திருமுறை 10 · 10.04.01 · 30

நான்காம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தைத்தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடிசாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தைஏற்றுகின் றேன்நம் பிரான்ஓர் எழுத்தே.
சொற்பிரிப்பு

உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

ஓரெழுத் தாலே உலகெங்கும் தானாகிஈரெழுத் தாலே இசைந்துஅங்கு இருவராய்மூவெழுத் தாலே முளைக்கின்ற சோதியைமாவெழுத் தாலே மயக்கமே உற்றதே.

3

தேவர் உறைகின்ற சிற்றம் பலம்என்றுந்தேவர் உறைகின்ற சிதம்பரம் என்றுந்தேவர் உறைகின்ற திருஅம் பலமென்றுந்தேவர் உறைகின்ற தென்பொது வாமே.

4

ஆமே பொன் னம்பலம் அற்புதம் ஆனந்தம்ஆமே திருக்கூத்து அனவரத தாண்டவம்ஆமே பிரளயம் ஆகும்அத் தாண்டவம்ஆமேசங் காரத்து அருந்தாண் டவங்களே.

5

தாண்டவ மான தனியெழுத்து ஓரெழுத்துதாண்டவ மானது அனுக்கிரகத் தொழில்தாண்டவக் கூத்துததனிநின்ற தற்பரம்தாண்டவக் கூத்துத் தமனியந் தானே.

6

தானே பரஞ்சுடர் தத்துவ மாய்நிற்கும்தானே அகார உகாரம தாய்நிற்கும்தானே பரஞ்சுடர் தத்துவக் கூத்துக்குத்தானே தனக்குத் தராதலம் தானே.

7

தராதல மூலைக்குத் தற்பர மாபரன்தராதலம் வெப்பு நமசி வாயவாந்தராதலம் சொல்லில் தான்வா சியவாகும்தராதல யோகம் தயாவாசி யாமே.

8

ஆமே சிவங்கள் அகார உகாரங்கள்ஆமே பரங்கள் அறியா இடம்என்பஆமே திருக்கூத்து அடங்கிய சிற்பரம்ஆமே சிவகதி ஆனந்த மாமே.

9

ஆனந்த மூன்றும் அறிவுஇரண்டு ஒன்றாகும்ஆனந்தம் சிவாய அறிவார் பலரில்லைஆனந்த மோடும் அறியவல் லார்கட்டுஆனந்தக் கூத்தாய் அகப்படும் தானே.

10

படுவது இரண்டும் பலகலை வல்லார்படுவது ஓங்காரம் பஞ்சாக் கரங்கள்படுவது சங்காரத் தாண்டவப் பத்திபடுவது கோணம் பரந்திடும் வாறே.

11

வாறே சதாசிவ மாறிலா ஆகமம்வாறே சிவகதி வண்டுறை பின்னையும்வாறே திருக்கூத்து ஆகம வசனங்கள்வாறே பொதுவாகும் மன்றின் அமலமே.

12

அமலம் பதிபசு பாசங்கள் ஆகமம்அமலம் திரோதாயி யாகுமா னந்தமாம்அமலம் சொல் ஆணவம் மாயை காமியம்அமலம் திருக்கூத்தங்கு ஆமிடம் தானே.

13

தானே தனக்குத் தலைவனு மாய்நிற்கும்தானே தனக்குத் தன்மலை யாய்நிற்கும்தானே தனக்குத் தன்மய மாய்நிற்கும்தானே தனக்குத் தலைவனும் ஆமே.

14

தலைவனு மாய்நின்ற தற்பரக் கூத்தனைத்தலைவனு மாய்நின்ற சற்பாத் திரத்தைத்தலைவனு மாய்நின்ற தாதவிழ் ஞானத்தலைவனு மாய்நின்ற தாளிணை தானே.

15

இணையார் திருவடி எட்டெழுத் தாகும்இணையார் கழலிணை ஈர்ஐஞ்ச தாகும்இணையார் கழலிணை ஐம்பத் தொன்றாகும்இணையார் கழலிணை ஏழா யிரமே.

16

ஏழா யிரமாய் இருபதாய் முப்பதாய்ஏழா யிரத்தும் ஏழுகோடி தானாகிஏழா யிரத்துயிர் எண்ணிலா மந்திரம்ஏழா யிரண்டாய் இருக்கின்ற வாறே.

17

இருக்கின்ற மந்திரம் ஏழா யிரமாம்இருக்கின்ற மந்திரம் எத்திறம் இல்லைஇருக்கின்ற மந்திரம் சிவன்திரு மேனிஇருக்கின்ற மந்திரம் இவ்வண்ணம் தானே.

