திருமுறை 10 · 10.05.04 · 5

ஐந்தாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

வேடம் கடந்து விகிர்தன்தன் பால்மேவிஆடம் பரமின்றி ஆசாபா சஞ்செற்றுப்பாடொன்று பாசம் பசுத்துவம் பாழ்படச்சாடும் சிவபோ தகர்சுத்த சைவரே.
சொற்பிரிப்பு

உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

உடலான ஐந்தையும் ஓராறும் ஐந்துமடலான மாமாயை மற்றுள்ள நீவப்படலான கேவல பாசந் துடைத்துத்திடமாய்த் தனையுறல் சித்தாந்த மார்க்கமே.

3

சுத்தச் சிவனுரை தானத்தில் தோயாமல்முத்தர் பதப்பொருள் முத்திவித் தாமூலம்அத்தகை யான்மா அரனை அடைந்தற்றாற்சுத்த சிவமாவ ரேசுத்த சைவரே.

4

நானென்றும் தானென்றும் நாடிநான் சாரவேதானென்று நானென் றிரண்டிலாத் தற்பதந்தானென்று நானென்ற தத்துவ நல்கலால்தானென்று நானென்றுஞ் சாற்றகில் லேனே.

5

சாற்றரி தாகிய தத்துவஞ் சித்தித்தால்ஆற்றரி தாகிய ஐந்தும் அடங்கிடும்மேற்றிகழ் ஞானம் விளக்கொளி யாய்நிற்கும்பாற்பர சாயுச்சிய மாகும் பதியே.