1
கிளர்ந்துந்து வெந்துயர் வந்தடும் போதஞ்சி நெஞ்சம்என்பாய்த்தளர்ந்திங் கிருத்தல் தவிர்திகண் டாய்தள ராதுவந்திவளர்ந்துந்து கங்கையும் வானத் திடைவளர் கோட்டுவெள்ளைஇளந்திங் களும்எருக் கும்மிருக் குஞ்சென்னி ஈசனுக்கே.
சொற்பிரிப்பு
கிளர்ந்துஉந்து வெந்துயர் வந்து அடும்போது அஞ்சி நெஞ்சம் என்பாய்த்தளர்ந்திங்கு இருத்தல் தவிர்தி கண்டாய்; தளராது வந்தி;வளர்ந்துஉந்து கங்கையும் வானத்து இடைவளர் கோட்டுவெள்ளைஇளந்திங்களும் எருக்கும் இருக்கும் சென்னி ஈசனுக்கே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.