திருமுறை 11 · 11.003 · 11

எட்டி இலவம்

அருளியவர்
காரைக்கால் அம்மையார் (பேயார்)
பண்
இந்தளம்
தலம்
ஆலங்காடு
நாடு
தொண்டைநாடு

1

எட்டி இலவம் ஈகை சூரை காரை படர்ந்தெங்கும்சுட்ட சுடலை சூழ்ந்த கள்ளி சோர்ந்த குடர்கெளவப்பட்ட பிணங்கள் பரந்த காட்டிற் பறைபோல் விழிகட்பேய்கொட்ட முழவங் கூளி பாடக் குழகன் ஆடுமே.
சொற்பிரிப்பு
எட்டி இலவம் ஈகை சூரை காரை படர்ந்து எங்கும்சுட்ட சுடலை சூழ்ந்த கள்ளி சோர்ந்த குடர் கெளவப்பட்ட பிணங்கள் பரந்த காட்டில் பறைபோல் விழிகண்பேய்கொட்ட முழவம் கூளி பாடக் குழகன் ஆடுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

நிணந்தான் உருகி நிலந்தான் நனைப்ப நெடும்பற் குழிகட்பேய்துணங்கை யெறிந்து சூழும்நோக்கிச் சுடலை நவிழ்த்தெங்கும்கணங்கள் கூடிப் பிணங்கள் மாந்திக் களித்த மனத்தவாய்அணங்கு காட்டில் அனல்கை யேந்தி அழகன் ஆடுமே.
சொற்பிரிப்பு
நிணந்தான் உருகி நிலந்தான் நனைப்ப நெடும்பல் குழிகண்பேய்துணங்கை எறிந்து சூழும் நோக்கிச் சுடலை நவிழ்த்துஎங்கும்கணங்கள் கூடிப் பிணங்கள் மாந்திக் களித்த மனத்தவாய்அணங்கு காட்டில் அனல்கை ஏந்தி அழகன் ஆடுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

புட்கள் பொதுத்த புலால்வெண் தலையைப் புறமே நரிகவ்வஅட்கென் றழைப்ப ஆந்தை வீச அருகே சிறுகூகைஉட்க விழிக்க ஊமன் வெருட்ட ஓரி கதித்தெங்கும்பிட்க நட்டம் பேணும் இறைவன் பெயரும் பெருங்காடே.
சொற்பிரிப்பு
புட்கள் பொதுத்த புலால் வெண்தலையைப் புறமே நரி கவ்வஅட்கென்று அழைப்ப ஆந்தை வீச அருகே சிறுகூகைஉட்க விழிக்க ஊமன் வெருட்ட ஓரி கதித்து எங்கும்பிட்க நட்டம் பேணும் இறைவன் பெயரும் பெருங்காடே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

செத்த பிணத்தைத் தெளியா தொருபேய் சென்று விரல்சுட்டிக்கத்தி உறுமிக் கனல்விட் டெறிந்து கடக்கப் பாய்ந்துபோய்ப்பத்தல் வயிற்றைப் பதைக்க மோதிப் பலபேய் இரிந்தோடப்பித்த வேடங் கொண்டு நட்டம் பெருமான் ஆடுமே.
சொற்பிரிப்பு
செத்த பிணத்தைத் தெளியாது ஒருபேய் சென்று விரல்சுட்டிக்கத்தி உறுமிக் கனல்விட்டு எறிந்து கடக்கப் பாய்ந்துபோய்ப்பத்தல் வயிற்றைப் பதைக்க மோதிப் பலபேய் இரிந்து ஓடப்பித்த வேடம் கொண்டு நட்டம் பெருமான் ஆடுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

முள்ளி தீந்து முளரி கருகி மூளை சொரிந்துக்குக்கள்ளி வற்றி வெள்ளில் பிறங்கு கடுவெங் காட்டுள்ளேபுள்ளி உழைமான் தோலொன் றுடுத்துப் புலித்தோல் பியற்கிட்டுப்பள்ளி இடமும் அதுவே ஆகப் பரமன் ஆடுமே.
சொற்பிரிப்பு
முள்ளி தீந்து முளரி கருகி மூளை சொரிந்துக்குக்கள்ளி வற்றி வெள்ளில் பிறங்கு கடு வெங்காட்டுள்ளேபுள்ளி உழைமான் தோலொன்று உடுத்துப் புலித்தோல் பியற்கு இட்டுப்பள்ளி இடமும் அதுவே ஆகப் பரமன் ஆடுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