18

தானே தனக்குத் தகுநட்டம் தானாகும்தானே அகார உகாரம தாய்நிற்கும்தானே ரீங்காரத் தத்துவக் கூத்துக்குத்தானே உலகில் தனிநடந் தானே.

19

நடம்இரண்டு ஒன்றே நளினம தாகும்நடம்இரண்டு ஒன்றே நமன்செய்யும் கூத்துநடம்இரண்டு ஒன்றே நகைசெயா மந்திரம்நடம்சிவ லிங்கம் நலஞ்செம்பு பொன்னே.

20

செம்பொன் ஆகும் சிவாய நமஎன்னில்செம்பொன் ஆகத் திரண்டது சிற்பரம்செம்பொன் ஆகும் ஸ்ரீயும் கிரீயுமெனச்செம்பொன் ஆன திருஅம் பலமே.

21

திருஅம் பலமாகச் சீர்ச்சக் கரத்தைத்திருஅம் பலமாக ஈராறு கீறித்திருஅம் பலமாக இருபத்தைஞ் சாக்கித்திருஅம் பலமாகச் செபிக்கின்ற வாறே.

22

வாறே சிவாய நமச்சி வாயநமவாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லைவாறே அருளால் வளர்கூத்துக் காணலாம்வாறே செபிக்கில் வரும்செம்பு பொன்னே.

23

பொன்னான மந்திரம் புகலவும் ஒண்ணாதுபொன்னான மந்திரம் பொறிகிஞ்சு கத்தாகும்பொன்னான மந்திரம் புகையுண்டு பூரிக்கிற்பொன்னாகும் வல்லோர்க்கு உடம்பு பொற் பாதமே

24

பொற்பாதம் காணலாம் புத்திரர் உண்டாகும்பொற்பாதத்து ஆணையே செம்புபொன் ஆயிடும்பொற்பாதம் காணத் திருமேனி ஆயிடும்பொற்பாத நன்னடம் சிந்தனை சொல்லுமே.

25

சொல்லும் ஒருகூட்டில் புக்குச் சுகிக்கலாம்நல்ல மடவார் நயத்துட னேவரும்சொல்லினும் பாசச் சுடர்ப்பாம்பு நீங்கிடும்சொல்லும் திருக்கூத்தின் சூக்குமம் தானே.

26

சூக்குமம் எண்ணா யிரஞ்செபித் தாலும்மேல்சூக்கும மான வழியிடைக் காணலாம்சூக்கும மான வினையைக் கெடுக்கலாம்சூக்கும மான சிவனதுஆ னந்தமே.

27

ஆனந்தம் ஆனந்தம் ஒன்றென்று அறிந்திடஆனந்தம் ஆனந்தம் ஆஈஊஏஓம் என்று அறைந்திடஆனந்தம் ஆனந்தம் அஞ்சுமது ஆயிடும்ஆனந்தம் ஆம்ஹ்ரீம்ஹம் க்ஷம் ஹாம்ஆகுமே.
சொற்பிரிப்பு
ஆனந்தம் ஆனந்தம் ஒன்றென்று அறிந்திடஆனந்தம் ஆனந்தம் ஆஈஊஏஓம் என்று அறைந்திடஆனந்தம் ஆனந்தம் அஞ்சுமது ஆயிடும்ஆனந்தம் ஆம்ஹ்ரீம்ஹம் க்ஷம் ஹாம்ஆகுமே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

28

மேனி இரண்டும் விலங்காமல் மேற்கொள்ளமேனி இரண்டும் மிகார விகாரியாமேனி இரண்டும் ஊஆஈஏஓ என்றுமேனி இரண்டும் ஈஓஊஆஏ கூத்தாமே.

29

கூத்தே சிவாய நமமசி யாயிடும்கூத்தே ஈஊஆஏஓம் சிவாய நம வாயிடும்கூத்தே இஉஅஎஒ சிவயநம வாயிடும்கூத்தே ஈஊஆஏஓம் நமசிவாய கோளொன்று மாறே.

30

ஒன்றிரண்டு ஆடவோர் ஒன்றும் உடனாடஒன்றினின் மூன்றாட ஓரேழும் ஒத்தாடஒன்றினால்1 ஆடவோர் ஒன்பதும் உடனாடமன்றினில் ஆடினான் மாணிக்கக் கூத்தே.பா-ம் : 1 ஒன்றினில் நாலாட ஒன்பதுமாட
சொற்பிரிப்பு
ஒன்றிரண்டு ஆடவோர் ஒன்றும் உடனாடஒன்றினின் மூன்றாட ஓரேழும் ஒத்தாடஒன்றினால் ஆடவோர் ஒன்பதும் உடனாடமன்றினில் ஆடினான் மாணிக்கக் கூத்தே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.