திருமுறை 10 · 10.03.13 · 16

மூன்றாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேஉடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே
சொற்பிரிப்பு
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேஉடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான் என்றுஉடம்பினை யானிருந் தோம்புகின் றேனே
சொற்பிரிப்பு
உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான் என்றுஉடம்பினை யானிருந் தோம்புகின் றேனே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

சுழற்றிக்1 கொடுக்கவே சுத்திக் கழியுங்கழற்றி மலத்தைக் கமலத்துப் பூரித்துஉழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்குஅழற்றித் தவிர்ந்துடல் அஞ்சன மாமேபா-ம் : 1சுழித்துக்
சொற்பிரிப்பு
சுழற்றிக் கொடுக்கவே சுத்திக் கழியுங்கழற்றி மலத்தைக் கமலத்துப் பூரித்துஉழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்குஅழற்றித் தவிர்ந்துடல் அஞ்சன மாமே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

அஞ்சனம் போன்றுட லையறு மந்தியில்வஞ்சக வாத மறுமத்தி யானத்திற்செஞ்சிறு காலையிற் செய்திடிற் பித்தறும்நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே
சொற்பிரிப்பு
அஞ்சனம் போன்றுட லையறு மந்தியில்வஞ்சக வாத மறுமத்தி யானத்திற்செஞ்சிறு காலையிற் செய்திடிற் பித்தறும்நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

மூன்று மடக்குடைப் பாம்பிரண் டெட்டுளவேன்ற வியந்திரம் பன்னிரண் டங்குலம்1நான்றவிம் முட்டை யிரண்டையுங் கட்டியிட்டுஊன்றி யிருக்க உடம்பழி யாதேபா-ம் : 1நான்றவிழ்
சொற்பிரிப்பு
மூன்று மடக்குடைப் பாம்பிரண் டெட்டுளவேன்ற வியந்திரம் பன்னிரண் டங்குலம்நான்றவிம் முட்டை யிரண்டையுங் கட்டியிட்டுஊன்றி யிருக்க உடம்பழி யாதே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

நூறும் அறுபதும் ஆறும் வலம்வரநூறும் அறுபதும் ஆறும் இடம்வரநூறும் அறுபதும் ஆறும் எதிரிடநூறும் அறுபது மாறும் புகுவரே
சொற்பிரிப்பு
நூறும் அறுபதும் ஆறும் வலம்வரநூறும் அறுபதும் ஆறும் இடம்வரநூறும் அறுபதும் ஆறும் எதிரிடநூறும் அறுபது மாறும் புகுவரே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

சத்தியார் கோயி லிடம்வலஞ் சாதித்தான்மத்தியா னத்திலே 1வாத்தியங் கேட்கலாந்தித்தித்த கூத்துஞ் சிவனும் வெளிப்படுஞ்சத்தியஞ் 2சொன்னோஞ் சதாநந்தி ஆணையேபா-ம் : 1வாக்கியங் 2சொன்னேன்
சொற்பிரிப்பு
சத்தியார் கோயி லிடம்வலஞ் சாதித்தான்மத்தியா னத்திலே வாத்தியங் கேட்கலாந்தித்தித்த கூத்துஞ் சிவனும் வெளிப்படுஞ்சத்தியஞ் சொன்னோஞ் சதாநந்தி ஆணையே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

திறத்திறம் விந்து திகழு மகாரமுறப்பெற வேநினைந் தோதுஞ் சகாரமறிப்பது மந்திர மன்னிய நாதமறப்பெற யோகிக் கறநெறி யாமே
சொற்பிரிப்பு
திறத்திறம் விந்து திகழு மகாரமுறப்பெற வேநினைந் தோதுஞ் சகாரமறிப்பது மந்திர மன்னிய நாதமறப்பெற யோகிக் கறநெறி யாமே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

உந்திச் சுழியி1 னுடனேர் பிராணனைச்சிந்தித் தெழுப்பிச் சிவமந்திரத்தினால்முந்தி முகட்டின் நிறுத்தி அபானனைச்சிந்தித் தெழுப்பச் சிவனவ னாமேபா-ம் : 1னுடனே
சொற்பிரிப்பு
உந்திச் சுழியி னுடனேர் பிராணனைச்சிந்தித் தெழுப்பிச் சிவமந்திரத்தினால்முந்தி முகட்டின் நிறுத்தி அபானனைச்சிந்தித் தெழுப்பச் சிவனவ னாமே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

