திருமுறை 10 · 10.03.09 · 14

மூன்றாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும்சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்திசமாதி யமாதியில் தங்கினோர்க் கன்றேசமாதி யமாதி தலைப்படுந் தானே
சொற்பிரிப்பு

உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடிற்சந்தியி லான சமாதியிற் கூடிடும்அந்த மிலாத அறிவின் அரும்பொருள்சுந்தரச் சோதியுந் தோன்றிடுந் தானே

3

மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டுமன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லைமன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்குமன்மனத் துள்ளே மனோலய மாமே

4

விண்டலர் கூபமும் விஞ்சத் தடவியுங்-கண்டுணர் வாகக் கருதி யிருப்பர்கள்செண்டு வௌiயிற் செழுங்கிரி யத்திடைகொண்டு குதிரை குசைசெறுத் தாரே
சொற்பிரிப்பு
விண்டலர் கூபமும் விஞ்சத் தடவியுங்-கண்டுணர் வாகக் கருதி யிருப்பர்கள்செண்டு வெளியிற் செழுங்கிரி யத்திடைகொண்டு குதிரை குசைசெறுத் தாரே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

மூல நாடி 1முகட்டல குச்சியுள்நாலு வாசல் நடுவுள் இருப்பிர்காள்மேலை வாசல் வெளியுறக் கண்டபின்காலன் வார்த்தை கனாவிலும் இல்லையேபா-ம் : 1முக்கடல்
சொற்பிரிப்பு
மூல நாடி முகட்டல குச்சியுள்நாலு வாசல் நடுவுள் இருப்பிர்காள்மேலை வாசல் வெளியுறக் கண்டபின்காலன் வார்த்தை கனாவிலும் இல்லையே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

மண்டலம் ஐந்து வரைகளும் ஈராறுகொண்டிட நிற்குங் குடிகளும் ஆறெண்மர்கண்டிட நிற்குங் கருத்து நடுவாகஉண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே

7

பூட்டொத்து மெய்யிற் பொறிபட்ட வாயுவைத்தேட்டற்ற வந்நிலஞ் சேரும் படிவைத்துநாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத்தோட்டத்து மாம்பழந் தூங்கலு மாமே

8

உருவறி யும்பரி சொன்றுண்டு வானோர்கருவரை பற்றிக் கடைந்தமு துண்டார்அருவரை யேறி அமுதுண்ண மாட்டார்திருவரை யாமனந் தீர்ந்தற்ற வாறே

9

நம்பனை யாதியை நான்மறை ஓதியைச்செம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியைஅன்பினை யாக்கி யருத்தி ஒடுக்கிப்போய்க்கொம்பேறிக் கும்பிட்டுக் கூட்டமிட் டாரே

10

மூலத்து மேலது முச்சது ரத்ததுகாலத் திசையிற் கலக்கின்ற சந்தினில்மேலைப் பிறையினில் நெற்றிநேர் நின்றகோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே

11

கற்பனை யற்றுக் கனல்வழி யேசென்றுசிற்பனை எல்லாஞ் சிருட்டித்த பேரொளிப்பொற்பினை நாடிப் புணர்மதி யோடுற்றுத்தற்பர மாகத் தகுந்தண் சமாதியே

12

தலைப்பட் டிருந்திடத் தத்துவங் கூடும்வலைப்பட் டிருந்திடும் மாதுநல் லாளுங்குலைப்பட் டிருந்திடுங் கோபம் அகலுந்துலைப்பட் டிருந்திடுந் தூங்கவல் லார்க்கே

13

சோதித் தனிச்சுட ராய்நின்ற தேவனும்ஆதியும் 1உள்நின்ற சீவனு மாகுமால்ஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும்ஆதி அடிபணிந் தன்புறு வாரேபா-ம் : 1முன்நின்ற
சொற்பிரிப்பு
சோதித் தனிச்சுட ராய்நின்ற தேவனும்ஆதியும் உள்நின்ற சீவனு மாகுமால்ஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும்ஆதி அடிபணிந் தன்புறு வாரே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

14

சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகஞ்சமாதிகள் வேண்டாம் இறையுட னேகிற்சமாதிதா னில்லை தானவ னாகிற்சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே