரிசுடையான் நீள்முடிமேல் பாம்புஇயங்கலாலும்விரிசடையாம் காணில் விசும்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
76
விசும்பில் விதியுடைய விண்ணோர் பணிந்துபசும்பொன் மணிமகுடந் தேய்ப்ப - முசிந்தெங்கும்எந்தாய் தழும்பேறி யேபாவம் பொல்லாவாம்அந்தா மரைபோல் அடி.
சொற்பிரிப்பு
விசும்பில் விதியுடைய விண்ணோர் பணிந்துபசும்பொன் மணிமகுடம் தேய்ப்ப – முசிந்துஎங்கும்எந்தாய் தழும்பேறியே பாவம் பொல்லாவாம்அந்தாமரை போல் அடி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
77
அடிபேரிற் பாதாளம் பேரும் அடிகள்முடிபேரின் மாமுகடு பேரும் - கடகம்மறிந்தாடு கைபேரின் வான்திசைகள் பேரும்அறிந்தாடும் ஆற்றா தரங்கு.
சொற்பிரிப்பு
அடிபேரில் பாதாளம் பேரும் அடிகள்முடிபேரின் மாமுகடு பேரும் – கடகம்மறிந்தாடு கைபேரில் வான்திசைகள் பேரும்அறிந்தாடும் ஆற்றாது அரங்கு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
78
அரங்கமாய்ப் பேய்க்காட்டில் ஆடுவான் வாளாஇரங்குமோ எவ்வுயிர்க்கும் ஏழாய் - இரங்குமேல்என்னாக வையான்தான் எவ்வுலகம் ஈந்தளியான்பன்னாள் இரந்தாற் பணிந்து.
சொற்பிரிப்பு
அரங்கமாப் பேய்க்காட்டில் ஆடுவான் வாளாஇரங்குமோ எவ்உயிர்க்கும் ஏழாய் – இரங்குமேல்என்னாக வையான்தான் எவ்உலகம் ஈந்துஅளியான்பன்னாள் இரந்தால் பணிந்து.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
79
பணிந்தும் படர்சடையான் பாதங்கள் போதால்அணிந்தும் அணிந்தவரை ஏத்தத் - துணிந்தென்றும்எந்தையார்க் காட்செய்யப் பெற்ற இதுகொலோசிந்தையார்க் குள்ள செருக்கு.
சொற்பிரிப்பு
பணிந்தும் படர்சடையான் பாதங்கள் போதால்அணிந்தும் அணிந்தவரை ஏத்தத் – துணிந்துஎன்றும்எந்தையார்க்கு ஆட்செய்யப் பெற்ற இதுகொலோசிந்தையார்க்கு உள்ள செருக்கு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
80
செருக்கினால் வெற்பெடுத்த எத்தனையோ திண்டோள்அரக்கனையும் முன்னின் றடர்த்த - திருத்தக்கமாலயனுங் காணா தரற்றி மகிழ்ந்தேத்தக்காலனையும் வென்றுதைத்த கால்.
சொற்பிரிப்பு
செருக்கினால் வெற்புஎடுத்த எத்தனையோ திண்தோள்அரக்கனையும் முன்நின்று அடர்த்த – திருத்தக்கமால்அயனும் காணாது அரற்றி மகிழ்ந்துஏத்தக்காலனையும் வென்றுஉதைத்த கால்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
81
காலனையும் வென்றோம் கடுநரகம் கைகழன்றோம்மேலை இருவினையும் வேரறுத்தோம் - கோலஅரணார் அவிந்தழிய வெந்தீயம் பெய்தான்சரணார விந்தங்கள் சார்ந்து.
சொற்பிரிப்பு
காலனையும் வென்றோம் கடுநரகம் கைகழன்றோம்மேலை இருவினையும் வேர்அறுத்தோம் – கோலஅரணார் அவிந்துஅழிய வெந்தீஅம்பு எய்தான்சரண அரவிந்தங்கள் சார்ந்து.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
82
சார்ந்தார்க்குப் பொற்கொழுந்தே ஒத்திலங்கிச் சாராதுபேர்ந்தார்க்குத் தீக்கொடியின் பெற்றியதாம் - தேர்ந்துணரில்தாழ்சுடரோன் செங்கதிருஞ் சாயுந் தழல்வண்ணன்வீழ்சடையே என்றுரைக்கும் மின்.
