திருமுறை 10 · 10.04.08 · 100

நான்காம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

நாலிதழ் ஆறில் அவிர்ந்தது தொண்ணூறுநாலிதழானவை நாற்பத்து நாலுளபாலிதழானவள்(1) பங்கய மூலமாய்த்தானிதழாகித் தரித்திருந்தாளே.பா-ம்: 1) பாலிதழான அப்
சொற்பிரிப்பு
நாலிதழ் ஆறில் அவிர்ந்தது தொண்ணூறுநாலிதழானவை நாற்பத்து நாலுளபாலிதழானவள் பங்கய மூலமாய்த்தானிதழாகித் தரித்திருந்தாளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

தரித்திருந்தாளவள் தண்ணொளி நோக்கிவிரித்திருந் தாளவள் வேதப் பொருளைக்குறித்திருந் தாளவள் கூறிய ஐந்துமறித்திருந் தாளவள் மாதுநல் லாளே.

3

மாதுநல் லாளும் மணாளன் இருந்திடப்பாதிநல் லாளும் பகவனு மானதுசோதிநல் லாளைத் துணைப்பெய்ய வல்லிரேல்வேதனை தீர்தரும் வெள்ளடை யாமே.

4

வெள்ளடை யானிரு மாமிகு மாமலர்க்கள்ளடை யாரக் கமழ்குழ லார்மனமள்ளடை யானும் வகைத்திற மாய்நின்றபெண்ணொரு பாகம் பிறவி பெண்ணாமே.

5

பெண்ணொரு பெண்ணைப் புணர்ந்திடும் பேதமைபெண்ணிடை ஆணும் பிறந்து கிடந்ததுபெண்ணுடை ஆணென் பிறப்பறிந் தீர்க்கின்றபெண்ணுடை ஆணிடைப் பேச்சற்றவாறே.

6

பேச்சற்ற நற்பொருள் காணும் பெருந்தகைமாச்சற்ற சோதி மனோன்மனி மங்கையாங்காச்சற்ற சோதி கடவு ளுடன் புணர்ந்தாச்சற்று எனுட்புகுந் தாலிக்குந் தானே.

7

ஆலிக்குங் கன்னி அரிவை மனோன்மனிபாலித் துலகிற் பரந்து பெண்ணாகும்வேலைத் தலைவியை வேத முதல்வியைஆலித் தொருவன் உகந்துநின் றானே.

8

உகந்துநின் றான்நம்பி ஒண்ணுதற் கண்ணோடுகந்துநின் றான்நம் முழைபுக நோக்கிஉகந்துநின் றான்இவ் உலகங்கள் எல்லாம்உகந்துநின் றான்அவ டன்றோ டொகுத்தே.

9

குத்து முலைச்சி குழைந்த மருங்கினள்துத்தி விரிந்த சுணங்கினள் தூமொழிபுத்தகச் சீறடிப் பாவை புணர்வினைத்தொத்த கருத்துச்(1) சொல்லகிலேனே.பா-ம்: 1) கருத்தது
சொற்பிரிப்பு
குத்து முலைச்சி குழைந்த மருங்கினள்துத்தி விரிந்த சுணங்கினள் தூமொழிபுத்தகச் சீறடிப் பாவை புணர்வினைத்தொத்த கருத்துச் சொல்லகிலேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

சொல்லவொண்ணாத அழற்பொதி மண்டலஞ்செல்லவொண் ணாது திகைத்தங் கிருப்பர்கள்வெல்லவொண் ணாத வினைத்தனி நாயகிமல்லவொண் ணாத மனோன்மனி தானே.

11

தானே இருநிலந் தாங்கி விண் ணாய்நிற்குந்தானே சுடும்அங்கி ஞாயிறுந் திங்களுந்தானே மழைபொழி தையலு மாய்நிற்குந்தானே வடவரைத் தண்கடற் கண்ணே.

