திருமுறை 10 · 10.03.14 · 30

மூன்றாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

மதிவட்ட மாக வரையைந்து நாடிஇதுவிட்டிங் கீரா றமர்ந்த அதனாற்பதிவட்டத் துள்நின்று பாலிக்கு மாறுமதுவிட்டுப் போமாறு மாயலுற் றேனே
சொற்பிரிப்பு
மதிவட்ட மாக வரையைந்து நாடிஇதுவிட்டிங் கீரா றமர்ந்த அதனாற்பதிவட்டத் துள்நின்று பாலிக்கு மாறுமதுவிட்டுப் போமாறு மாயலுற் றேனே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

உற்றறி வைந்தும் உணர்ந்தறி வாறேழுங்கற்றறி வெட்டுங் கலந்தறி வொன்பதும்பற்றிய பத்தும் பலவகை நாழிகைஅற்ற தறியா1 தழிகின்ற வாறேபா-ம் : 1அற்றறியா
சொற்பிரிப்பு
உற்றறி வைந்தும் உணர்ந்தறி வாறேழுங்கற்றறி வெட்டுங் கலந்தறி வொன்பதும்பற்றிய பத்தும் பலவகை நாழிகைஅற்ற தறியா தழிகின்ற வாறே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

அழிகின்ற ஆண்டவை ஐயைஞ்சு மூன்றுமொழிகின்ற முப்பத்து மூன்றென்ப தாகுங்கழிகின்ற காலறு பத்திரண் டென்பதெழுகின்ற ஈரைம்ப தெண்ணற் றிருந்தே
சொற்பிரிப்பு
அழிகின்ற ஆண்டவை ஐயைஞ்சு மூன்றுமொழிகின்ற முப்பத்து மூன்றென்ப தாகுங்கழிகின்ற காலறு பத்திரண் டென்பதெழுகின்ற ஈரைம்ப தெண்ணற் றிருந்தே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

திருந்து தினமத் தினத்தினொடு நின்றிருந்தறி நாளொன் றிரண்டெட்டு மூன்றுபொருந்திய நாளொடு புக்கறிந் தோங்கிவருந்துத லின்றி மனைபுக லாமே
சொற்பிரிப்பு
திருந்து தினமத் தினத்தினொடு நின்றிருந்தறி நாளொன் றிரண்டெட்டு மூன்றுபொருந்திய நாளொடு புக்கறிந் தோங்கிவருந்துத லின்றி மனைபுக லாமே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

மனைபுகு வீரும் மகத்திடை நாடிஎனவிரு பத்தஞ்சும் ஈரா றதனால்தனையறிந் தேறட்டுத் தற்குறி யாறுவினையறி யாறு விளங்கிய நாலே
சொற்பிரிப்பு
மனைபுகு வீரும் மகத்திடை நாடிஎனவிரு பத்தஞ்சும் ஈரா றதனால்தனையறிந் தேறட்டுத் தற்குறி யாறுவினையறி யாறு விளங்கிய நாலே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

நாலுங் கடந்தது நால்வரும் நாலைந்துபாலங் கடந்தது பத்துப் பதினைந்துகோலங் கடந்த குணத்தாண்டு மூவிரண்டாலங் கடந்ததொன் றாரறி வாரே
சொற்பிரிப்பு
நாலுங் கடந்தது நால்வரும் நாலைந்துபாலங் கடந்தது பத்துப் பதினைந்துகோலங் கடந்த குணத்தாண்டு மூவிரண்டாலங் கடந்ததொன் றாரறி வாரே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

ஆறும் இருபதுக் கையஞ்சு மூன்றுக்குந்தேறு மிரண்டு மிருபத்தொ டாறிவைகூறு மதியொன் றினுக்கிரு பத்தேழுவேறு பதியங்க ணாள்விதித் தானே
சொற்பிரிப்பு
ஆறும் இருபதுக் கையஞ்சு மூன்றுக்குந்தேறு மிரண்டு மிருபத்தொ டாறிவைகூறு மதியொன் றினுக்கிரு பத்தேழுவேறு பதியங்க ணாள்விதித் தானே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

