திருமுறை 10 · 10.04.06 · 49

நான்காம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

பன்னிரண் டாங்கலை ஆதி பயிரவிதன்னில் அகாரமும் மாயையும் கற்பித்துப்பன்னிரண்டு ஆதியோடு அந்தம் பதினாலும்சொல்நிலை சோடசம் அந்தம் என்று ஓதிடே.
சொற்பிரிப்பு

உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

அந்தம் பதினாலும் அதுவே வயிரவிமுந்து நடுவும் முடிவும் முதலாகச்சிந்தைக் கமலத்து எழுகின்ற மாசத்திஅந்தமும் ஆதியும் ஆகிநின்றாளே.

3

ஆகின்ற மூவரும் அங்கே அடங்குவர்போகின்ற பூதம் பொருந்து புராதரர்சார்கின்ற சார்வுழிச் சாரார் சதிர்பெறப்போகுந் திரிபுரை புண்ணியத் தோரே.

4

புண்ணிய நந்தி புனிதன் திருவாகும்எண்ணிய நாட்கள் இருபத்தேழ் சூழ்மதிபண்ணிய வன்னி பகலோன் மதியீறுதிண்ணிய சிந்தைதன் தென்னனும் ஆமே.

5

தென்னன் திருநந்தி சேவகன் தன்னொடும்பொன்னங் கிரியில் பூதலம் போற்றிடும்பன்னும் பரிபிடி அந்தம் பகவனோடுஉன்னும் திரிபுரை ஓதிநின் றானுக்கே.

6

ஓதிய நந்தி உணரும் திருவருள்நீதியில் வேத நெறிவந்து உரைசெய்யும்போதம் இருபத்து எழுநாள் புணர்மதிசோதி வயிரவி சூலம்வந்து ஆளுமே.

7

சூலம் கபாலம் கை ஏந்திய சூலிக்குநாலாங் கரமுள நாகபா சாங்குசமாலங் கயனறி யாத வடிவுக்குமேல்அங்க மாய்நின்ற மெல்லிய லாளே.

8

மெல்லியல் வஞ்சி விடமி கலைஞானிசொல்லிய கிஞ்சுக நிறமன்னு சேயிழைகல்லியல் ஒப்பது காணும் திருமேனிபல்லியல் ஆடையும் பன்மணி தானே.

9

பன்மணி சந்திர கோடி திருமுடிசொன்மணி குண்டலக்காதி உழைக்கண்ணிநன்மணி சூரிய சோம நயனத்தள்பொன்மணி வன்னியும் பூரிக்கின் றாளே.

10

பூரித்த பூவிதழ் எட்டினுக்கு உள்ளேயோர்ஆரியத் தாள்உண்டுஅங்கு எண்மர் கன்னியர்பாரித்த பெண்கள் அறுபத்து நால்வரும்சாரித்துத் சத்தியைத் தாங்கள் கண்டாரே.
சொற்பிரிப்பு
பூரித்த பூவிதழ் எட்டினுக்கு உள்ளேயோர்ஆரியத் தாள்உண்டுஅங்கு எண்மர் கன்னியர்பாரித்த பெண்கள் அறுபத்து நால்வரும்சாரித்துத் சத்தியைத் தாங்கள் கண்டாரே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

கண்ட சிலம்பு வளைசங்கு சக்கரம்எண்டிசை யோகி இறைவி பராசக்திஅண்டமோடு எண்டிசை தாங்கும் அருட்செல்விபுண்டரி கத்தினுள் பூசனை யாளே.

12

பூசனை கெந்தம் புனைமலர் மாகொடியோசனை பஞ்சத்து ஒலிவந்து உரைசெய்யும்வாசம்இ லாத மணிமந் திரயோகம்தேசம் திகழும் திரிபுரை காணே.

13

காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறுபூணும் பலபல பொன்போலத் தோற்றிடும்பேணும் சிவனும் பிரமனும் மாயனும்காணும் தலைவிநற் காரணி காணே.

14

காரணி மந்திரம் ஓதுங் கமலத்துப்பூரண கும்ப விரேசம் பொருந்தியநாரணி நந்தி நடுஅங்கு உரைசெய்தஆரண வேதநூல் அந்தமும் ஆமே.

15

அந்த நடுவிரல் ஆதி சிறுவிரல்வந்த வழிமுறை மாறி உரை செய்யும்செந்தமிழ் ஆதி தெளிந்து வழிபடுநந்தி இதனை நவம் உரைத்தானே.

16

உரைத்த நவசத்தி ஒன்று முடியநிரைத்த இராசி நெடுமுறை எண்ணிப்பிரைச்சதம் எட்டுமுன் பேசிய நந்திநிரைத்து நியதி நியமம்செய் தானே.