12

கண்ணுடை யாளைக் கலந்தங் கிருந்தவர்மண்ணுடை யாரை மனித்தரிற் கூட்டொணாப்பண்ணுடை யார்கள் பதைப்பற் றிருந்தவர்விண்ணுடை யார்களை மேலுறக் கண்டே.

13

கண்டெண் டிசையுங் கலந்து வருங்கன்னிபண்டெண் டிசையும் பராசத்தி யாய்நிற்கும்விண்டெண் டிசையும் விரைமலர் கைக்கொண்டுதொண்டெண் டிசையுந் தொழநின்ற கன்னியே.

14

கன்னி ஒளியென நின்றவிச் சந்திரன்மன்னி யிருக்கின்ற மாளிகை செந்நிறஞ்சென்னி யிருப்பிடஞ் சேர்பதி னாறுடன்பன்னி யிருப்பப் பராசத்தி யாமே.

15

பராசத்தி என்றென்று பல்வகை யாலுந்தராசத்தி யான தலைப்பிர மாணிஇராசத்தி யாமள வாகமத் தாளுங்குராசத்தி கோலம் பலவுணர்ந் தேனே.

16

உணர்ந்துல கேழையும் யோகினி சத்திஉணர்ந்துயி ராய்நிற்கும் உன்னதன் ஈசன்புணர்ந்தொரு காலத்துப் போகமதாதிஇணைந்து பரமென் றிசைந்திது தானே.

17

இதுவப் பெருந்தகை எம்பெரு மானுள்பொதுவக் கல்வியும்(1) போகமுமாகிமதுவக் குழலி மனோன்மனி மங்கைஅதுவக் கல்வியுள்(1) ஆயுழி யோகமே.பா-ம்: 1) கலவியுள்
சொற்பிரிப்பு
இதுவப் பெருந்தகை எம்பெரு மானுள்பொதுவக் கல்வியும் போகமுமாகிமதுவக் குழலி மனோன்மனி மங்கைஅதுவக் கல்வியுள் ஆயுழி யோகமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

18

யோகனற் சத்தி ஒளிபீடந் தானாகும்யோகனற் சத்தி ஒளிமுகந் தெற்காகும்யோகனற் சத்தி உதர நடுவாகும்யோகனற் சத்திதாள் உத்தரந் தேரே.

19

தேர்ந்தெழு மேலாஞ் சிவனங்கி யோடுறவார்ந்தெழு மாயையும் அந்தமதாய் நிற்கும்ஓர்ந்தெழு விந்துவும் நாதமும் ஓங்கிடக்கூர்ந்தெழு கின்றனள் கோல்வளை தானே.

20

தானான வாறெட்ட தாம்பரைக் குண்மிசைதானான வாறுமீ ரேழுஞ் சமகலைதானான விந்து சகமே பரமெனுந்தானாம் பரவாதனை எனத் தக்கதே.

21

தக்க பராவித்தை தானிரு பானேழிற்றக்கெழு மொருத் திரஞ்சொல்லச் சொல்லவேமயக்கிடும் எண் சத்தி வெண்ணிற முக்கண்ணிதொக்க கதையோடு தொன்முத்திரையாளே.

22

முத்திரை மூன்றின் முடிந்தமெய்ஞ் ஞானத்தள்தத்துவ மாயல்ல வாய சகலத்தள்வைத்த பராபர னாய பராபரைசத்தியு மானந்த சத்தியுங் கொங்கே.

23

கொங்கின்ற கொம்பின் குரும்பைக் குலாங்கன்னிபொங்கிய குங்குமத் தொளிபொ ருந்தினள்அங்குச பாச மெனுமகி லங்கனிதங்கு மவள்மனை தானறி வாயே.

24

வாயும் மனமுங் கடந்த மனோன்மனிபேயுங் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளைஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்தாயும் மகளுநல் தாரமு மாமே.

