திருமுறை 10 · 10.03.06 · 10

மூன்றாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

கண்டுகண் டுள்ளே கருத்துற வாங்கிடிற்கொண்டுகொண் டுள்ளே குணம்பல காணலாம்பண்டுகந் தெங்கும் பழமறை தேடியைஇன்றுகண் டிங்கே இருக்கலு மாமே
சொற்பிரிப்பு

உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

நாபிக்குக் கீழே 1பன்னிரெண் டங்குலந்தாபிக்கு மந்திரந் தன்னை அறிகிலர்தாபிக்கு மந்திரந் தன்னை அறிந்தபின்கூவிக்கொண் டீசன் 2குடியிருந் தானேபா-ம் : 1நாலிரண்டண்-குலம் 2குடிபுகுந்தானே
சொற்பிரிப்பு
நாபிக்குக் கீழே பன்னிரெண் டங்குலந்தாபிக்கு மந்திரந் தன்னை அறிகிலர்தாபிக்கு மந்திரந் தன்னை அறிந்தபின்கூவிக்கொண் டீசன் குடியிருந் தானே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

மூலத் திருவிரல் மேலுக்கு முன்நின்றபாலித்த யோனிக் கிருவிரற் கீழ்நின்றகோலித்த குண்டலி யுள்ளேழுஞ் செஞ்சுடர்ஞாலத்து நாபிக்கு நால்விரற் கீழதே

4

நாசிக் கதோமுகம் பன்னிரண் டங்குலம்நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல்மாசித்த மாயோகம் வந்து தலைப்பெய்துந்தேகத்துக் கென்றுஞ்சிதைவில்லை 1யாமேபா-ம் : 1யாகுமே 1தானே
சொற்பிரிப்பு
நாசிக் கதோமுகம் பன்னிரண் டங்குலம்நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல்மாசித்த மாயோகம் வந்து தலைப்பெய்துந்தேகத்துக் கென்றுஞ்சிதைவில்லை யாமே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

சோதி இரேகைச் சுடரொளி தோன்றிடிற்கோதில் பரானந்தம் என்றே குறிக்கொண்மின்நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால்ஓதுவ துன்னுடல் உன்மத்த மாமே

6

மூலத் துவாரத்தை மொக்கர மிட்டிருமேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திருவேலொத்த கண்ணை வெளியில் விழித்திருகாலத்தை வெல்லுங் கருத்திது தானே

7

எருவிடும் வாசற் கிருவிரன் மேலேகருவிடும் வாசற் கிருவிரற் கீழேஉருவிடுஞ் சோதியை உள்கவல் லார்க்குக்கருவிடுஞ் சோதி கலந்துநின் றானே

8

ஒருக்கால் உபாதியை ஒண்சோதி தன்னைப்பிரித்துணர் வந்த உபாதிப் பிரிவைக்கரைத்துணர் வுன்னல் கரைதல்உள் நோக்கல்பிரத்தியா காரப் பெருமைய தாமே

9

புறப்பட்ட வாயுப் புகவிடா வண்ணந்திறப்பட்டு நிச்சயஞ் சேர்ந்துடன் நின்றால்உறப்பட்டு நின்றது உள்ளமும் அங்கேபுறப்பட்டுப் போகான் பெருந்தகை யானே

10

குறிப்பினின் உள்ளே குவலயந் தோன்றும்வெறுப்பிருள் நீங்கி விகிர்தனை நாடுஞ்சிறப்புறு சிந்தையைச் சிக்கென் றுணரில்அறிப்புறு காட்சி அமரரு மாமே