திருமுறை 10 · 10.03.01 · 4

மூன்றாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

உரைத்தன1 வற்கரி ஒன்று முடியநிரைத்த இராசி நிரைமுறை எண்ணிப்பிரச்சதம்2 எட்டும்முன் பேசியே நந்திநிரைத்த இயமம் நியமஞ்செய் தானே.பா-ம் : 1உரைத்த நவாக்கிரி 2பிரைச்சதம்
சொற்பிரிப்பு
உரைத்தன வற்கரி ஒன்று முடியநிரைத்த இராசி நிரைமுறை எண்ணிப்பிரச்சதம் எட்டும்முன் பேசியே நந்திநிரைத்த இயமம் நியமஞ்செய் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

செய்த இயம நியமஞ் சமாதிசென்றுய்யப் பராசத்தி உத்தர பூருவமெய்த கவச நியாசங்கள் முத்திரைஎய்த வுரைசெய்வன் இந்நிலை தானே.
சொற்பிரிப்பு
செய்த இயம நியமஞ் சமாதிசென்றுய்யப் பராசத்தி உத்தர பூருவமெய்த கவச நியாசங்கள் முத்திரைஎய்த வுரைசெய்வன் இந்நிலை தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

அந்நெறி இந்நெறி என்னாதட் டாங்கத்தன்னெறி சென்று சமாதியி லேநின்மின்நன்னெறி செல்வார்க்கு ஞானத்தி லேகலாம்புன்னெறி 1யாகத்திற் போக்கில்லை யாகுமே.பா-ம் : 1யாக்கத்திற்
சொற்பிரிப்பு
அந்நெறி இந்நெறி என்னாதட் டாங்கத்தன்னெறி சென்று சமாதியி லேநின்மின்நன்னெறி செல்வார்க்கு ஞானத்தி லேகலாம்புன்னெறி யாகத்திற் போக்கில்லை யாகுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

இயம நியமமே எண்ணிலா ஆதனம்நயமுறு பிராணாயாமம் 1பிரத்தி யாகாரஞ்சயமிகு தாரணை தியானஞ் சமாதிஅயமுறும் அட்டாங்க மாவது மாமே.பா-ம் : 1நண்பிரத்தி
சொற்பிரிப்பு
இயம நியமமே எண்ணிலா ஆதனம்நயமுறு பிராணாயாமம் பிரத்தி யாகாரஞ்சயமிகு தாரணை தியானஞ் சமாதிஅயமுறும் அட்டாங்க மாவது மாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.