திருமுறை 10 · 10.03.08 · 20

மூன்றாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

வருமாதி யீரெட்டுள் வந்த தியானம்பொருவாத புந்தி புலன்போக மேவல்உருவாய சத்தி பரத்தியான முன்னுங்குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே
சொற்பிரிப்பு
வருமாதி யீரெட்டுள் வந்த தியானம்பொருவாத புந்தி புலன்போக மேவல்உருவாய சத்தி பரத்தியான முன்னுங்குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

கண்ணாக்கு மூக்குச் செவிஞானக் கூட்டத்துட்பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்(டு)அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப்1புண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறேபா-ம் : 1பிண்ணாக்கி
சொற்பிரிப்பு
கண்ணாக்கு மூக்குச் செவிஞானக் கூட்டத்துட்பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்(டு)அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப்புண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன்னைக்கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில்விண்ணாறு வந்து வெளிகண் டிடவோடிப்பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே
சொற்பிரிப்பு
ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன்னைக்கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில்விண்ணாறு வந்து வெளிகண் டிடவோடிப்பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

ஒருபொழு துன்னார் உடலோ டுயிரைஒருபொழு துன்னார் உயிருட் சிவனைஒருபொழு துன்னார் சிவனுறை சிந்தையைஒருபொழு துன்னார் சந்திரப் 1பூவேபா-ம் : 1பூவையே
சொற்பிரிப்பு
ஒருபொழு துன்னார் உடலோ டுயிரைஒருபொழு துன்னார் உயிருட் சிவனைஒருபொழு துன்னார் சிவனுறை சிந்தையைஒருபொழு துன்னார் சந்திரப் பூவே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச்சினத்து விளக்கினைச் செல்ல நெருக்கிஅனைத்து விளக்குந் திரியொக்கத் தூண்டமனத்து விளக்கது மாயா விளக்கே
சொற்பிரிப்பு
மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச்சினத்து விளக்கினைச் செல்ல நெருக்கிஅனைத்து விளக்குந் திரியொக்கத் தூண்டமனத்து விளக்கது மாயா விளக்கே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்கண்ணார் அமுதினைக் கண்டறி வாரில்லைஉண்ணாடிக் குள்ளே ஒளியுற 1நோக்கினால்கண்ணாடி போலக் 2கலந்துநின் றானேபா-ம் : 1நோக்கிற் 1நோக்கிடிற், 2கலந்திருந்தானே
சொற்பிரிப்பு
எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்கண்ணார் அமுதினைக் கண்டறி வாரில்லைஉண்ணாடிக் குள்ளே ஒளியுற நோக்கினால்கண்ணாடி போலக் கலந்துநின் றானே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

நாட்டமும் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லைஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை1தேட்டமும் இல்லை சிவனவ னாமேபா-ம் : 1வேட்டமும்
சொற்பிரிப்பு
நாட்டமும் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லைஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லைதேட்டமும் இல்லை சிவனவ னாமே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட்டுயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித்துயரற நாடியே தூங்கவல் லார்க்குப்பயனிது காயம் பயமில்லை தானே
சொற்பிரிப்பு
நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட்டுயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித்துயரற நாடியே தூங்கவல் லார்க்குப்பயனிது காயம் பயமில்லை தானே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

மணிகடல் யானை 1வார்குழல் மேகம்அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ்தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும்பணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதேபா-ம் : 1வளர்க்குழல்
சொற்பிரிப்பு
மணிகடல் யானை வார்குழல் மேகம்அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ்தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும்பணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

கடலொடு மேகங் களிறொடும் ஓசைஅடவெழும் வீணை அண்டரண் டத்துச்1சுடர்மன்னு வேணுச் சுரிசங்கின் ஓசைதிடமறி யோகிக்கல் லாற்றெறி யாதேபா-ம் : 1சுடர்மனு 1சுடர்மணி
சொற்பிரிப்பு
கடலொடு மேகங் களிறொடும் ஓசைஅடவெழும் வீணை அண்டரண் டத்துச்சுடர்மன்னு வேணுச் சுரிசங்கின் ஓசைதிடமறி யோகிக்கல் லாற்றெறி யாதே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும்பாசம் இயங்கும் பரிந்துய ராய்நிற்கும்ஓசை யதன்மணம் போல விடுவதோர்ஓசையாம் ஈசன் உணரவல் லார்க்கே
சொற்பிரிப்பு
ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும்பாசம் இயங்கும் பரிந்துய ராய்நிற்கும்ஓசை யதன்மணம் போல விடுவதோர்ஓசையாம் ஈசன் உணரவல் லார்க்கே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

நாத முடிவிலே நல்லாள் இருப்பதுநாத முடிவிலே நல்யோகம் இருப்பதுநாத முடிவிலே நாட்டம் இருப்பதுநாத முடிவிலே நஞ்சுண்ட கண்டனே
சொற்பிரிப்பு
நாத முடிவிலே நல்லாள் இருப்பதுநாத முடிவிலே நல்யோகம் இருப்பதுநாத முடிவிலே நாட்டம் இருப்பதுநாத முடிவிலே நஞ்சுண்ட கண்டனே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