25

தாரமு மாகுவள் தத்துவ மாய்நிற்பள்காரண காரிய மாகுங் கலப்பினள்பூரண விந்து பொதிந்த புராதனிபாரள வாந்திசை பத்துடை யாளே.

26

பத்து முகமுடையாள்நம் பராசக்திவைத்தனள் ஆறங்க நாலுடன் றான்வேதம்ஒத்தனள் ஆதாரம் ஒன்றுடன் ஓங்கியேநித்தமாய் நின்றாள் எம் நேரிழை கூறே.

27

கூறிய கன்னி குலாய பருவத்தள்சீரிய ளாயுல கேழுந் திகழ்ந்தவள்ஆரிய நங்கை யமுத பயோதரிபேருயி ராளி பிறிவறுத்தாளே.

28

பிறிவின்றி நின்ற பெருந்தகைப் பேதைகுறியொன்றி நின்றிடுங் கோமளக்கொம்புபொறியொன்றி நின்று புணர்ச்சிசெய் தாங்கேஅறிவொன்ற நின்றனள் ஆருயிருள்ளே.
சொற்பிரிப்பு
பிறிவின்றி நின்ற பெருந்தகைப் பேதைகுறியொன்றி நின்றிடுங் கோமளக்கொம்புபொறியொன்றி நின்று புணர்ச்சிசெய் தாங்கேஅறிவொன்ற நின்றனள் ஆருயிருள்ளே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

29

உள்ளத்தி னுள்ளே யுடனிருந் தைவர்தங்கள்ளத்தை நீக்கிக் கலந்துட னேபுல்கிக்கொள்ளத் தவநெறி கூடிய இன்பத்துவல்லற் றலைவி மருட்டிப் புரிந்தே.

30

புரிந்தருள் செய்கின்ற போகமா சத்திஇருந்தருள் செய்கின்ற இன்பம் அறியார்பொருந்தி யிருந்த புதல்வி பூவண்ணத்திருந்த விலக்கில் இனிதிருந்தாளே.

31

இருந்தனள் ஏந்திழை என்னுள மேவித்திருந்து புணர்ச்சியில் தேர்ந்துணர்ந் துன்னிநிரந்தர மாகிய நீர்திசை யோடுபொருந்த விலக்கிற் புணர்ச்சி அதுவே.

32

அதுஇது என்னும் அவாவினை நீக்கித்துதியது செய்து சுழியுற நோக்கில்விதியது தன்னையும் வென்றிட லாகும்மதிமல ராள்சொன்ன மண்டல மூன்றே.

33

மூன்றுள மண்டல மோகினி சேர்விடம்ஏன்றுள ஈரா றெழுகலை உச்சியில்தோன்று மிலக்குற லாகுதல் மாமாயைஏன்றனள் ஏழிரண் டிந்துவொ டீறே.

34

இந்துவி னின்றெழு நாதம் இரவிபோல்வந்துபின் நாக்கின் மதித்தெழுங் கண்டத்தில்உந்திய சோதி இதயத் தெழும்ஒலிஇந்துவின் மேலுற்ற ஈறது தானே.

35

ஈறது தான்முதல் எண்ணிரண் டாயிரமாறுதல் இன்றி மனோவச மாயெழில்தூறது செய்யுஞ் சுகந்தச் சுழியதுபேறது செய்து பிறந்திருந் தாளே.

36

இருந்தனள் ஏந்திழை ஈறதி லாகத்திருந்திய ஆனந்தஞ் செந்நெறி நண்ணிப்பொருந்து புவனங்கள் போற்றிசெய் தேத்திவருந்த இருந்தனள் மங்கைநல் லாளே.

37

மங்கையும் மாரனுந் தம்மொடு கூடிநின்றங்குலி கூட்டி அகம்புறம் பார்த்தனர்கொங்கைநல் லாளுங் குமாரர்கள் ஐவரும்தங்களின் மேவிச் சடங்குசெய் தார்களே.

