திருமுறை 10 · 10.02.15 · 8

இரண்டாம்தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

விஞ்ஞானர் நால்வரு மெய்ப்பிரள யாகலத்தஞ்ஞானர் மூவருந் தாங்கு சகலத்தின்அஞ்ஞானர் மூவரு மாகும் பதின்மராம்விஞ்ஞான ராதியர் வேற்றுமை தானே.
சொற்பிரிப்பு

உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

விஞ்ஞானர் கேவலத் தாரது விட்டவர்தஞ்ஞானர் அட்டவித் தேசுரஞ் சார்ந்துளோர்எஞ்ஞானர் ஏழ்கோடி மந்திர நாயகர்மெய்ஞ் ஞானர் ஆணவம் விட்டுநின் றாரே.

3

இரண்டா வதில்முத்தி எய்துவர் அத்தனைஇரண்டாவ துள்ளே இருமல பெத்தர்இரண்டாகு நூற்றெட்டு ருத்திரர் என்பர்முரண்சேர் சகலத்தர் மும்மலத் தாரே.

4

பெத்தத்த சித்தொடு பேண்முத்தச் சித்ததுஒத்திட் டிரண்டிடை யூடுற்றார் சித்துமாய்மத்தது மும்மலம் வாட்டுகை மாட்டாதார்சத்தத் தமிழ்ந்து சகலத்து ளாரே.

5

சிவமாகி ஐவகைத் திண்மலஞ் செற்றோர்அவமாகார் சித்தர்முத் தாந்தத்து வாழ்வார்பவமான தீர்வோர் பசுபாசம் அற்றோர்நவமான தத்துவம் நாடிக்கண் டோரே.1பா-ம் : 1நாடிக்கொண் டாரே
சொற்பிரிப்பு
சிவமாகி ஐவகைத் திண்மலஞ் செற்றோர்அவமாகார் சித்தர்முத் தாந்தத்து வாழ்வார்பவமான தீர்வோர் பசுபாசம் அற்றோர்நவமான தத்துவம் நாடிக்கண் டோரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

விஞ்ஞானர் ஆணவ கேவல மேவுவோர்தஞ்ஞானர் மாயையில் தங்கும் இருமலர்அஞ்ஞானர் அச்சக லத்தர் அகலராம்விஞ்ஞான ராதிகள் ஒன்பான்வே றுயிர்களே.

7

வெஞ்ஞான கன்மத்தால் மெய்யகங் கூடியேதஞ்ஞான கன்மத்தி நால்சுவர் யோனிபுக்கெஞ்ஞான மெய்தீண்டி யேயிடை யிட்டுப்போய்மெய்ஞ்ஞான ராகிச் சிவமேவல் உண்மையே.

8

ஆணவந் துற்ற வவித்தா நனவற்றோர்காணிய விந்துவா நாத சகலாதிஆணவ மாதி யடைந்தோ ரவரன்றேசேணுயர் சத்தி சிவதத் துவமாமே.