திருமுறை 10 · 10.04.07 · 30

நான்காம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

அளந்தேன் அகலிடத்து அந்தமும் ஈறும்அளந்தேன் அகலிடத்து ஆதிப் பிரானைஅளந்தேன் அகலிடத்து ஆணொடு பெண்ணும்அளந்தேன் அவனருள் ஆய்ந்துணர்ந் தேனே.
சொற்பிரிப்பு

உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

உணர்ந்திலர் ஈசனை ஊழிசெய் சத்திபுணர்ந்தது பூரணம் புண்ணியர் தங்கள்கணங்களைத் தன்னருள் செய்கின்ற கன்னிகொணர்ந்த வழிகொண்டு கும்பகமாமே.

3

கும்பக் களிறுஐந்தும் கோலொடு பாகனும்வம்பில் திகழும் மணிமுடி வள்ளலும்இன்பக் கலவி இனிதுறை தையலும்அன்பிற் கலவியுள் ஆயொழிந் தாரே.

4

இன்பக் கலவியில் இட்டு எழுகின்றதோர்அன்பிற் புகவல்ல னாம்எங்கள் அப்பனும்துன்பக் குழம்பில் துயருறும் பாசத்துள்என்பிற் பாரசக்தி என்னம்மை தானே.

5

என்னம்மை என்னப்பன் என்னும் செருக்கற்றுஉன்னம்மை ஊழித் தலைவனும் அங்குளன்மன்னம்மை யாகி மருவி உரைசெய்யும்பின்னம்மை யாய்நின்ற பேர்நந்தி தானே.

6

தார்மேல் உறைகின்ற தண்மலர் நான்முகன்பார்மேல் இருப்பதொரு நூறு தானுளபூமேல் உறைகின்ற போதகம் வந்தனள்நாமேல் உறைகின்ற நாயகி ஆணையே.

7

ஆணையமாய்வருந் தாதுள் இருந்தவர்மாணைய மாய மனத்தை ஒருக்கிப்பின்பாணைய மாய பரத்தை அறிந்தபின்தாணைய மாய தனாதனன் தானே.

8

தானே எழுந்தஇத் தத்துவ நாயகிவானேர் எழுந்து மதியை விளக்கினள்தேனேர் எழுகின்ற தீபத்து ஒளியுடன்மானே நடமுடை மன்றறி யீரே.

9

அறிவான மாயையும் ஐம்புலக் கூட்டத்துஅறிவான மங்கை அருளது சேரில்பிரியா அறிவறி வார்உளம் பேணுநெறியாய சித்த நினைந்திருந் தாளே.

10

இரவும் பகலும் இலாத இடத்தேகுரவம் செய்கின்ற குழலியை நாடிஅரவம்செய் யாமல் அருளுடன் தூங்கப்பருவம்செய் யாததோர் பாலனும் ஆமே.

11

பாலனும் ஆகும் பராசத்தி தன்னோடுமேலணு காவிந்து நாதங்கள் விட்டிடமூலம தாமெனும் முத்திக்கு நேர்படச்சாலவு மாய்நின்ற தற்பரத் தாளே.

12

நின்ற பராசக்தி நீள்பரன் தன்னோடுநின்றறி ஞானமும் இச்சையு மாய் நிற்கும்நன்றறி யும்கிரி யாசக்தி நண்ணவேமன்றன வற்றுள் மருவிடுந் தானே.

13

மருவொத்த மங்கையும் தானும் உடனேஉருவொத்துநின்றமை ஒன்றும் உணரார்கருவொத்து நின்று கலக்கின போதுதிருவொத்த சிந்தைவைத்து எந்தைநின் றானே.

14

சிந்தையின் உள்ளே திரியும் சிவசத்திவிந்துவும் நாதமும் ஆயே விரிந்தனள்சந்திர பூமி சடாதரி சாத்தவிஅந்தமொடு ஆதிய தாம்வண் ணத்தாளே.

15

ஆறி யிருந்த அமுத பயோதரிமாறி யிருந்த வழியறி வாரில்லைதேறி யிருந்துநல் தீபத்து ஒளியுடன்ஊறி யிருந்தனள் உள்ளுடை யார்க்கே.

16

உடையவன் அங்கி உருத்திர சோதிவிடையவன் ஏறி விளங்கி இருக்கும்கடையவர் போயிடும் கண்டவர் நெஞ்சத்துஅடையது வாகிய சாதகர் தாமே.

