திருமுறை 10 · 10.04.11 · 9

நான்காம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

சாம்பவி மண்டலச் சக்கரஞ் சொல்லிடில்ஆம்பதம் எட்டாக விட்டிடின் மேல்தாங்காண்பதந் தத்துவ நாலுள் நயனமும்நாம்பதங் கண்டபின் நாடறிந் தோமே.
சொற்பிரிப்பு

உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

நாடறி மண்டலம் நல்லவிக் குண்டத்துக்கோடற வீதியுங் கொணர்ந்துள் இரண்டழிபாடறி பத்துடன் ஆறு நடுவீதிஎடற நாலைந் திடவகை யாமே.

3

நாலைந் திடவகை யுள்ளதோர் மண்டலம்நாலுநல் வீதியுள் நல்ல இலிங்கமாய்நாலுநற் கோணமும் நந்நா லிலிங்கமாய்நாலுநற் பூநடு நண்ணலவ் வாறே.

4

ஆறிரு பத்துநா லஞ்செழுத் தஞ்சையும்வேறுரு வாக விளைந்து கிடந்ததுதேறி நிருமல சிவாய நமவென்றுகூறுமின் கூறிற் குறைகளும் இல்லையே.

5

குறைவதும் இல்லை குரைகழற் கூடுமறைவது மாரண மவ்வெழுத் தாகித்திறமது வாகத் தெளியவல் லார்க்குஇறவில்லை என்றென் றியம்பினர் காணே.

6

காணும் பொருளுங் கருதிய தெய்வமும்பேணும் பதியும் பெருகிய தீர்த்தமும்ஊணும் உணர்வும் உறக்கமுந் தானாகக்காணுங் கனகமுங் காரிகை யாமே.

7

ஆமே எழுத்தஞ்சு மாம்வழி யேயாகப்போமே யதுதானும் போம்வழி யேபோனால்நாமே நினைத்தன செய்யலு மாகும்பார்மேல் ஒருவர் பகையில்லை தானே.

8

பகையில்லை என்றும் பணிந்தவர் தம்பால்நகையில்லை நாணாளும் நண்மைக ளாகும்வினையில்லை என்றும் விருத்தமும் இல்லைதகையில்லை தானுஞ் சலமது வாமே.

9

ஆரும் உரைசெய்ய லாமஞ் செழுத்தாலேயாரும் அறியாத ஆனந்த ரூபமாம்பாரும் விசும்பும் பகலும் மதியதிஊனும்1 உயிரும் உணர்வது வாமே.பா-ம் : 1 ஊரும்
சொற்பிரிப்பு
ஆரும் உரைசெய்ய லாமஞ் செழுத்தாலேயாரும் அறியாத ஆனந்த ரூபமாம்பாரும் விசும்பும் பகலும் மதியதிஊனும் உயிரும் உணர்வது வாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.