விதித்த இருபத்தெட் டொடுமூன் றறையாகத்தொகுத்தறி முப்பத்து மூன்று தொகுமின்பதித்தறி 1பத்தெட்டும் பாரா திகணால்உதித்தறி மூன்றிரண் டொன்றின் முறையேபா-ம் : 1பத்தெட்டுப்
சொற்பிரிப்பு
விதித்த இருபத்தெட் டொடுமூன் றறையாகத்தொகுத்தறி முப்பத்து மூன்று தொகுமின்பதித்தறி பத்தெட்டும் பாரா திகணால்உதித்தறி மூன்றிரண் டொன்றின் முறையே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

முறைமுறை யாய்ந்து முயன்றில ராகில்இறையிறை யார்க்கும் இருக்க அரிதுமறையது காரண மற்றொன்று மில்லைபறையறை யாது பணிந்து முடியே
சொற்பிரிப்பு
முறைமுறை யாய்ந்து முயன்றில ராகில்இறையிறை யார்க்கும் இருக்க அரிதுமறையது காரண மற்றொன்று மில்லைபறையறை யாது பணிந்து முடியே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

முடிந்த தறியார் முயல்கின்ற மூர்க்கர்இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டுகடிந்தனன் மூளக் கதுவவல் லார்க்குநடந்திடும் பாரினில் நண்ணலு மாமே
சொற்பிரிப்பு
முடிந்த தறியார் முயல்கின்ற மூர்க்கர்இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டுகடிந்தனன் மூளக் கதுவவல் லார்க்குநடந்திடும் பாரினில் நண்ணலு மாமே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

நண்ணு சிறுவிர னாணாக மூன்றுக்கும்பின்னிய மார்பிடைப் பேராமல் ஒத்திடுஞ்சென்னியின் மூன்றுக்குஞ் சேரவே 1நின்றிடும்உன்னி 2யுணர்ந்திடும் ஓவியந் தானேபா-ம் : 1நின்றிடில் 2அணைந்திடும்
சொற்பிரிப்பு
நண்ணு சிறுவிர னாணாக மூன்றுக்கும்பின்னிய மார்பிடைப் பேராமல் ஒத்திடுஞ்சென்னியின் மூன்றுக்குஞ் சேரவே நின்றிடும்உன்னி யுணர்ந்திடும் ஓவியந் தானே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

ஓவிய மான வுணர்வை அறிமின்கள்பாவிக ளித்தின் பயனறி வாரில்லைதீவினை யாமுடன் மண்டல மூன்றுக்கும்பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே
சொற்பிரிப்பு
ஓவிய மான வுணர்வை அறிமின்கள்பாவிக ளித்தின் பயனறி வாரில்லைதீவினை யாமுடன் மண்டல மூன்றுக்கும்பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

13

தண்டுடன் ஓடித் தலைப்பெய்த யோகிக்குமண்டல மூன்று 1மகிழ்ந்துடல் ஒத்திடுங்கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன்பிண்டம் பிரியப் பிணங்குகின் றாரேபா-ம் : 1மகிழ்ந்துடன்
சொற்பிரிப்பு
தண்டுடன் ஓடித் தலைப்பெய்த யோகிக்குமண்டல மூன்று மகிழ்ந்துடல் ஒத்திடுங்கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன்பிண்டம் பிரியப் பிணங்குகின் றாரே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

14

பிணங்கி அழிந்திடும் பேறது கேள்நீஅணங்குட னாதித்த னாறு விரியின்வணங்குட னேவந்த வாழ்வு குலைந்துசுணங்கனுக் காகச் சுழல்கின்ற வாறே
சொற்பிரிப்பு
பிணங்கி அழிந்திடும் பேறது கேள்நீஅணங்குட னாதித்த னாறு விரியின்வணங்குட னேவந்த வாழ்வு குலைந்துசுணங்கனுக் காகச் சுழல்கின்ற வாறே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

15

சுழல்கின்ற வாறின் துணைமலர் காணான்தழலிடைப் புக்கிடுந் தன்னு ளிலாமற்கழல்கண்ட போம்வழி காணவல் லார்க்குக்குழல்வழி நின்றிடுங் கூத்தனு மாமே
சொற்பிரிப்பு
சுழல்கின்ற வாறின் துணைமலர் காணான்தழலிடைப் புக்கிடுந் தன்னு ளிலாமற்கழல்கண்ட போம்வழி காணவல் லார்க்குக்குழல்வழி நின்றிடுங் கூத்தனு மாமே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

