திருமுறை 10 · 10.02.21 · 4

இரண்டாம்தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளேஅளிவுறு வார்அம ராபதி நாடிஎளியனென்று ஈசனை நீசர் இகழில்கிளியொன்று பூஞையால் கீழது வாகுமே.
சொற்பிரிப்பு

உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம்விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார்அளிந்தமுது ஊறிய ஆதிப் பிரானைத்தளிந்தவர்ககு அல்லது தாங்கஒண் ணாதே.

3

அப்பகை யாலே அசுரரும் தேவரும்நற்பகை செய்து நடுவே முடிந்தனர்எப்பகை யாகிலும் எய்தார் இறைவனைப்பொய்ப்பகை செய்யினும் ஒன்றுபத் தாமே.

4

போகமும் மாதர் புலவி அதுநினைந்துஆகமும் உள்கலந்து அங்குஉள ராதலில்வேதிய ராயும் விகிர்தனாம் என்கின்றநீதியுள் ஈசன் நினைப்பொழி வாரே.