வாளைக் கிளர வளைவாள் எயிற்று வண்ணச் சிறுகூகைமூளைத் தலையும் பிணமும் விழுங்கி முரலும் முதுகாட்டில்தாளிப் பனையின் இலைபோல் மயிர்க்கட் டழல்வாய் அழல்கட்பேய்கூளிக்கணங்கள் குழலோ டியம்பக் குழகன் ஆடுமே.
சொற்பிரிப்பு
வாளைக் கிளர வளைவாள் எயிற்று வண்ணச் சிறுகூகைமூளைத் தலையும் பிணமும் விழுங்கி முரலும் முதுகாட்டில்தாளிப் பனையின் இலைபோல் மயிர்க்கட்டு அழல்வாய் அழல்கண்பேய்கூளிக்கணங்கள் குழலோடு இயம்பக் குழகன் ஆடுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

நொந்திக்கிடந்த சுடலை தடவி நுகரும் புழுக்கின்றிச்சிந்தித் திருந்தங் குறங்குஞ் சிறுபேய் சிரமப் படுகாட்டின்முந்தி அமரர் முழவின் ஓசை முறைமை வழுவாமேஅந்தி நிருத்தம் அனல்கை ஏந்தி அழகன் ஆடுமே.
சொற்பிரிப்பு
நொந்திக்கிடந்த சுடலை தடவி நுகரும் புழுக்கின்றிச்சிந்தித்து இருந்தங்கு உறங்கும் சிறுபேய் சிரமப் படுகாட்டின்முந்தி அமரர் முழவின் ஓசை முறைமை வழுவாமேஅந்தி நிருத்தம் அனல் கை ஏந்தி அழகன் ஆடுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

வேய்கள் ஓங்கி வெண்முத் துதிர வெடிகொள் சுடலையுள்ஓயும் உருவில் உலறு கூந்தல் அலறு பகுவாயபேய்கள் கூடிப் பிணங்கள் மாந்தி அணங்கும் பெருங்காட்டின்மாயன் ஆட மலையான் மகளும் மருண்டு நோக்குமே.
சொற்பிரிப்பு
வேய்கள் ஓங்கி வெண்முத்து அதிர வெடி கொள் சுடலையுள்ஓயும் உருவில் உலறு கூந்தல் அலறு பகுவாயபேய்கள் கூடிப் பிணங்கள் மாந்தி அணங்கும் பெருங்காட்டின்மாயன் ஆட மலையான் மகளும் மருண்டு நோக்குமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

கடுவன் உகளுங் கழைசூழ் பொதும்பிற் கழுகும் பேயுமாய்இடுவெண் டலையும் ஏமப் புகையும் எழுந்த பெருங்காட்டிற்கொடுவெண் மழுவும் பிறையுந் ததும்பக் கொள்ளென் றிசைபாடப்படுவெண் துடியும் பறையுங் கறங்கப் பரமன் ஆடுமே.
சொற்பிரிப்பு
கடுவன் உகளும் கழைசூழ் பொதும்பில் கழுகும் பேயுமாய்இடு வெண்தலையும் ஈமப் புகையும் எழுந்த பெருங்காட்டில்கொடு வெண்மழுவும் பிறையும் ததும்பக் கொள்என்று இசைபாடப்படு வெண்துடியும் பறையும் கறங்கப் பரமன் ஆடுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

குண்டை வயிற்றுக் குறிய சிறிய நெடிய பிறங்கற்பேய்இண்டு படர்ந்த இருள்சூழ் மயானத் தெரிவாய் எயிற்றுப்பேய்கொண்டு குழவி தடவி வெருட்டிக் கொள்ளென் றிசைபாடமிண்டி மிளிர்ந்த சடைகள் தாழ விமலன் ஆடுமே.
சொற்பிரிப்பு
குண்டை வயிற்றுக் குறிய சிறிய நெடிய பிறங்கல்பேய்இண்டு படர்ந்த இருள்சூழ் மயானத்து எரிவாய் எயிற்றுப்பேய்கொண்டு குழவி தடவி வெருட்டிக் கொள்என்று இசைபாடமிண்டி மிளிர்ந்த சடைகள் தாழ விமலன் ஆடுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

சூடும் மதியம் சடைமேல் உடையார் சுழல்வார் திருநட்டம்ஆடும் அரவம் அரையில் ஆர்த்த அடிகள் அருளாலேகாடு மலிந்த கனல்வாய் எயிற்றுக் காரைக் காற்பேய்தன்பாடல் பத்தும் பாடி ஆடப் பாவம் நாசமே.
சொற்பிரிப்பு
சூடும் மதியம் சடைமேல் உடையார் சுழல்வார் திருநட்டம்ஆடும் அரவம் அரையில் ஆர்த்த அடிகள் அருளாலேகாடு மலிந்த கனல்வாய் எயிற்றுக் காரைக்கால் பேய்தன்பாடல் பத்தும் பாடி ஆடப் பாவம் நாசமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.