13

உதிக்கின்ற ஆறினும் உள்ளங்கி ஐந்துந்துதிக்கின்ற தேசுடைத் தூங்கிருள் நீங்கிஅதிக்கின்ற 1ஐவருள் நாதம் ஒடுங்கக்கதிக்கொன்றை ஈசன் கழல்சேர லாமேபா-ம் : 1ஐவர் அருள்நாதமோடும்
சொற்பிரிப்பு
உதிக்கின்ற ஆறினும் உள்ளங்கி ஐந்துந்துதிக்கின்ற தேசுடைத் தூங்கிருள் நீங்கிஅதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்கக்கதிக்கொன்றை ஈசன் கழல்சேர லாமே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

14

பள்ளி அறையிற் பகலே இருளில்லைகொள்ளி அறையிற் கொளுந்தாமற் காக்கலாம்ஒள்ளி தறியிலோ ரோசனை நீளிதுவெள்ளி அறையில் விடிவில்லை தானே
சொற்பிரிப்பு
பள்ளி அறையிற் பகலே இருளில்லைகொள்ளி அறையிற் கொளுந்தாமற் காக்கலாம்ஒள்ளி தறியிலோ ரோசனை நீளிதுவெள்ளி அறையில் விடிவில்லை தானே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

15

கொண்ட விரதங் குறையாமற் றானொன்றித்தண்டுடன் ஓடித் தலைப்பட்ட யோகிக்குமண்டல மூன்றினும் ஒக்க வளர்ந்தபின்பிண்டமும் ஊழி பிரியா திருக்குமே
சொற்பிரிப்பு
கொண்ட விரதங் குறையாமற் றானொன்றித்தண்டுடன் ஓடித் தலைப்பட்ட யோகிக்குமண்டல மூன்றினும் ஒக்க வளர்ந்தபின்பிண்டமும் ஊழி பிரியா திருக்குமே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

16

அவ்வவர் மண்டல மாம்பரி சொன்றுண்டுஅவ்வவர் மண்டலத் தவ்வவர் தேவராம்அவ்வவர் மண்டலம் அவ்வவர்க் கேவரில்அவ்வவர் மண்டல மாயமற் றோர்க்கே
சொற்பிரிப்பு
அவ்வவர் மண்டல மாம்பரி சொன்றுண்டுஅவ்வவர் மண்டலத் தவ்வவர் தேவராம்அவ்வவர் மண்டலம் அவ்வவர்க் கேவரில்அவ்வவர் மண்டல மாயமற் றோர்க்கே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

17

இளைக்கின்ற நெஞ்சத் திருட்டறை உள்ளேமுளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித்துளைப்பெரும் பாசந் துருவிடு மாகில்இளைப்பின்றி மார்கழி ஏற்றம தாமே
சொற்பிரிப்பு
இளைக்கின்ற நெஞ்சத் திருட்டறை உள்ளேமுளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித்துளைப்பெரும் பாசந் துருவிடு மாகில்இளைப்பின்றி மார்கழி ஏற்றம தாமே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

18

முக்குண மூடற வாயுவை மூலத்தேசிக்கென மூடித் திரித்துப் பிடித்திட்டுத்தக்க வலமிடம் நாழிகை சாதிக்கவைக்கும் உயர்நிலை வானவர் கோனே
சொற்பிரிப்பு
முக்குண மூடற வாயுவை மூலத்தேசிக்கென மூடித் திரித்துப் பிடித்திட்டுத்தக்க வலமிடம் நாழிகை சாதிக்கவைக்கும் உயர்நிலை வானவர் கோனே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

19

நடலித்த நாபிக்கு நால்விரன் மேலேமடலித்த வாணிக் கிருவிரல் உள்ளேகடலித் திருந்து கருதவல் லார்கள்சடலத் தலைவனைத் தாமறிந் தாரே
சொற்பிரிப்பு
நடலித்த நாபிக்கு நால்விரன் மேலேமடலித்த வாணிக் கிருவிரல் உள்ளேகடலித் திருந்து கருதவல் லார்கள்சடலத் தலைவனைத் தாமறிந் தாரே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

20

அறிவாய1 சத்தென்னு மாறா றகன்றுசெறிவான மாயை சிதைத்தரு ளாலேபிறியாத பேரரு ளாயிடும் பெற்றிநெறியான அன்பர் நிலையறிந் தாரேபா-ம் : 1அறியா யசத்தென்னு
சொற்பிரிப்பு
அறிவாய சத்தென்னு மாறா றகன்றுசெறிவான மாயை சிதைத்தரு ளாலேபிறியாத பேரரு ளாயிடும் பெற்றிநெறியான அன்பர் நிலையறிந் தாரே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.