சொற்பிரிப்பு
சார்ந்தார்க்குப் பொற்கொழுந்தே ஒத்துலங்கிச் சாராதுபேர்ந்தார்க்குத் தீக்கொடியின் பெற்றியதாம் – தேர்ந்துஉணரில்தாழ்சுடரோன் செங்கதிரும் சாயும் தழல்வண்ணன்வீழ்சடையே என்றுஉரைக்கும் மின்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
83
மின்போலும் செஞ்சடையான் மாலோடும் ஈண்டிசைந்தால்என்போலுங் காண்பார்கட் கென்றிரேல் - தன்போலும்பொற்குன்றும் நீல மணிக்குன்றும் தாமுடனேநிற்கின்ற போலும் நெடிது.
சொற்பிரிப்பு
மின்போலும் செஞ்சடையான் மாலோடும் ஈண்டுஇசைந்தால்என்போலும் காண்பார்கட்கு என்றிரேல் – தன்போலும்பொற்குன்றும் நீல மணிக்குன்றும் தாம்உடனேநிற்கின்ற போலும் நெடிது.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
84
நெடிதாய பொங்கெரியுந் தண்மதியும் நேரேகடிதாங் கடுஞ்சுடரும் போலும் - கொடிதாகவிண்டார்கள் மும்மதிலும் வெந்தீ யினில்அழியக்கண்டாலும் முக்கணான் கண்.
சொற்பிரிப்பு
நெடிதாய பொங்குஎரியும் தண்மதியும் நேரேகடிதாம் கடுஞ்சுடரும் போலும் – கொடிதாகவிண்டார்கள் மும்மதிலும் வெந்தீயினில் அழியக்கண்டாலும் முக்கணான் கண்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
85
கண்ணாரக் கண்டும்என் கையாரக் கூப்பியும்எண்ணார எண்ணத்தால் எண்ணியும் - விண்ணோன்எரியாடி என்றென்றும் இன்புறுவன் கொல்லோபெரியானைக் காணப் பெறின்.
சொற்பிரிப்பு
கண்ணாரக் கண்டும்என் கையாரக் கூப்பியும்எண்ணார எண்ணத்தால் எண்ணியும் – விண்ணோன்எரியாடி என்றென்றும் இன்புறுவன் கொல்லோபெரியானைக் காணப் பெறின்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
86
பெறினும் பிறிதியாதும் வேண்டேம் நமக்கீதுறினும் உறாதொழியு மேனும் - சிறிதுணர்த்திமற்றொருகண் நெற்றிமேல் வைத்தான்தன் பேயாயநற்கணத்தி லொன்றாய நாம்.
சொற்பிரிப்பு
பெறினும் பிறிதியாதும் வேண்டேம் எமக்குஈதுஉறினும் உறாதுஒழியும் ஏனும் – சிறிதுஉணர்த்திமற்றொருகண் நெற்றிமேல் வைத்தான்தன் பேய்ஆயநற்கணத்தில் ஒன்றாய நாம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
87
நாமாலை சூடியும் நம்ஈசன் பொன்னடிக்கேபூமாலை கொண்டு புனைந்தன்பாய் - நாமோர்அறிவினையே பற்றினால் எற்றே தடுமேஎறிவினையே என்னும் இருள்.
சொற்பிரிப்பு
நாமாலை சூடியும் நம்ஈசன் பொன்அடிக்கேபூமாலை கொண்டு புனைந்துஅன்பாய் – நாம்ஓர்அறிவினையே பற்றினால் எற்றுஏது அடுமேஎறிவினையே என்னும் இருள்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
88
இருளின் உருவென்கோ மாமேகம் என்கோமருளின் மணிநீலம் என்கோ - அருளெமக்குநன்றுடையாய் செஞ்சடைமேல் நக்கிலங்கு வெண்மதியம்ஒன்றுடையாய் கண்டத் தொளி.