38

சடங்கது செய்து தவம்புரி வார்கள்கடந்தனி னுள்ளே கருதுவ ராகில்தொடர்ந்தெழு சோதி துளைவழி ஏறிஅடங்கிடும் அன்பின தாயிழை பாலே.

39

பாலித் திருக்கும் பனிமல ராறினும்ஆலித் திருக்கும் அவற்றின் அகம்படிசீலத்தை நீக்கத் திகழ்ந்தெழு மந்திரமூலத்து மேலது முத்ததுவாமே.

40

முத்து வதனத்தி முகத்தொறு முக்கண்ணிசத்தி சதுரி சகளி சடாதரிபத்துக் கரத்தி பராபரன் பைந்தொடிவித்தகி எண்ணுள்ள மேவிநின் றாளே.

41

மேவிய மண்டலம் மூன்றுடன் கீழெரிதாவிய நற்பதத் தண்மதி யங்கதிர்மூவருங் கூடி முதல்வியாய் முன்னிற்பார்ஓவினு மேலிடும் உள்ளொளி யாமே.

42

உள்ளொளி மூவிரண் டோங்கிய அங்கங்கள்வெள்ளொளி அங்கியின் மேவி அவரொடுங்கள்ளவிழ் கோதைக் கலந்துட னேநிற்குங்கொள்ள விசுத்திக் கொடியமு தாமே.

43

கொடிய திரேகை குருவுள் இருப்பப்படியது வாருனைப் பைங்கழ லீசன்வடிவது வானந்தம் வந்து முறையேஇதுமுதல் ஆறங்கம் ஏந்திழையாளே.

44

ஏந்திழை யாரும் இறைவர்கள் மூவரும்காந்தார மாறுங் கலைமுதல் ஈரெட்டுமாந்த குளத்தியு மந்திர ராயமுஞ்சார்ந்தனர் ஏத்த இருந்தனள் சத்தியே.

45

சத்தியென் பாளொரு சாதகப் பெண்பிள்ளைமுத்திக்கு நாயகி என்ப தறிகிலர்பத்தியைப் பாழில் உகுத்தஅப் பாவிகள்கத்திய நாய்போற் கதறுகின்றாரே.

46

ஆரே திருவின் திருவடி காண்பார்கள்நேரேநின் றோதி நினையவும்வல் லார்க்குக்காரேர் குழலி கமல மலரன்னசீறேயுஞ் சேவடி சிந்தைவைத் தாளே.

47

சிந்தையில் வைத்துச் சிராதியி லேவைத்துமுந்தையில் வைத்துத் தம்மூலத்திலே வைத்துநிந்தையில் வையா நினைவதி லேவைத்துச்சந்தையில் வைத்துச் சமாதிசெய் வீரே.

48

சமாதிசெய் வார்கட்குத் தான்முத லாகிச்சிவாதியி லாருஞ் சிலைநுத லாளைநவாதியி லாக நயந்தது ஓதில்உவாதி அவளுக் குறைவில தாமே.
சொற்பிரிப்பு
சமாதிசெய் வார்கட்குத் தான்முத லாகிச்சிவாதியி லாருஞ் சிலைநுத லாளைநவாதியி லாக நயந்தது ஓதில்உவாதி அவளுக் குறைவில தாமே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

49

உறைபதி தோறும் முறைமுறை மேவிநறைகமழ் கோதையை நாடொறு நண்ணிமறையுட னேநிற்கு மற்றுள்ள நான்கும்இறைதினைப்1 போதினில் எய்திட லாமே.பா-ம் : 1 பாசத் துணைவழி
சொற்பிரிப்பு
உறைபதி தோறும் முறைமுறை மேவிநறைகமழ் கோதையை நாடொறு நண்ணிமறையுட னேநிற்கு மற்றுள்ள நான்கும்இறைதினைப் போதினில் எய்திட லாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

50

எய்திட லாகும் இருவினை யின்பயன்கொய்தளிர் மேனிக் குமரி குலாங்கன்னிமைதவழ் கண்ணிநன் மாதுரி கையொடுகைதவம் இன்றிக் கருத்துறு மாறே.

