1
ஏரொளி யுள்ளெழு தாமரை நாலிதழ்ஏரொளி விந்துவி னாலெழு நாதமாம்ஏரொளி யக்கலை எங்கும் நிறைந்தபின்ஏரொளிச் சக்கர மந்நடு 1வன்னியே.பா-ம் : 1மன்னிடு
சொற்பிரிப்பு
ஏரொளி யுள்ளெழு தாமரை நாலிதழ்ஏரொளி விந்துவி னாலெழு நாதமாம்ஏரொளி யக்கலை எங்கும் நிறைந்தபின்ஏரொளிச் சக்கர மந்நடு வன்னியே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
2
வன்னி யெழுத்தவை மாபலம் உள்ளனவன்னி யெழுத்தவை வானுற ஓங்கினவன்னி யெழுத்தவை மாபெருஞ் சக்கரம்வன்னி யெழுத்திடு வாறது சொல்லுமே.

3
சொல்லிய விந்துவும் ஈராறு நாதமாஞ்சொல்லிடு மப்பதி யவ்வெழுத் தாவனசொல்லிடு நூறொடு நாற்பத்து நாலுருசொல்லிடு சக்கர மாய்வரு மேலதே.

4
மேல்வரும் விந்துவு மவ்வெழுத் தாய்விடும்மேல்வரு நாதமும் ஓங்கும் எழுத்துடன்மேல்வரு மப்பதி யவ்வெழுத் தேவரின்மேல்வரு சக்கர மாய்வரு ஞாலமே.

5
ஞாலம தாக விரிந்தது சக்கரம்ஞாலம தாயிடும் விந்துவும் நாதமும்ஞாலம தாயிடு மப்பதி யோசனைஞாலம தாக விரிந்த தெழுத்தே.

6
விரிந்த எழுத்தது விந்துவும் நாதமும்விரிந்த எழுத்தது சக்கரமாகவிரிந்த எழுத்தது மேல்வரும் பூமிவிரிந்த எழுத்தினில் அப்புறம் அப்பே.

7
அப்பது வாக விரிந்தது சக்கரம்அப்பினில் அப்புறம் அவ்வன லாயிடும்அப்பினில் அப்புறம் மாருத மாயெழஅப்பினில் அப்புறம் ஆகாசமாமே.

8
ஆகாச அக்கர மாவது சொல்லிடில்ஆகாச அக்கரத் துள்ளே எழுந்தவைஆகாச அவ்வெழுத் தாகிச் சிவானந்தம்ஆகாச அக்கர மாவ தறிமினே.

9
அறிந்திடுஞ் சக்கரம் ஐயஞ்சு1 விந்துஅறிந்திடுஞ் சக்கர நாத முதலாஅறிந்திடும் அவ்வெழுத் தப்பதி யோர்க்கும்அறிந்திடும் அப்பக லோனிலை யாமே.பா-ம் : 1 ஐயைந்து
சொற்பிரிப்பு
அறிந்திடுஞ் சக்கரம் ஐயஞ்சு விந்துஅறிந்திடுஞ் சக்கர நாத முதலாஅறிந்திடும் அவ்வெழுத் தப்பதி யோர்க்கும்அறிந்திடும் அப்பக லோனிலை யாமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
10
அம்முதல் ஆறுமவ் வாதி எழுத்தாகும்அம்முதல் ஆறுமவ் வம்மை எழுத்தாகும்இம்முதல்1 நாலும் இருந்திடு2 வன்னியேஇம்முத லாகும் எழுத்தவை எல்லாம்.பா-ம் : 1அம்முதல் 2இருநடு
சொற்பிரிப்பு
அம்முதல் ஆறுமவ் வாதி எழுத்தாகும்அம்முதல் ஆறுமவ் வம்மை எழுத்தாகும்இம்முதல் நாலும் இருந்திடு வன்னியேஇம்முத லாகும் எழுத்தவை எல்லாம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
11
எழுத்தவை நூறொடு நாற்பத்து நாலும்எழுத்தவை யாறது வந்நடு வன்னிஎழுத்தவை யந்நடு வச்சுட ராகிஎழுத்தவை தான்முதல் அந்தமு மாமே.