16

கூத்தன் குறியிற் குணம்பல கண்டவர்சாத்திரந் தன்னைத் தலைப்பெய்து நிற்பர்கள்பார்த்திருந் துள்ளே அனுபோக நோக்கிடில்ஆத்தனு மாகி யமர்ந்திடு மொன்றே
சொற்பிரிப்பு
கூத்தன் குறியிற் குணம்பல கண்டவர்சாத்திரந் தன்னைத் தலைப்பெய்து நிற்பர்கள்பார்த்திருந் துள்ளே அனுபோக நோக்கிடில்ஆத்தனு மாகி யமர்ந்திடு மொன்றே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

17

ஒன்றில் வளர்ச்சி உலப்பிலி கேளினிநன்றென்று மூன்றுக்கு நாளது சென்றிடுஞ்சென்றிடு முப்பதுஞ் சேர இருந்திடிற்குன்றிடைப் பொன்திகழ் கூத்தனு மாமே
சொற்பிரிப்பு
ஒன்றில் வளர்ச்சி உலப்பிலி கேளினிநன்றென்று மூன்றுக்கு நாளது சென்றிடுஞ்சென்றிடு முப்பதுஞ் சேர இருந்திடிற்குன்றிடைப் பொன்திகழ் கூத்தனு மாமே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

18

கூத்தவன் ஒன்றிடுங் கூர்மை அறிந்தங்கேஏத்துவர் பத்தினில் எண்டிசை தோன்றிடப்பார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடிற்சாத்திடு நூறு தலைப்பெய்ய லாமே
சொற்பிரிப்பு
கூத்தவன் ஒன்றிடுங் கூர்மை அறிந்தங்கேஏத்துவர் பத்தினில் எண்டிசை தோன்றிடப்பார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடிற்சாத்திடு நூறு தலைப்பெய்ய லாமே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

19

சாத்திடு நூறு தலைப்பெய்து நின்றவர்காத்துடல் ஆயிரங் கட்டுறக் காண்பர்கள்சேர்த்துடல் ஆயிரஞ் சேர இருந்தவர்மூத்துடன் 1கோடி யுகமது வாமேபா-ம் : 1கூடி
சொற்பிரிப்பு
சாத்திடு நூறு தலைப்பெய்து நின்றவர்காத்துடல் ஆயிரங் கட்டுறக் காண்பர்கள்சேர்த்துடல் ஆயிரஞ் சேர இருந்தவர்மூத்துடன் கோடி யுகமது வாமே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

20

உகங்கோடி கண்டும் ஒசிவற நின்றுஅகங்கோடி 1கண்டு ளயலறக் காண்பர்கள்சிவங்கோடி விட்டுச் செறிய இருந்தங்குகங்கோடி கண்டங் குயருறு வாரேபா-ம் : 1கண்டு ளயர்வறக்
சொற்பிரிப்பு
உகங்கோடி கண்டும் ஒசிவற நின்றுஅகங்கோடி கண்டு ளயலறக் காண்பர்கள்சிவங்கோடி விட்டுச் செறிய இருந்தங்குகங்கோடி கண்டங் குயருறு வாரே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

21

உயருறு வாருல கத்தொடுங் கூடிப்பயனுறு வார்பலர் தாமறி யாமற்செயலுறு வார்சிலர் சிந்தையி லாமற்கயலுறு கண்ணியைக் காணகி லாரே
சொற்பிரிப்பு
உயருறு வாருல கத்தொடுங் கூடிப்பயனுறு வார்பலர் தாமறி யாமற்செயலுறு வார்சிலர் சிந்தையி லாமற்கயலுறு கண்ணியைக் காணகி லாரே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

22

காணகி லாதார் கழிந்தோடிப் போவர்கள்நாணகி லாதார் நயம்பேசி விடுவர்கள்காணகி லாதார் கழிந்த பொருளெலாங்காணகி லாமற் கழிகின்ற வாறே
சொற்பிரிப்பு
காணகி லாதார் கழிந்தோடிப் போவர்கள்நாணகி லாதார் நயம்பேசி விடுவர்கள்காணகி லாதார் கழிந்த பொருளெலாங்காணகி லாமற் கழிகின்ற வாறே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

