திருமுறை 10 · 10.02.16 · 4

இரண்டாம்தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

திலமத் தனையே சிவஞானிக்கு ஈந்தால்பலமுத்தி சித்தி பரபோக மும்தரும்நிலமத் தனைபொன்னை நின்மூடர்க்கு ஈந்தால்பலமும்அற் றேபர போகமும் குன்றுமே.
சொற்பிரிப்பு

உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

கண்டிருந் தாருயிர் உண்டிடுங் காலனைக்கொண்டிருந் தாருயிர் கொள்ளும் குணத்தனைநன்றுணர்ந் தார்க்கருள் செய்திடு நாதனைச்சென்றுணர்ந் தார்சிலர் தேவரு மாமே.

3

கைவிட்டி லேன்கரு வாகிய காலத்துமெய்விட்டி லேன்விகிர் தன்அடி தேடுவன்பொய்விட்டு நானே புரிசடை யானடிநெய்விட் டிலாத விடிஞ்சிலு மாமே.

4

ஆவன ஆவ அழிவ அழிவனபோவன போவ புகுவ புகுவனகாவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்ஏவன செய்யும் இளங்கிளை யோனே.