மாறா மலக்குதந் தன்மே லிருவிரற்கூறா இலிங்கத்தின் கீழே குறிக்கொண்மின்ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன்கூறா உபதேசங் கொண்டது காணுமே
சொற்பிரிப்பு
மாறா மலக்குதந் தன்மே லிருவிரற்கூறா இலிங்கத்தின் கீழே குறிக்கொண்மின்ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன்கூறா உபதேசங் கொண்டது காணுமே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

நீல நிறனுடை நேரிழை யாளொடுஞ்சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்குஞாலம் அறிய நரைதிரை மாறிடும்பாலனு மாவர் பராநந்தி ஆணையே
சொற்பிரிப்பு
நீல நிறனுடை நேரிழை யாளொடுஞ்சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்குஞாலம் அறிய நரைதிரை மாறிடும்பாலனு மாவர் பராநந்தி ஆணையே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

அண்டஞ்சுருங்கில் அதற்கோ ரழிவில்லைபிண்டஞ் சுருங்கிற் பிராணன் நிலைபெறும்உண்டி சுருங்கில் உபாயம் பலவுளகண்டங் கறுத்த கபாலியு மாமே
சொற்பிரிப்பு
அண்டஞ்சுருங்கில் அதற்கோ ரழிவில்லைபிண்டஞ் சுருங்கிற் பிராணன் நிலைபெறும்உண்டி சுருங்கில் உபாயம் பலவுளகண்டங் கறுத்த கபாலியு மாமே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

13

பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலைஅண்டத்துள் உற்று அடுத்தடுத் தேகிடில்வண்டிச் சிக்கு மலர்க்குழல் மாதரார்கண்டிச் சிக்குநற் காயமு மாமே
சொற்பிரிப்பு
பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலைஅண்டத்துள் உற்று அடுத்தடுத் தேகிடில்வண்டிச் சிக்கு மலர்க்குழல் மாதரார்கண்டிச் சிக்குநற் காயமு மாமே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

14

சுழலும் பெருங்கூற்றுத் தொல்லைமுன் சீறிஅழலும் இரத்தத்துள் அங்கியுள் ஈசன்கழல்கொள் திருவடி காண்குறில் ஆங்கேநிழலுளுந் தெற்றுளும் நிற்றலு மாமே
சொற்பிரிப்பு
சுழலும் பெருங்கூற்றுத் தொல்லைமுன் சீறிஅழலும் இரத்தத்துள் அங்கியுள் ஈசன்கழல்கொள் திருவடி காண்குறில் ஆங்கேநிழலுளுந் தெற்றுளும் நிற்றலு மாமே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

15

நான்கண்ட வன்னியும் நாலு கலையேழுந்தான்கண்ட 1வாயுச் சரீர முழுதொடும்ஊன்கண்டு கொண்ட வுணர்வு மருந்தாகமான்கன்று நின்று வளர்க்கின்ற வாறேபா-ம் : 1வாயுவுஞ்சரீர
சொற்பிரிப்பு
நான்கண்ட வன்னியும் நாலு கலையேழுந்தான்கண்ட வாயுச் சரீர முழுதொடும்ஊன்கண்டு கொண்ட வுணர்வு மருந்தாகமான்கன்று நின்று வளர்க்கின்ற வாறே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

16

ஆகுஞ் சனவேத சத்தியை அன்புற1நீகொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையைப்பாகு படுத்திப் பல்கோடி களத்தினால்ஊழ்கொண்ட மந்திரத் தன்னால் ஒடுங்கேபா-ம் : 1நீர்கொள நெல்லின்
சொற்பிரிப்பு
ஆகுஞ் சனவேத சத்தியை அன்புறநீகொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையைப்பாகு படுத்திப் பல்கோடி களத்தினால்ஊழ்கொண்ட மந்திரத் தன்னால் ஒடுங்கே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.