17

தாமக் குழலி தயைக்கண்ணி உள்நின்றஏமத்து இருளற வீசும் இளங்கொடிஓமப் பெருஞ்சுடர் உள்எழு நுண்புகைமேவித்து அமுதொடு மீண்டது காணே.

18

காணும் இருதய மந்திர முங்கண்டுபேணும் நமஎன்று பேசும் தலைமேலேவேணு நடுவு மிகநின்ற ஆகுதிபூணு நடுஎன்ற அந்தம் சிகையே.

19

சிகைநின்ற அந்தக் கவசங்கொண்டு ஆதிப்பகைநின்ற அங்கத்தைப் பாரென்று மாறித்தொகைநின்ற நேத்திர முத்திரை சூலம்வகைநின்ற யோனி வகுத்தலும் ஆமே.

20

வருத்தம் இரண்டும் சிறுவிரன் மாறிப்பொருந்தி அணிவிரல் சுட்டிப் பிடித்துநெரித்தொன்ற வைத்து நெடிது நடுவேபெருத்த விரல்இரண்டு உள்புக்குப் பேசே.

21

பேசிய மந்திரம் இகாரம் பிரித்துரைகூசமி லாத சகாரத்தை முன்கொண்டுவாசிப் பிராணன் உபதேசம் ஆகைக்குக்கூசியவிந்து வுடன் கொண்டு கூவே.

22

கூவிய சீவன் பிராணன் முதலாகப்பாவிய சவ்வுடன் பண்ணும் யகாரத்தைமேவிய மாயை விரிசங்கு முத்திரைதேவி நடுவுள் திகழ்ந்துநின் றாளே.

23

நின்ற வயிரவி நீலி நிசாசரிஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்துச்சென்றருள் நாயகி தேவர் பிரானுக்கேநன்றருள் ஞாலத்து நாடிடும் சாற்றியே.

24

சாற்றிய வேதம் சராசரம் ஐம்பூதம்நாற்றிசை முக்கண்ணி நாடும் இருள்வெளிதோற்றும் உயிர்ப்பன்மை சோதி பராபரைஆற்றலொடு ஆய்நிற்கும் ஆதி முதல்வியே.

25

ஆதி வயிரவி கன்னித் துறைமன்னிஓதி உணரில் உடலுயிர் ஈசனாம்பேதை உலகிற் பிறவிகள் நாசமாம்ஓத உலவாக் கோலம் ஒன்று ஆகுமே.

26

கோலக் குழவி குலாய புருவத்தள்நீலக் குவளை மலரன்ன கண்ணினாள்ஆலிக்கும் இன்னமுது ஆனந்த சுந்தரிமேலைச் சிவத்தை வெளிப்படுத் தாளே.

27

வெளிப்படு வித்து விளைவுஅறி வித்துத்தெளிப்படு வித்துஎன் சிந்தையின் உள்ளேகளிப்படு வித்துக் கதிர்ப்படு சோதிஒளிப்படு வித்துஎன்னை உய்யக்கொண்டாளே.

28

கொண்டனள் கோலங் கோடி அநேகங்கள்கண்டனள் எண்ணெண் கலையின் கண் மாலைகள்விண்டனள் மேலை விரிகதிர் மூன்றையும்தண்டலை மேல்நின்ற தையல் நல் லாளே.

29

தையல் நல் லாளைத் தவத்தின் தலைவியைமையலை நோக்கும் மனோன்மனி மங்கையைப்பையநின் றேத்திப் பணிமின் பணிந்தபின்வெய்ய பவம்இனி மேவகி லாவே.

30

வேயன தோளி விரையுறு மென்மலர்ஏய குழலி இளம்பிறை ஏந்திழைதூய சடைமுடிச் சூலினி சுந்தரிஏயெனது உள்ளத்து இனிதுஇருந் தாளே.

31

இனியதென் மூலை இருக்குங் குமரிதனியொரு நாயகி தானே தலைவிதனிப்படு வித்தனள் சார்வு படுத்துநனிப்படு வித்துள்ளம் நாடிநின் றாளே.

32

நாடிகள் மூன்று நடுஎழு ஞாளத்துக்கூடி யிருந்த குமரி குலக்கன்னிபாடகச் சீறடிப் பைம்பொற் சிலம்பொலிஊடக மேவி உறங்குகின் றாளே.

33

உறங்கும் அளவில் மனோன்மனி வந்துகறங்கும் வளைக்கைக் கழுத்தாரப் புல்லிப்பிறங்கொளித் தம்பலம் வாயில் உமிழ்ந்திட்டுஉறங்கல்ஐ யாஎன்று உபாயம்செய் தாளே.