23

கழிகின்ற அப்பொருள் காணகி லாதார்கழிகின்ற அப்பொருள் காணலு மாகுங்கழிகின்ற வுள்ளே கருத்துற நோக்கிற்கழியாத அப்பொருள் காணலு மாமே
சொற்பிரிப்பு
கழிகின்ற அப்பொருள் காணகி லாதார்கழிகின்ற அப்பொருள் காணலு மாகுங்கழிகின்ற வுள்ளே கருத்துற நோக்கிற்கழியாத அப்பொருள் காணலு மாமே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

24

கண்ணன் பிறப்பிலி காணந்தி யாயுள்ளேஎண்ணுந் திசையுடன் ஏகாந்த னாயிடுந்திண்ணென் றிருக்குஞ் சிவகதி 1யாநிற்கும்நண்ணும் பதமிது நாடவல் லார்கட்கேபா-ம் : 1யாய்நிற்கும்
சொற்பிரிப்பு
கண்ணன் பிறப்பிலி காணந்தி யாயுள்ளேஎண்ணுந் திசையுடன் ஏகாந்த னாயிடுந்திண்ணென் றிருக்குஞ் சிவகதி யாநிற்கும்நண்ணும் பதமிது நாடவல் லார்கட்கே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

25

நாடவல் லார்க்கு நமனில்லை கேடில்லைநாடவல் லார்கள் நரபதி யாய்நிற்பர்தேடவல் லார்கள் தெரிந்த பொருளிதுகூடவல் லார்கட்குக் கூறலு மாமே
சொற்பிரிப்பு
நாடவல் லார்க்கு நமனில்லை கேடில்லைநாடவல் லார்கள் நரபதி யாய்நிற்பர்தேடவல் லார்கள் தெரிந்த பொருளிதுகூடவல் லார்கட்குக் கூறலு மாமே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

26

கூறும் பொருளி தகார வுகாரங்கள்தேறும் பொருளிது சிந்தையுள் நின்றிடக்கூறு மகாரங் குழல்வழி யோடிடஆறும் அமர்ந்திடும் அண்ணலு மாமே
சொற்பிரிப்பு
கூறும் பொருளி தகார வுகாரங்கள்தேறும் பொருளிது சிந்தையுள் நின்றிடக்கூறு மகாரங் குழல்வழி யோடிடஆறும் அமர்ந்திடும் அண்ணலு மாமே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

27

அண்ணல் இருப்பிட மாரும் அறிகிலர்அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக்கண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்அண்ணலைக் காணில் அவனிவ வாகுமே
சொற்பிரிப்பு
அண்ணல் இருப்பிட மாரும் அறிகிலர்அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக்கண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்அண்ணலைக் காணில் அவனிவ வாகுமே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

28

அவனிவ நாகும் பரிசறி வாரில்லைஅவனிவ நாகும் பரிசது கேள்நீஅவனிவ னோசை ஒளியினுள் ஒன்றிடும்அவனிவன் வட்டம தாகிநின் றானே
சொற்பிரிப்பு
அவனிவ னாபரிசறி வாரில்லைஅவனிவ னாகும் பரிசது கேள்நீஅவனிவ னோசை ஒளியினுள் ஒன்றிடும்அவனிவன் வட்டம தாகிநின் றானே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

29

வட்டங்க ளேழு மலர்ந்திடும் உம்முளேசிட்டன் இருப்பிடஞ் சேர அறிகிலீர்ஒட்டி யிருந்துள் உபாயம் உணர்ந்திடக்கட்டி இருப்பிடங் காணலு மாகுமே
சொற்பிரிப்பு
வட்டங்க ளேழு மலர்ந்திடும் உம்முளேசிட்டன் இருப்பிடஞ் சேர அறிகிலீர்ஒட்டி யிருந்துள் உபாயம் உணர்ந்திடக்கட்டி இருப்பிடங் காணலு மாகுமே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

30

காணலு மாகும் பிரமன் அரியென்றுகாணலு மாகுங் கறைக்கண்டன் ஈசனைக்காணலு மாகுஞ் சதாசிவ சத்தியுங்காணலு மாகுங் கலந்துடன் வைத்ததே
சொற்பிரிப்பு
காணலு மாகும் பிரமன் அரியென்றுகாணலு மாகுங் கறைக்கண்டன் ஈசனைக்காணலு மாகுஞ் சதாசிவ சத்தியுங்காணலு மாகுங் கலந்துடன் வைத்ததே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.