51

கருத்துறுங் காலங் கருது மனமுந்திருத்தி யிருந்தவை சேரு நிலத்துஒருத்தியை உன்னி உணர்ந்திடு மண்மேல்இருத்திடும் எண்குணம் எய்தலும் ஆகுமே.

52

ஆமையொன் றேறி அகம்படி யானெனஓமஎன் றோதிஎம் உள்ளொளி யாய்நிற்கும்தாம நறுங்குழல் தையலைக் கண்டபின்சோம நறுமலர் சூடிநின் றாளே.

53

சூடிடும் அங்குச பாசத் துளைவழி1கூடும் இருவளைக் கோலக்கைக் குண்டிகைநாடும் இருபத நன்னெடு ருத்திரம்ஆடிடும் சீர்புனை ஆடகமாமே.பா-ம் : 1 பாசத் துணைவழி
சொற்பிரிப்பு
சூடிடும் அங்குச பாசத் துளைவழிகூடும் இருவளைக் கோலக்கைக் குண்டிகைநாடும் இருபத நன்னெடு ருத்திரம்ஆடிடும் சீர்புனை ஆடகமாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

54

ஆமயன் மாலரன் ஈசன் சதாசிவன்தாமடி சூடிநின் றெய்தினர் தம்பதங்காமனுஞ் சாமன் இரவி கனலுடன்சோமனும் வந்தடி சூடநின் றாளே.

55

சூடும் இளம்பிறை சூலி கபாலினிநீடும் இளங்கொடி நின்மலி நேரிழைநாடி நடுவிடை ஞாள முருவநின்றாடு மதன்வழி அண்ட முதல்வியே.

56

அண்ட முதலாய் அவனி பரியந்தங்கண்டதொன் றில்லைக் கனங்குழை யல்லதுகண்டனுங் கண்டியு மாகிய காரணங்குண்டிகை கோளிகை கண்டத னாலே.

57

ஆலமுண் டானமு தாங்கவர் தம்பதஞ்சாலவந் தெய்துந் தவத்தின்பந் தான்வருங்கோலிவந் தெய்துங் குவிந்த பதவையோடேலவந் தீண்டி இருந்தனள் மேலே.

58

மேலாம் அருந்தவம் மேன்மேலும் வந்தெய்தக்காலால் வருந்திக் கழிவர் கணத்திடைநாலா நளினநின் றேத்திநட் டுச்சிதன்மேலா மெழுத்தின ளாமத்தி னாளே.

59

ஆமத் தினிதிருந் தன்ன மயத்தினள்ஓமத்தி லேயும் ஒருத்தி பொருந்தினள்நாம நமசிவ யவ்வென்றிருப் பார்க்குநேமத் துணைவி நிலாவிநின் றாளே.

60

நிலாமய மாகிய நீள்படி கத்திசிலாமய மாகுஞ் செழுந்த ரளத்திசுலாமய மாகுஞ் சுரிகுழற் கோதைகலாமய மாகக் கலந்துநின் றாளே.

61

கலந்துநின் றாள்கன்னி காதல னோடுங்கலந்துநின் றாளுயிர் கற்பனை எல்லாங்கலந்துநின் றாள்கலை ஞானங்கள் எல்லாங்கலந்துநின் றாள் கன்னி காலமு மாயே.

62

காலவி எங்குங் கருத்தும் அருத்தியுங்கூலவி ஒன்றாகுங் கூட இழைத்தனள்மாலினி மாகுலி மந்திர சண்டிகைபாலினி பாலவன் பாகம தாமே.

