1
கொங்கை திரங்கி நரம்பெழுந்து குண்டுகண் வெண்பற் குழிவயிற்றுப்பங்கி சிவந்திரு பற்கள்நீண்டு பரடுயர் நீள்கணைக் காலோர்பெண்பேய்தங்கி அலறி உலறுகாட்டில் தாழ்சடை எட்டுத் திசையும்வீசிஅங்கங் குளிர்ந்தனல் ஆடும்எங்கள் அப்பன் இடந்திரு ஆலங்காடே.
சொற்பிரிப்பு
கொங்கை திரங்கி நரம்பெழுந்து குண்டுகண் வெண்பல் குழிவயிற்றுப்பங்கி சிவந்து இருபற்கள் நீண்டு பரடு உயர் நீள்கணைக்கால் ஓர் பெண்பேய்தங்கி அலறி உலறு காட்டில் தாழ்சடை எட்டுத் திசையும் வீசிஅங்கம் குளிர்ந்து அனல் ஆடும் எங்கள் அப்பன் இடம் திருஆலங்காடே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.