1
மதிமலி புரிசை மாடக் கூடற்பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிறகன்னம் பயில்பொழில் ஆல வாயில்மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க் ( 5)கொருமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ்குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்செருமா உகைக்குஞ் சேரலன் காண்கபண்பா லியாழ்பயில் பாண பத்திரன்தன்போல் என்பால் அன்பன் தன்பால் (10)காண்பது கருதிப் போந்தனன்மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே.
சொற்பிரிப்பு
மதி மலி புரிசை மாடக் கூடல்பதி மிசை நிலவு பால் நிற வரிச்சிறகுஅன்னம் பயில் பொழில் ஆலவாயின்மன்னிய சிவன் யான் மொழிதரு மாற்றம் …4பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்குஒருமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ்குரு மா மதி புரை குலவிய குடைக்கீழ்ச்செரு மா உகைக்கும் சேரலன் காண்க …8பண்பால் இயாழ் பயில் பாணபத்திரன்தன்போல் என்பால் அன்பன் தன்பால்காண்பது கருதிப் போந்தனன்மாண்பொருள் கொடுத்து வரவிடுப்பதுவே. …12
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.