63

பாகம் பராசக்தி பைம்பொன் சடைமுடிஏகம் இருதயம் ஈரைந்து திண்புயமோக முகமைந்து முக்கண் முகந்தொறும்நாகம் உரித்து நடஞ்செய்யும் நாதர்க்கே.

64

நாதனு நாலொன் பதின்மருங் கூடிநின்றோதிடுங் கூட்டங்கள் ஓரைந் துளஅவைவேதனும் ஈரொன்ப தின்மரும் மேவிநின்றாதியும் அந்தமு மாகிநின் றாளே.

65

ஆகின்ற நாள்களில் ஐம்பத் தொருவர்கள்ஆகிநின் றார்களில் ஆருயி ராமவள்ஆகிநின் றாளுட னாகிய சக்கரத்தாகிநின் றானவன் ஆயிழை பாடே.

66

ஆயிழை யாளொடு மாதிப் பரனிடம்ஆயதொ ரண்டவை யாறும் இரண்டுளஆய மனத்தொ றறுமுக மவைதனில்ஏயவார் குழலி இனிதுநின் றாளே.

67

நின்றனள் நேரிழை யோடுடன் நேர்படஇன்றெ னகம்படி ஏழும் உயிர்ப்பெய்துந்துன்றிய வோரொன் பதின்மருஞ் சூழலுள்ஒன்றுயர் வோதி யுணர்ந்துநின் றாளே.

68

உணர்ந்தெழு மந்திரம் ஓமெனும் உள்ளேமணந்தெழு மாங்கதி யாகிய தாகுங்கொணர்ந்தெழு சூதனுஞ் சூதியுங் கூடிக்கணந்தெழுங் காணுமக் காமுகை யாமே.

69

ஆமது வங்கியும் ஆதியும் ஈசனும்மாமது மண்டல மாருத மாதியும்ஏமது சீவன் சிகையங் கிருண்டிடக்கோமலர்க்கோதையுங் கோதண்ட மாகுமே.

70

ஆகிய கோதண்டத் தாகு மனோன்மணிஆகிய ஐம்ப துடனே அடங்கிடும்ஆகும் பராபரை யோடப் பரையவள்ஆகு மவள்ஐங் கருமத்தள் தானே.

71

தானிதழ் மோகினி சார்வான யோகினிபோன மயமுடை யாரடி போற்றுவர்ஆனவ ராவியி னாகிய வச்சிவந்தானாம் பரசிவ மேலது தானே.

72

தானந்த மேலே தருஞ்சிகை தன்னுடன்ஆனந்த மோகினி யாம்பொற் றிருவொடுமோனையில் வைத்து மொழிதரு கூறதுவானவை யோமெனும் அவ்வுயிர் மார்க்கமே.

73

மார்க்கங்கள் ஈன்ற மனோன்மணி மங்கலியார்க்கும் அறிய வரியா ளவளாகும்வாக்கு மனமும் மருவியொன் றாய்விட்டநோக்கும் பெருமைக்கு நுண்ணறி வாமே.

74

நுண்ணறி வாகும் நுழைபுலன் மாந்தர்க்குப்பின்னறி வாகும் பிரானறி வத்தடஞ்செந்நெறி யாகுஞ் சிவகதி சேர்வார்க்குத்தன்னெறி யாவது சன்மார்க்கமாமே.
சொற்பிரிப்பு
நுண்ணறி வாகும் நுழைபுலன் மாந்தர்க்குப்பின்னறி வாகும் பிரானறி வத்தடஞ்செந்நெறி யாகுஞ் சிவகதி சேர்வார்க்குத்தன்னெறி யாவது சன்மார்க்கமாமே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

75

சன்மார்க்க மாகச் சமைதரு மார்க்கமுந்துன்மார்க்க மானவை எல்லாந் துரந்திடும்நன்மார்க்கத் தேவரும் நன்னெறி யாவதுஞ்சன்மார்க்கத் தேவியுஞ் சத்தியென் பாளே.

