திருமுறை 10 · 10.05.03 · 11

ஐந்தாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

பொன்னாற் சிவசாத னம்பூதி சாதனம்நன்மார்க்க சாதனம் மாஞான சாதனந்துன்மார்க்க சாதனந் தோன்றாத சாதனஞ்சன்மார்க்க சாதன மாஞ்சுத்த சைவர்க்கே.
சொற்பிரிப்பு

உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

கேடறு ஞானி கிளர்ஞான பூபதிபாடறு வேதாந்த சித்தாந்த பாகத்தின்ஊடுறு ஞானோ தயனுண்மை முத்தியோன்பாடுறு சுத்தசை வப்பத்த நித்தனே.

3

ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழுமோகமில் நாலேழு முப்பேத முற்றுடன்வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்மையொன்றாக முடிந்த வருஞ்சுத்த சைவமே.

4

சுத்தம் அசுத்தந் துரியங்கள் ஓரேழுஞ்சத்தும் அசத்துந் தணந்த பராபரைஉய்த்த பராபரை யுள்ளாம் பராபரைஅத்தன் அருட்சத்தி யாய்எங்கு மாமே.

5

சத்தும் அசத்துந் தணந்தவர் தானாகிச்சித்தும் அசித்துந் தெரியாச் சிவோகமாய்முத்தியுள் ஆனந்த சத்தியுள் மூழ்கினார்சித்தியு மங்கே சிறந்துள தானே.

6

தன்னைப் பரனைச் சதாசிவன் என்கின்றமன்னைப் பதிபசு பாசத்தை மாசற்றமுன்னைப் பழமல முன்கட்டை வீட்டினைஉன்னத் தகுஞ்சுத்த சைவர் உபாயமே.

7

பூரணம் தன்னிலே வைத்தற்ற (1)வப்போதமாரண மந்த மதித்தானந் தத்தோடுநேரென ஈராறு நீதி நெடும் போகங்காரண மாஞ்சுத்த சைவர்க்குக் காட்சியே.(1)வப்போதே
சொற்பிரிப்பு
பூரணம் தன்னிலே வைத்தற்ற வப்போதமாரண மந்த மதித்தானந் தத்தோடுநேரென ஈராறு நீதி நெடும் போகங்காரண மாஞ்சுத்த சைவர்க்குக் காட்சியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

மாறாத ஞான மதிப்பற மாயோகந்தேறாத சிந்தையைத் தேற்றிச் சிவமாக்கிப்பேறான பாவனை பேணி நெறிநிற்றல்கூறாகு ஞானி சரிதை குறிக்கிலே.

9

வேதாந்தங் கண்டோர் பிரமவித் தியாதரர்நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற யோகிகள்வேதாந்த மல்லாத சித்தாந்தங் கண்டுளோர்சாதா ரணமன்ன சைவர் உபாயமே.

10

விண்ணினைச் சென்றணு காவியன் மேகங்கள்கண்ணினைச் சென்றணு காப்பல காட்சிகள்எண்ணினைச் சென்றணு காம லெணப்படும்அண்ணலைச் சென்றணு காபசு பாசமே.

11

ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்றாகநின்று சமய நிராகார நீங்கியேநின்று பராபரை நேயத்தைப் பாதத்தாற்சென்று சிவமாதல் சித்தாந்த சித்தியே.