திருமுறை 10 · 10.05.11 · 7

ஐந்தாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

மேவிய சற்புத்திர மார்க்க மெய்த்தொழில்தாவிப்ப தாஞ்சக மார்க்கம் சகத்தொழில்ஆவ திரண்டும் அகன்று சகமார்க்கத்தேவியோ டொன்றல் சன்மார்க்கத் தெளிவதே.
சொற்பிரிப்பு

உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மைநேசித்திட் டன்னமும் நீசுத்தி செய்தன்மற்றாசற்ற சற்புத் திரமார்க்க மாகுமே.

3

அறுகாற் பறவை அலர்தேர்ந் துழலும்மறுகா நரையன்னந் தாமரை நீலங்குறுகா நறுமலர் கொய்வன கண்டுஞ்சிறுகால் (1)அறநெறி சேரகி லாரே.(1) அரனெறி
சொற்பிரிப்பு
அறுகாற் பறவை அலர்தேர்ந் துழலும்மறுகா நரையன்னந் தாமரை நீலங்குறுகா நறுமலர் கொய்வன கண்டுஞ்சிறுகால் அறநெறி சேரகி லாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

அருங்கரை யாவது அவ்வடி நீழற்பெருங்கரை யாவது பிஞ்ஞக னாணைவருங்கரை யேகின்ற மன்னுயிர்க் கெல்லாம்ஒருங்கரை யாயுல கேழினொத் தானே.

5

உயர்ந்தும் பணிந்தும் முகந்துந் தழுவிவியந்தும் அரனடிக் கேமுறை செய்மின்பயந்தும் பிறவிப் பயனது வாகும்பயந்து பிரிக்கிலப் பான்மைய னாமே.

6

நின்றுதொழுவன் கிடந்தெம் பிரான்தன்னைஎன்றுந் தொழுவன் எழிற்பரஞ் சோதியைத்துன்று மலர்தூவித் தொழுமின் தொழுந்தோறுஞ்சென்று வெளிப்படுந் தேவர் பிரானே.

7

திருமன்னுஞ் சற்புத் திரமார்க்கச் சரியைஉருமன்னி வாழும் உலகத்தீர்கேண்மின்கருமன்னு பாசங் கைகூம்பத் தொழுதுஇருமன்னு நாடோறும் இன்புற் றிருந்தே.