76

சத்தியும் நானுஞ் சயம்புவும் அல்லதுமுத்தியை யாரும் முதலறி வாரில்லைஅத்திமேல் வித்திடில் அத்தி பழுத்தக்கான்மத்தியி லேற வழியது வாமே.

77

அதுவிது வென்றவ மேகழி யாதேமதுவிரி பூங்குழல் மங்கைநல் லாளைப்பதிமது மேவிப் பணியவல் லார்க்குவிதிவழி தன்னையும் வென்றிட லாமே.

78

வென்றிட லாகும் விதிவழி தன்னையும்வென்றிட லாகும் வினைப்பெரும் பாசத்தைவென்றிட லாகும் விழைபுலன் தன்னையும்வென்றிடு மங்கைதன் மெய்யுணர்வோர்க்கே.

79

ஓரைம் பதின்மருள் ஒன்றியே நின்றதுபாரம் பரியத்து வந்த பரமிதுமாரங் குழலாளும் அப்பதி தானுமுன்சாரும் பதமிது சத்திய மாமே.

80

சத்தியி னோடு சயம்புவும் நேர்படில்வித்தது வின்றியே எல்லாம் விளைந்தனஅத்தகை யாகிய ஐம்பத் தொருவருஞ்சித்தது மேவித் திருந்திடுவாரே.

81

திருந்து சிவனுஞ் சிலைநுத லாளும்பொருந்திய வானவர் போற்றிசெய் தேத்தஅருந்திட அவ்விடம் ஆரமுதாகஇருந்தனள் தானங் கிளம்பிறை என்றே.

82

என்றும் எழுகின்ற வேரினை எய்தினார்தன்றது வாகுவர் தார்குழ லாளொடுமன்றது கங்கை மதியொடு மாதவர்துன்றிய தாரகை சோதிநின் றாளே.

83

நின்றனள் நேரிழை யாளொடு நேர்படஒன்றிய வுள்ளொளி யாலே யுணர்ந்ததுசென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டியதுன்றிடு ஞானங்கள் தோன்றிடுந் தானே.

84

தோன்றிடும் வேண்டுரு வாகிய தூய்நெறிஈன்றிடு மாங்கவள் எய்திய பல்கலைமான்றரு கண்ணியும் மாரனும் வந்தெதிர்சான்றது வாகுவர் தாமவ ளாயுமே.

85

ஆயும் அறிவும் கடந்தணு வாரணிமாயம தாகி மதோமதி யாயிடும்சேய அரிவை சிவானந்த சுந்தரிநேயம தாநெறி யாகிநின் றாளே.

86

நெறியது வாய்நின்ற நேரிழை யாளைப்பிறிவது செய்யாது பிஞ்ஞக னோடுங்குறியது கூடிக் குறிக்கொண்டு நோக்கும்அறிவொடும் ஆங்கே அடங்கிட லாமே.

87

ஆமயன் மாலரன் ஈசன்மா லாங்கதிஓமய மாகிய ஒன்பதும் ஒன்றிடத்தேமய னாளுந் தெனாதென என்றிடும்மாமய மானது வந்தெய்த லாமே.

88

வந்தடி போற்றுவர் வானவர் தானவர்இந்து முதலாக எண்டிசை யோர்களும்கொந்தணி யுங்குழ லாளொடு கோனையும்வந்தனை செய்யும் வழி நவில் வீரே1.பா-ம் : 1 நவிலீரே
சொற்பிரிப்பு
வந்தடி போற்றுவர் வானவர் தானவர்இந்து முதலாக எண்டிசை யோர்களும்கொந்தணி யுங்குழ லாளொடு கோனையும்வந்தனை செய்யும் வழி நவில் வீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

89

நவிற்றுநன் மந்திரம் நன்மலர் தூபங்கவற்றிய கந்தங் கவர்ந்தெறி தீபம்பயிற்றும் உலகினிற் பார்ப்பதி பூசைஅவிக்கொண்ட சோதிக்கோர் அர்ச்சனை தானே.