சொற்பிரிப்பு
இருளின் உருஎன்கோ மாமேகம் என்கோமருளின் மணிநீலம் என்கோ – அருள்எமக்குநன்றுடையாய் செஞ்சடைமேல் நக்கிலங்கு வெண்மதியம்ஒன்றுடையாய் கண்டத்து ஒளி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
89
ஒளிவி லிவன்மதனை ஒண்பொடியா நோக்கித்தெளிவுள்ள சிந்தையினிற் சேர்வாய் - ஒளிநஞ்சம்உண்டவா யஃதிருப்ப உன்னுடைய கண்டமிருள்கொண்டவா றென்இதனைக் கூறு.
சொற்பிரிப்பு
ஒளிவிலி வன்மதனை ஒண்பொடியா நோக்கித்தெளிவுள்ள சிந்தனையில் சேர்வாய் – ஒளிநஞ்சம்உண்டவாய் அஃதிருப்ப உன்னுடைய கண்டம்இருள்கொண்டவாறு என் இதனைக் கூறு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
90
கூறெமக்கீ தெந்தாய் குளிர்சடையை மீதழித் திட்டேற மிகப்பெருகின் என்செய்தி - சீறிவிழித்தூரும் வாளரவும் வெண்மதியும் ஈர்த்துத்தெழித்தோடுங் கங்கைத் திரை.
சொற்பிரிப்பு
கூறுஎமக்குஈது எந்தாய் குளிர்சடையைமீதுஅழித்திட்டுஏற மிகப்பெருகின் என்செய்தி – சீறிவிழித்துஊரும் வாள்அரவும் வெண்மதியும் ஈர்த்துத்தெழித்துஓடும் கங்கைத் திரை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
91
திரைமருவு செஞ்சடையான் சேவடிக்கே ஆளாய்உரைமருவி யாமுணர்ந்தோங் கண்டீர் - தெரிமினோஇம்மைக்கும் அம்மைக்கும் எல்லாம் அமைந்தோமேஎம்மைப் புறம்உரைப்ப தென்.
சொற்பிரிப்பு
திரைமருவு செஞ்சடையான் சேவடிக்கே ஆளாய்உரைமருவி யாம் உணர்ந்தோம் கண்டீர் – தெரிமினோஇம்மைக்கும் அம்மைக்கும் எல்லாம் அமைந்தோமேஎம்மைப் புறம் உரைப்பது என்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
92
என்னை உடையானும் ஏகமாய் நின்றானுந்தன்னை அறியாத தன்மையனும் - பொன்னைச்சுருளாகச் செய்தனைய தூச்சடையான் வானோர்க்கருளாக வைத்த அவன்.
சொற்பிரிப்பு
என்னை உடையானும் ஏகமாய் நின்றானும்தன்னை அறியாத தன்மையனும் – பொன்னைச்சுருளாகச் செய்தனைய தூச்சடையோன் வானோர்க்குஅருளாக வைத்த அவன்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
93
அவன்கண்டாய் வானோர் பிரானாவான் என்றும்அவன்கண்டாய் அம்பவள வண்ணன் - அவன் கண்டாய்மைத்தமர்ந்த கண்டத்தான் மற்றவன்பால் நன்னெஞ்சேமெய்த்தமர்ந்தன் பாய்நீ விரும்பு.
சொற்பிரிப்பு
அவன்கண்டாய் வானோர் பிரான்ஆவான் என்றும்அவன்கண்டாய் அம்பவள வண்ணன் – அவன் கண்டாய்மைத்தமர்ந்த கண்டத்தான் மற்றவன்பால் நன்னெஞ்சேமெய்த்தமர்ந்து அன்பாய் நீ விரும்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
94
விருப்பினால் நீபிரிய கில்லாயோ வேறாஇருப்பிடமற் றில்லையோ என்னோ - பொருப்பன்மகள்மஞ்சுபோல் மால்விடையாய் நிற்பிரிந்து வேறிருக்கஅஞ்சுமோ சொல்லாய் அவள்.
சொற்பிரிப்பு
விருப்பினால் நீபிரிய கில்லாயோ வேறாஇருப்பிடம்மற்று இல்லையோ என்னோ – பொருப்பன்மகள்மஞ்சுபோல் மால்விடையாய் நிற்பிரிந்து வேறிருக்கஅஞ்சுமோ சொல்லாய் அவள்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
95
அவளோர் குலமங்கை பாகத் தகலாள்இவளோர் சலமகளும் ஈதே - தவளநீறென்பணிவீர் என்றும் பிரிந்தறியீர் ஈங்கிவருள்அன்பணியார் சொல்லுமின்இங் கார்.
