திருமுறை 10 · 10.02.22 · 7

இரண்டாம்தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர்கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர்பெற்றிருந் தார்அன்றி யார்பெறும் பேறே.
சொற்பிரிப்பு
பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர்கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர்பெற்றிருந் தார்அன்றி யார்பெறும் பேறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

ஓரெழுத்து ஒருபொருள் உணரக் கூறியசீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் குஓர்உகம்வாரிடைக் கிருமியாய்1 மாய்வர் மண்ணிலே.2பா-ம் : 1பாரிடைக் 2படிகுவர், பழகுவர்
சொற்பிரிப்பு
ஓரெழுத்து ஒருபொருள் உணரக் கூறியசீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் குஓர்உகம்வாரிடைக் கிருமியாய் மாய்வர் மண்ணிலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடும்1சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே2பா-ம் : 1மாய்ந்திடுஞ் 2சொன்னோம்.
சொற்பிரிப்பு
பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடும்சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

மந்திரம் ஓரெழுத்து உரைத்த மாதவர்சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்பிந்திச் சுணங்காய்ப் பிறந்தொரு நூறுருவந்து புலையராய் மாய்வர்கள் மண்ணிலே.
சொற்பிரிப்பு
மந்திரம் ஓரெழுத்து உரைத்த மாதவர்சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்பிந்திச் சுணங்காய்ப் பிறந்தொரு நூறுருவந்து புலையராய் மாய்வர்கள் மண்ணிலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

ஈசன் அடியார் இதயம் கலங்கிடத்தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்நாசமது ஆகுமே நம்நந்தி ஆணையே.
சொற்பிரிப்பு
ஈசன் அடியார் இதயம் கலங்கிடத்தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்நாசமது ஆகுமே நம்நந்தி ஆணையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

சன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வரின்நன்மார்க்க மும்குன்றி ஞானமும் தங்காதுதொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப்பன்மார்க்க மும்கெட்டுப் பஞ்சமும் ஆமே.
சொற்பிரிப்பு
சன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வரின்நன்மார்க்க மும்குன்றி ஞானமும் தங்காதுதொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப்பன்மார்க்க மும்கெட்டுப் பஞ்சமும் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டுவெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதிபோன்றும்கைப்பட்ட நெய்பால் தயிர்நிற்கத் தானறக்கைப்பிட்டுண் பான்போன்றுங் கன்மிஞானிக் கொப்பே.
சொற்பிரிப்பு
கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டுவெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதிபோன்றும்கைப்பட்ட நெய்பால் தயிர்நிற்கத் தானறக்கைப்பிட்டுண் பான்போன்றுங் கன்மிஞானிக் கொப்பே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.