90

தாங்கி உலகில் தரித்த பராபரன்ஓங்கிய காலத் தொருவன் உலப்பிலிபூங்கிளி தங்கும் புரிகுழ லாளன்றுபாங்குடன் ஏற்பப் பராசத்தி போற்றே.

91

பொற்கொடி மாதர் புனைகழல் ஏத்துவார்அற்கொடி மாதுமை யார்வத் தலைமகள்நற்கொடி மாதை நயனங்கண் மூன்றுடைவிற்கொடி மாதை விரும்பி விளங்கே.

92

விளங்கொளி யாய விரிசுடர் மாலைதுளங்கு பராசத்தி தூங்கிருள் நீங்கக்களங்கொள் மணியுடன் காம வினோதம்உளங்கொ ளிலம்பியம் ஒன்று தொடரே.

93

தொடங்கி உலகினிற் சோதி மணாளன்அடங்கி இருப்பதென் அன்பின் பெருமைவிடங்கொள் பெருஞ்சடை மேல்வரு கங்கைஒடுங்கி யுமையொடும் ஓருரு வாமே.

94

உருவம் பலவுயி ராய்வல்ல நந்திதெருவம் புகுந்தமை தேர்வுற நாடிற்புரிவளைக் கைச்சியெம் 1பொன்னணி மாதைமருவி இறைவன் மகிழ்வன மாயமே.பா-ம் : 1 பொன்னொளி
சொற்பிரிப்பு
உருவம் பலவுயி ராய்வல்ல நந்திதெருவம் புகுந்தமை தேர்வுற நாடிற்புரிவளைக் கைச்சியெம் பொன்னணி மாதைமருவி இறைவன் மகிழ்வன மாயமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

95

மாயம் புணர்க்கும் வளர்சடை யானடித்தாயம் புணர்க்குஞ் சலதி அமலனைக்காயம் புணர்க்குங் கலவியுள் மாசத்திஆயம் புணர்க்குமவ் வியோனியு மாமே.

96

உணர்ந்தொழிந் தேனவ னாமெங்கள் ஈசனைப்புணர்ந்தொழிந் தேன்புவ னாபதி யாரைஅணைந்தொழின் தேனெங்கள் ஆதிதன் பாதம்பிணைந்தொழிந் தேன்றன் அருள்பெற்ற வாறே.

97

பெற்றாள் பெருமை பெரிய மனோன்மனிநற்றாள் இறைவனே நற்பயனே என்பர்கற்றான் அறியுங் கருத்தறி வார்கட்குப்பொற்றாள் உலகம் புகல்தனி யாமே.

98

தனிநா யகன்றனோ டென்னெஞ்சம் நாடிஇனியார் இருப்பிடம் எழுல கென்பர்பணியான் மலர்ந்தபைம் போதுகை ஏந்திக்கனியாய் நினைவதென் காரணம் அம்மையே.

99

அம்மனை அம்மை அரிவை மனோன்மனிசெம்மனை செய்து திருமங்கை யாய்நிற்கும்இம்மனை செய்த இந்நில(1) மங்கையும்அம்மனை யாகி அமர்ந்துநின் றாளே.பா-ம்: 1) இருநில
சொற்பிரிப்பு
அம்மனை அம்மை அரிவை மனோன்மனிசெம்மனை செய்து திருமங்கை யாய்நிற்கும்இம்மனை செய்த இந்நில மங்கையும்அம்மனை யாகி அமர்ந்துநின் றாளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

100

அம்மையும் அத்தனும் அன்புற்ற தல்லதுஅம்மையும் அத்தனு மாரறி வாரென்னைஅம்மையோ டத்தனும் யானும் உடனிருந்தம்மையொ டத்தனை யான்புரிந் தேனே.