திருமுறை 10 · 10.05.07 · 10

ஐந்தாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

நெறிவழி யேசென்று நேர்மையுள் ஒன்றித்தறியிருந் தாற்போல் தம்மை யிருத்திச்சொறியினுந் தாக்கினுந் துண்ணென் றுணராக்குறியறி வாளர்க்குக் கூடலு மாமே.
சொற்பிரிப்பு

உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

ஊழிதோ றூழிஉணர்ந்தவர்க் கல்லதுஊழிதோ றூழி உணரவுந் தானொட்டான்ஆழி அமரும் அரியயன் என்றுளார்ஊழி முயன்றும் ஓருச்சியு ளானே.

3

பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோற்சீவனுக் குள்ளே சிவமணம் பூத்ததுஓவியம் போல உணர்ந்தறி வாளர்க்குநாவி யணைந்த நடுதறி யாமே.

4

உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச்சிந்தை யுறவே தெளிந்திருள் நீங்கினால்முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே.

5

எழுத்தோடு பாடலும் எண்ணெண் கலையும்பழித்தலைப் பாசப் பிறவியும் நீங்காவழித்தலைச் சோமனோ டங்கி யருக்கன்வழித்தலைச் செய்யும் வகையுணர்ந் தேனே.

6

விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ ராகும்விரும்பிநின் றேசெயின் மெய்யுரை யாகும்விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ மாகும்விரும்பிநின் றேசெயின் விண்ணவ னாகுமே.

7

பேணிற் பிறவா உலகருள் செய்திடுங்காணில் தனது கலவியு ளேநிற்கும்நாணில் நரக நெறிக்கே வழிசெயும்ஊனிற் சுடுமங்கி யுத்தமன் றானே.

8

ஒத்தசெங் கோலார் உலப்பிலி மாதவர்எத்தனை யாயிரம் வீழ்ந்தனர் எண்ணிலிசித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையாய்அத்த னிவனென்றே அன்புறு வார்களே.

9

யோகிக்கு யோகாதி மூன்றுள கொண்டுற்றோர்ஆகத் தருகிரி யாதி சரியையாந்தாகத்தை விட்ட சரியையொன் றாம்ஒன்றுள்ஆதித்தன் பத்தியுள் அன்புவைத் தேனே.

10

யோகச் சமயமே யோகம் பலவுன்னல்யோக விசேடமே அட்டாங்க யோகமாம்யோகநிர் வாணமே யுற்ற பரோதயம்யோக அபிடேகமே ஒண்சித்தி யுற்றலே.