34

உபாயம் அளிக்கும் ஒருத்தியென் உள்ளத்துஅபாயம் அறக்கெடுத்து அன்பு விளைத்துச்சுவாவை விளக்கும் சுழியகத் துள்ளேஅவாவை அடக்கிவைத்து அஞ்சல்என் றாளே.

35

அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளைசெஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழைதஞ்சமென்று எண்ணித்தன் சேவடி போற்றுவார்க்குஇன்சொல் அளிக்கும் இறைவியென் றாரே.

36

ஆருயி ராயும் அருந்தவப் பெண்பிள்ளைகாரியல் கோதையள் காரணி நாரணிஊரும் உயிரும் உலகும் ஒடுக்கிடும்கோரியென் உள்ளம் குலாவிநின் றாளே.

37

குலாவிய கோலக் குமரியென் னுள்ளம்நிலாவி யிருந்து நெடுநாள் அணைந்தும்உலாவி இருந்துணர்ந்து உச்சியின் உள்ளேகலாவி இருந்த கலைத்தலை யாளே.

38

கலைத்தலை நெற்றியோர் கண்ணுடைக் கண்ணுள்முலைத்தலை மங்கை முயங்கி இருக்கும்சிலைத்தலை யாய தெரிவினை நோக்கிஅலைத்தபூங் கொம்பினள் அங்கிருந் தாளே.

39

இருந்தனள் ஏந்திழை என்னுள்ளம் மேவிப்பொருந்திய நால்விரல் புக்கனள் புல்லித்திருந்திய தாணுவில் சேர்ந்துடன் ஒன்றிஅருந்தவம் எய்தினள் ஆதியி னாளே.

40

ஆதி அனாதி அகாரணி காரணிசோதிய சோதி சுகபர சுந்தரிமாது சமாதி மனோன்மனி மங்கலிஓதிஎன் உள்ளத்து உடன்இயைந் தாளே.

41

இயைந்தனள் ஏந்திழை என்உள்ளம் மேவிநயந்தனள் அங்கே நமசிவ என்னும்அயன்தனை யோரும் பதமது பற்றும்பெயர்ந்தனள் மற்றும் பிதற்றுஅறுத் தாளே.

42

பிதற்றிக் கழிந்தனர் பேதை மனிதர்முயற்றியின் முத்தி அருளும் முதல்விகயற்றிகழ் முக்கண்ணுங் கம்பலைச் செவ்வாய்முகத்தருள் நோக்கமும் முன்னுள்ள தாமே.

43

உள்ளத்து இதயத்து நெஞ்சத்தொரு மூன்றுள்பிள்ளைத் தடம்உள்ளே பேசப் பிறந்ததுவள்ளல் திருவின் வயிற்றுனுள் மாமாயைக்கள்ள ஒளியின் கருத்தாகுங் கன்னியே.

44

கன்னியுங் கன்னி அழிந்திலள்காதலிதுன்னியங் கைவரைப் பெற்றனள் தூய்மொழிபன்னிய நன்னூற் பகவரும் அங்குளஎன்னேஇம் மாயை இருளது தானே.

45

இருளது சத்தி வெளியதுஎம் அண்ணல்பொருளது புண்ணியர் போகத்துள் இன்பம்தெருளது சிந்தையைத் தெய்வம்என்று எண்ணில்அருளது செய்யும்எம் ஆதிப் பிரானே.

46

ஆதி அனாதியும் ஆய பராசக்திபாதிபராபரை மேலுறை பைந்தொடிமாது சமாதி மனோன்மனி மங்கலிஓதும்என் உள்ளத்து உடன்முகிழ்த் தாளே.

47

ஓதிய வண்ணம் கலையின் உயர்கலைஆதியில் வேதமே யாம்என்று அறிகிலர்சாதியும் பேதமும் தத்துவ மாய்நிற்பள்ஆதியென்று ஓதினள் ஆவின் கிழத்தியே.

48

ஆவின் கிழத்திநல் ஆவடு தண்துறைநாவின் கிழத்தி நலம்புகழ்ந்து ஏத்திடும்தேவின் கிழத்தி திருவாம் சிவமங்கைமேவும் கிழத்தி வினைகடிந் தாளே.

49

வினைகடிந் தார்உள்ளத்து உள்ளொளி மேவித்தனைஅடைந் தோர்க்கெல்லாம் தத்துவ மாய்நிற்பள்எனைஅடிமைக் கொண்ட ஏந்திழை ஈசன்கணவனைக் காண அனாதியும் ஆமே.