திருமுறை 10 · 10.03.18 · 26

மூன்றாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

கட்டக் கழன்று கீழ்நான்று வீழாமல்அட்டத்தைக் கட்டி அடுப்பை அணைகோலிவிட்டத்தைப் பூட்டி மேற்பையைத் தாட்கோத்துநட்ட மிருக்க நமனில்லை தானே
சொற்பிரிப்பு

உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

வண்ணான் ஒலிக்குஞ் சதுரப் பலகைமேற்கண்ணாறு மோழை படாமற் கரைகட்டி1விண்ணாறு பாய்ச்சிக் குளத்தை 2நிரப்பினால்அண்ணாந்து பார்க்க அழுக்கற்ற வாறேபா-ம் : 1விண்ணாற்றைத் தேக்கி 2நிரப்பிட்டு
சொற்பிரிப்பு
வண்ணான் ஒலிக்குஞ் சதுரப் பலகைமேற்கண்ணாறு மோழை படாமற் கரைகட்டிவிண்ணாறு பாய்ச்சிக் குளத்தை நிரப்பினால்அண்ணாந்து பார்க்க அழுக்கற்ற வாறே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித்துதிக்கையால் உண்பார்க்குச் சோரவும் வேண்டாம்உறக்கத்தை நீக்கி உணரவல் லார்க்கட்கிறக்கவும் வேண்டாம் இருக்கலு மாமே

4

ஆய்ந்துரை செய்யில் அமுதநின் றூறிடும்வாய்ந்துரை செய்யும் வருகின்ற காலத்துநீந்துரை செய்யில் நிலாமண் டலமதாய்ப்பாய்ந்துரை செய்தது பாலிக்கு மாறே

5

நாவின் நுனியை நடுவே சிவிறிடிற்சீவனும் அங்கே சிவனும் உறைவிடம்மூவரு முப்பத்து மூவருந் தோன்றுவர்சாவதும் இல்லை சதகோடி யூனே

6

ஊனூறல் பாயும் உயர்வரை உச்சிமேல்வானூறல் பாயும் வகையறி வாரில்லைவானூறல் பாயும் வகையறி வாளர்க்குத்தேனூறல் உண்டு தெளியலு மாமே

7

மேலையண் ணாவில் விரைந்திரு காலிடிற்காலனும் இல்லை கதவுந் திறந்திடும்ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்பாலனு மாவான் பராநந்தி ஆணையே

8

நந்தி முதலாக நாமேலே யேறிட்டுச்சந்தித் திருக்கில் தரணி முழுதாளும்பந்தித் திருக்கும் பகலோன் வெளியாகச்சிந்தித் திருப்பவர் தீவினை யாளரே

9

தீவினை யாடத் திகைத்தங் கிருந்தவர்நாவினை நாடின் நமனுக் கிடமில்லைபாவினை நாடிப் பயனறக் கண்டவர்தேவினை யாடிய தீங்கரும் பாமே

10

தீங்கரும் பாகவே செய்தொழி லுள்ளவர்ஆங்கரும் பாக அடையநா வேறிட்டுக்கோங்கரும் பாகிய கோணை நிமிர்த்திடஊங்கரும் பாகியே ஊனீர் வருமே

11

ஊனீர் வழியாக வுண்ணாவை யேறிட்டுத்தேனீர் பருகிச் சிவாய நமவென்றுகானீர் வரும்வழி கங்கை தருவிக்கும்வானீர் வரும்வழி வாய்ந்தறி வீரே

12

வாய்ந்தறிந் துள்ளே வழிபாடு செய்தவர்காய்ந்தறி வாகக் கருணை பொழிந்திடும்பாய்ந்தறிந் துள்ளே படிக்கத வொன்றிட்டுக்கூய்ந்தறிந்1 துள்ளுறை கோயிலு மாமேபா-ம் : 1கோய்ந்தறிந்
சொற்பிரிப்பு
வாய்ந்தறிந் துள்ளே வழிபாடு செய்தவர்காய்ந்தறி வாகக் கருணை பொழிந்திடும்பாய்ந்தறிந் துள்ளே படிக்கத வொன்றிட்டுக்கூய்ந்தறிந் துள்ளுறை கோயிலு மாமே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

13

கோயிலின் உள்ளே குடிசெய்து வாழ்பவர்தாயினும் நல்லார் தரணி முழுதுக்குங்காயினும் நல்லவர் காய்ந்தவர் தம்முளுந்தீயினுந் தீயரத் தீவினை யாளர்க்கே