12
அந்தமும் ஈறு முதலா னவையறஅந்தமும் அப்பதி னெட்டுடன் ஆதலால்அந்தமும் அப்பதின் மூன்றில் அமர்ந்தபின்அந்தமும் இந்துகை யாருட மானதே.

13
ஆவின மானவை முன்நூற் றறுபதுமாவின மப்பதி னைந்தின மாயுறுமாவின மப்பதி னெட்டுட னாயுறுமாவின மக்கதி ரோன்வர வந்தே.

14
வந்திடும் ஆகாசம் ஆறது நாழிகைவந்திடும் அக்கரம் முப்பதி ராசியும்வந்திடு நாளது முன்னூற் றறுபதும்வந்திடு ஆண்டு வகுத்துறை யவ்வியே.

15
அவ்வின மூன்றுமவ் வாடது வாய்வருங்கெவ்வின மூன்றுங் கிளர்தரு வேரதாஞ்சவ்வின மூன்றுந் தழைத்திடுந் தண்டதாம்இவ்வின மூன்றும் இராசிக ளெல்லாம்.

16
இராசியுட் சக்கரம் எங்கும் நிறைந்தபின்இராசியுட் சக்கர மென்றறி விந்துவாம்இராசியுட் சக்கர நாதமும் ஒத்தபின்இராசியுட் சக்கரம் நின்றிடு மாறே.

17
நின்றிடு விந்துவென் றுள்ள எழுத்தெல்லாம்நின்றிடு நாதமும் ஓங்கும் எழுத்துடன்நின்றிடு மப்பதி யவ்வெழுத் தேவரில்நின்றிடு மப்புறந் தாரகை யானதே.

18
தாரகையாகச் சமைந்தது சக்கரந்தாரகை மேலோர் தழைத்தது பேரொளிதாரகை சந்திரன் நற்பக லோன்வரத்தாரகை தாரகை தாரகை கண்டதே.

19
கண்டிடு சக்கரம் விந்து வளர்வதாங்கண்டிடு நாதமுந் தன்மேல் எழுந்திடக்கண்டிடு வன்னிக் கொழுந்தன வொத்தபின்கண்டிடு மப்புறங் காரொளி யானதே.

20
காரொளி அண்டம் பொதிந்துல கெங்கும்பாரொளி நீரொளி சாரொளி காலொளிவானொளி ஒக்க வளர்ந்து கிடந்துபின்நேரொளி ஒன்றாய் நிறைந்தங்கு நின்றதே.

21
நின்றது அண்டமும் நீளும் புவியெலாம்நின்றவிவ் வண்ட நிலைபெறக் கண்டிடநின்றவிவ் வண்டமு மூல மலமொக்கும்நின்றவிவ் வண்டம் பலமது விந்துவே.

22
விந்துவும் நாதமும் ஒக்க விழுந்திடின்விந்துவும் நாதமும் ஒக்க விரையதாம்விந்திற் குறைந்திடு நாதம் எழுந்திடில்விந்துவை எண்மடி கொண்டது வீசமே.

23
வீசம் இரண்டுள நாதத் தெழுவனவீசமும் ஒன்று விரைந்திடு மேலுறவீசமும் நாதமும் எழுந்துடன் ஒத்தபின்வீசமும் விந்து விரிந்தது காணுமே.

24
விரிந்தது விந்துவுங் கெட்டது வீசம்விரிந்தது விந்துவும் நாதத் தளவுவிரிந்தது வுட்கட்ட எட்டெட்டு மாகில்விரிந்தது விந்து விரையதுவாமே.