சொற்பிரிப்பு
அவளோர் குலமங்கை பாகத்து அகலாள்இவளோர் சலமகளும் ஈதே – தவளநீறுஎன்புஅணிவீர் என்றும் பிரிந்தறியீர் ஈங்கிவருள்அன்புஅணியார் சொல்லுமின்இங்கு ஆர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
96
ஆர்வல்லார் காண அரனவனை அன்பென்னும்போர்வை அதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்லதாயத்தால் நாமுந் தனிநெஞ்சி னுள்ளடைத்துமாயத்தால் வைத்தோம் மறைத்து.
சொற்பிரிப்பு
ஆர்வல்லார் காண அரன் அவனை அன்புஎன்னும்போர்வை அதனாலே போர்த்தமைத்துச் – சீர்வல்லதாயத்தால் நாமும் தனிநெஞ்சின் உள்ளடைத்துமாயத்தால் வைத்தோம் மறைத்து.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
97
மறைத்துலகம் ஏழினிலும் வைத்தாயோ அன்றேல்உறைப்போடும் உன்கைக் கொண்டாயோ - நிறைத்திட்டுளைந்தெழுந்து நீயெரிப்ப மூவுலகும் உள்புக்களைந்தெழுந்த செந்தீ யழல்.
சொற்பிரிப்பு
மறைத்துஉலகம் ஏழினிலும் வைத்தாயோ அன்றேல்உறைப்போடும் உன்கைக் கொண்டாயோ – நிறைத்திட்டுஉளைந்துஎழுந்து நீஎரிப்ப மூவுலகும் உள்புக்குஅளைந்துஎழுந்த செந்தீ அழல்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
98
அழலாட அங்கை சிவந்ததோ அங்கைஅழகால் அழல்சிவந்த வாறோ - கழலாடப்பேயோடு கானிற் பிறங்க அனலேந்தித்தீயாடு வாயிதனைக் செப்பு.
சொற்பிரிப்பு
அழல்ஆட அங்கை சிவந்ததோ அங்கைஅழகால் அழல்சிவந்தவாறோ – கழல்ஆடப்பேயாடு கானில் பிறங்க அனல்ஏந்தித்தீயாடுவாய் இதனைக் செப்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
99
செப்பேந் திளமுலையாள் காணவோ தீப்படுகாட்டப்பேய்க் கணமவைதாங் காணவோ - செப்பெனக்கொன்றாகத்தான் அங்காந் தனலுமிழும் ஐவாயநாகத்தா யாடுன் நடம்.
சொற்பிரிப்பு
செப்பேந்து இளமுலையாள் காணவோ தீப்படுகாட்டுஅப்பேய்க் கணம்ஆவைதாம் காணவோ – செப்புஎனக்கொன்றுஆகத்தான் அங்காந்து அனல்உமிழும் ஐவாயநாகத்தாய் ஆடு உன் நடம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
100
நடக்கிற் படிநடுங்கும் நோக்கிற் திசைவேம்இடிக்கின் உலகனைத்தும் ஏங்கும் - அடுக்கற்பொருமேறோ ஆனேறோ பொன்னொப்பாய் நின்னேறுருமேறோ ஒன்றா உரை.
சொற்பிரிப்பு
நடக்கில் படி நடுங்கும் நோக்கில் திசைவேம்இடிக்கின் உலகனைத்தும் ஏங்கும் – அடுக்கல்பொரும்ஏறோ ஆன்ஏறோ பொன்ஒப்பாய் நின்ஏறுஉரும்ஏறோ ஒன்றா உரை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
101
உரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக்கரைவினாற் காரைக்காற் பேய்சொல் - பரவுவார்ஆராத அன்பினோ டண்ணலைச்சென் றேத்துவார்பேராத காதல் பிறந்து.
சொற்பிரிப்பு
உரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக்கரைவினால் காரைக்கால் பேய்சொல் – பரவுவார்ஆராத அன்பினோடு அண்ணலைச்சென்று ஏத்துவார்பேராத காதல் பிறந்து.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.