17

தாமேல் உறைவிடம் ஆறிதழ் ஆனதுபார்மேல் இதழ்பதி னெட்டிரு நூறுளபூமேல் உறைகின்ற புண்ணியம் வந்தனள்பார்மேல் உறைகின்ற பைந்தொடி யாளே.

18

பைந்தொடி யாளும் பரமன் இருந்திடத்திண்கொடி யாகத் திகழ்திரு சோதியாம்விண்கொடி யாகி விளங்கி வருதலால்பெண்கொடி யாக நடந்தது உலகே.

19

நடந்தது அம்மலர் நாலுடன் அஞ்சாய்இருந்தனர் கன்னிகள் எட்டுடன் ஒன்றாய்ப்படர்ந்தது தன்வழி பங்கயத் துள்ளேதொடர்ந்தது உள்வழி சோதி யடுத்தே.

20

அடுக்குத் தாமரை ஆதி இருப்பிடம்எடுக்கும் தாமரை இல்லகத்து உள்ளதுமடுக்கும் தாமரை மத்தகச் தேசெலமுடுக்கும் தாமரை முச்சது ரத்தே.

21

முச்சது ரத்தே எழுந்த முளைச்சுடர்எச்சது ரத்தும் இடம்பெற ஓடிடக்கைச்சது ரத்துக் கடந்துள் ஒளிபெறஎச்சது ரத்தும் இருந்தனள் தானே.

22

இருந்தனள் தன்முகம் ஆறொடு நாலாய்ப்பரந்தன வாயு திசைதிசை தோறும்குவிந்தன முத்தின் முகவொளி நோக்கிநடந்தது தேறல் அதோமுகம் அம்பே.

23

அம்பன்ன கண்ணி அரிவை மனோன்மனிகொம்பன்ன நுண்ணிடை கோதை குலாவியசெம்பொன்செய் யாக்கை செறிகமழ் நாடொறும்நம்பனை நோக்கி நவிலுகின் றாளே.

24

நவிலும் பெருந்தெய்வம் நான்மறைச் சத்திதுகிலுடை யாடை நிலம்பொதி பாதம்அகிலமும் அண்ட முழுதும் செம்மாந்துபுகலும்முச் சோதி புனையநிற் பாளே.

25

புனையவல் லாள் புவனத்துஇறை எங்கள்வனையவல் லாள் அண்டகோடிகள் உள்ளேபுனையவல் லாள்மண் டலத்தொளி தன்னைப்புனையவல் லாளையும் போற்றியென் பேனே.

26

போற்றியென் பேன்புவ னாபதி அம்மையென்ஆற்றலுள் நிற்கும் அருந்தவப் பெண்பிள்ளைசீற்றங் கடிந்த திருநுதற் சேயிழைகூற்றம் துரக்கின்ற கொள்பைந் தொடியே.

27

தொடியார் தடக்கைச் சுகோதய சுந்தரிவடிவார் திரிபுரை யாமங்கை சங்கைச்செடியார் வினைகெடச் சேர்வரை என்றென்அடியார் வினைகெடுத்து ஆதியும் ஆமே.

28

மெல்லிசைப் பாவை வியோமத்தின் மென்கொடிபல்லிசைப் பாவை பயன்தரு பைங்கொடிபுல்லிசைப் பாவை யைப் போகத் துரந்திட்டுவல்லிசைப் பாவை மனம்புகுந் தாளே..
சொற்பிரிப்பு
மெல்லிசைப் பாவை வியோமத்தின் மென்கொடிபல்லிசைப் பாவை பயன்தரு பைங்கொடிபுல்லிசைப் பாவை யைப் போகத் துரந்திட்டுவல்லிசைப் பாவை மனம்புகுந் தாளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

29

தாவித் தவப்பொருள் தான்அவன் எம்இறைபாவித்து உலகம் படைக்கின்ற காலத்துமேவிப் பராசக்தி மேலொடு கீழ்தொடர்ந்துஆவிக்கும் அப்பொருள் தானது தானே.

30

அதுஇது என்பர் அவனை அறியார்கதிவர நின்றதோர் காரணம் காணார்மதுவிரி பூங்குழல் மாமங்கை நங்கைதிதமது உன்னார்கள் தேர்ந்துஅறி யாரே.