25
விரையது விந்து விளைந்தன எல்லாம்விரையது விந்து விளைந்த உயிரும்விரையது விந்து விளைந்தவிஞ் 1ஞாலம்விரையது விந்து விளைந்தவன் 2தாளே.பா-ம் : 1) ஞானம், 2) தானே
சொற்பிரிப்பு
விரையது விந்து விளைந்தன எல்லாம்விரையது விந்து விளைந்த உயிரும்விரையது விந்து விளைந்தவிஞ் ஞாலம்விரையது விந்து விளைந்தவன் தாளே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
26
விளைந்த எழுத்தவை விந்துவும் நாதமும்விளைந்த எழுத்தவை சக்கரமாகவிளைந்த எழுத்தவை மெய்யினுள் நிற்கும்விளைந்த எழுத்தவை மந்திர மாமே.

27
மந்திரஞ் சக்கர மானவை சொல்லிடில்தந்திரத் துள்ளெழுத் தொன்றெரி வட்டமாம்தந்திரத் துள்ளு மிரேகையில் ஒன்றில்லைபந்தம தாகும் பிரணவம் உன்னிடே.

28
உன்னிட்ட வட்டத்தில் ஒத்தெழு மந்திரம்பின்னிட்ட ரேகை பிழைப்பது தானில்லைதன்னிடத் டெழுந்த தகைப்புறப் பின்னிற்கப்பன்னிட்ட மந்திரம் பார்க்கலு மாமே.

29
பார்க்கலு மாகும் பகையறு சக்கரங்காக்கலு மாகுங் கருத்தில் தடமெங்கும்நோக்கலு மாகும் நுணுக்கற்ற நுண்பொருள்ஆக்கலு மாகும் அறிந்துகொள் வார்க்கே.

30
அறிந்திடுஞ் சக்கர மாதி யெழுந்துவிரிந்திடுஞ் சக்கர மேலெழுத் தம்மைபரிந்திடுஞ் சக்கரம் பாராங்கி நாலும்குவிந்திடுஞ் சக்கரம் கூறலு மாமே.

31
கூறிய சக்கரத் துள்ளெழு மந்திரம்மாறியல் பாக அமைந்து விரிந்திடுந்தேறிய அஞ்சுடன் சேர்ந்தெழு மாரணமாறியல் பாக மதித்துக்கொள் வார்க்கே.

32
மதித்திடும் அம்மையும் மாமாது மாகும்மதித்திடும் அம்மையு மங்கனல் ஒக்கும்மதித்தங் கெழுந்தவை காரண மாகில்கொதித்தங் கெழுந்தவை கூடகிலாவே.

33
கூடிய தம்பனம் மாரணம் வசியம்ஆடியல் பாக அமைந்து செறிந்திடும்பாடியுள் ளாகப் பகைவரும் வந்துறார்நேடியுள் ளாகத் தெளிந்துகொள் வார்க்கே.

34
தெளிந்திடுஞ் சக்கர மூலத்தி னுள்ளேஅளிந்த வகாரத்தை யந்நடு வாக்கிக்குளிர்ந்த1 வரனைக் கூடியுள் வைத்துவளிந்தவை யங்கெழு நாடிய காலே.பா-ம் : 1 குளிந்த வரவினைக்
சொற்பிரிப்பு
தெளிந்திடுஞ் சக்கர மூலத்தி னுள்ளேஅளிந்த வகாரத்தை யந்நடு வாக்கிக்குளிர்ந்த வரனைக் கூடியுள் வைத்துவளிந்தவை யங்கெழு நாடிய காலே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
35
காலரை முக்கால் முழுதெனும் மந்திரம்ஆலித் தெழுந்தமைந் தூறி எழுந்ததாய்ப்பாலித் தெழுந்து பகையற நின்றபின்மாலுற்ற மந்திர மாறிக்கொள் வார்க்கே.

36
கொண்ட இம்மந்திரங் கூத்தன் எழுத்ததாய்ப்பண்டையுள் நாவிற் பகையற விண்டபின்மன்றுள் நிறைந்த மணிவிளக் காயிடும்இன்றும் இதயத் தெழுந்து நமவெனே.