14

தீவினை யாளர்த்தஞ் சென்னியி லுள்ளவன்பூவினை யாளர்தம் பொற்பதி யானவன்பாவினை யாளர்தம் பாகவத் துள்ளவன்மாவினை யாளர்தம் மதியிலுள் ளானே

15

மதியி நெழுங்கதிர் போலப் பதினாறாய்ப்பதிமனை நூறு1நூற் றிருபத்து நாலாய்க்கதிமனை யுள்ளே கணைகள் பரப்பிஎதிர்மலை யாமல் இருந்தனன் தானேபா-ம் : 1நூற்றைம்பதோ டொன்றாய்க் கதிமன வுள்ளே
சொற்பிரிப்பு
மதியி நெழுங்கதிர் போலப் பதினாறாய்ப்பதிமனை நூறுநூற் றிருபத்து நாலாய்க்கதிமனை யுள்ளே கணைகள் பரப்பிஎதிர்மலை யாமல் இருந்தனன் தானே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

16

இருந்தனள் சத்தியு மக்கலை சூழஇருந்தனள் கன்னியு மந்நடு வாகஇருந்தனள் மானேர் முகநில வாரஇருந்தனள் தானும் அமுதம் பொழிந்தே

17

பொழிந்த இருவெள்ளி பொன்மன் றடையில்வழிந்துள் ளிருந்தது வான்முத லங்குக்கழிந்தது போகாமற் காக்கவல் லார்க்குக்கொழுந்தது வாகுங் குணமது தானே

18

குணமது வாகிய கோமள வல்லிமணமது வாக மகிழ்ந்தங் கிருக்கில்தனமது வாகிய தத்துவ ஞானம்இனமது வாக இருந்தனன் தானே

19

இருந்த பிராணனும் உள்ளே எழுமாம்பரிந்தஇத் தண்டுடன் அண்டம் பரியவிரிந்தஅப் பூவுடன் மேலெழ வைக்கின்மலர்ந்தது மண்டலம் வாழலு மாமே

20

மண்டலத் துள்ளே மனவொட்டி யாணத்தைக்கண்டகத் தங்கே கருதியே கீழ்க்கட்டிப்பண்டகத் துள்ளே பகலே ஒளியாகக்குண்டலக் காதனுங் கூத்தொழிந் தானே

21

ஒழிகின்ற வாயுவும் உள்ளே அமருங்கழிகின்ற வாயுவுங் காக்கலு மாகும்வழிகின்ற காலத்து வட்டக் கழலைப்பழிக்கின்ற காலத்துப் பையகற் றீரே

22

பையினி னுள்ளே படிக்கத வொன்றிடின்மெய்யினி னுள்ளே விளங்கும் ஒளியதாங்கையினுள் வாயுக் கதித்தங் கெழுந்திடின்மையணி கோயில் மணிவிளக் காமே

23

விளங்கிடும் வாயுவை மேலெழ உன்னி1நலங்கிடுங் கண்டத்து நாபியி னுள்ளேவணங்கிடு மண்டலம் வாய்த்திடக் கும்பிச்சுணங்கிட நின்றவை சொல்லலு மாமேபா-ம் : 1நலங்கிடுங் காமத்து நாடியி னுள்ளே
சொற்பிரிப்பு
விளங்கிடும் வாயுவை மேலெழ உன்னிநலங்கிடுங் கண்டத்து நாபியி னுள்ளேவணங்கிடு மண்டலம் வாய்த்திடக் கும்பிச்சுணங்கிட நின்றவை சொல்லலு மாமே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

24

சொல்லலு மாயிடு மாகத்து வாயுவுஞ்சொல்லலு மாகு மண்ணீர்க் கடினமுஞ்சொல்லலு மாகும் இவையஞ்சுங் கூடிடிற்சொல்லலு மாந்தூர தெரிசனந் தானே

25

தூர தெரிசனஞ் சொல்லுவன் காணலாங்காராருங் கண்ணி கடைஞான முட்பெய்திஏராருந் தீபத் தெழிற்சிந்தை வைத்திடிற்பாரா ருலகம் பகன்முன்ன தாமே

26

முன்னெழு நாபிக்கு முந்நால் விரற்கீழேபன்னெழு வேதப் பகலொளி யுண்டென்னும்நன்னெழு நாதத்து நற்றீபம் வைத்திடத்தன்னெழு கோயில் தலைவனு மாமே