1
ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ்சாக்குகின் றானவ னாதிஎம் ஆருயிர்ஆக்குகின் றான்கர்ப்பக் கோளகை யுள்ளிருந்தாக்குகின் றான்அவன் ஆவ தறிந்தே.
சொற்பிரிப்பு

உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
2
அறிகின்ற மூலத்தின் மேல்அங்கி அப்புச்செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப்பொறைநின்ற இன்னுயிர் போந்துற நாடிப்பறிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே.

3
இன்புறு காலத் திருவர்முன் பூறியதுன்புறு பாசத் துயர்மனை வானுளன்பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்அன்புறு காலத் தமைத்தொழிந் தானே.

4
கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ்புருடன் உடலில் பொருந்துமற் றோரார்திருவின் கருக்குழி தேடிப் புகுந்ததுருவம் இரண்டாக ஓடி விழுந்ததே.

5
விழுந்தது லிங்கம் விரிந்தது யோனிஒழிந்த முதல்ஐந்தும் ஈரைந்தொ டேறிப்பொழிந்த புனல்பூதம் போற்றுங் கரணம்ஒழிந்த நுதல்உச்சி உள்ளே ஒளித்ததே.

6
பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவுந்தாவி உலகில் தரிப்பித்த வாறுபோல்மேவிய சீவனில் மெல்லநீள் வாயுவுங்கூவி அவிழுங் குறிக்கொண்ட போதே.

7
போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்1நாகமும் எட்டுடன் நாலு புரவியும்பாகன் விடானெனிற்2 பன்றியு மாமே.3பா-ம் : 1ஆகிப்படைத்தன 2விடாவிடிற் 3பந்தியு
சொற்பிரிப்பு
போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்நாகமும் எட்டுடன் நாலு புரவியும்பாகன் விடானெனிற் பன்றியு மாமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
8
ஏற எதிர்க்கில் இறையவன் றானாகும்மாற எதிர்க்கில் அரியவன் றானாகும்1நேரொக்க வைக்கின் நிகர்ப்போதத் தானாகும்பேரொத்த மைந்தனும் பேரர சாளுமே.பா-ம் : 1அரியயன்
சொற்பிரிப்பு
ஏற எதிர்க்கில் இறையவன் றானாகும்மாற எதிர்க்கில் அரியவன் றானாகும்நேரொக்க வைக்கின் நிகர்ப்போதத் தானாகும்பேரொத்த மைந்தனும் பேரர சாளுமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
9
ஏயங் கலந்த இருவர்தஞ் சாயத்துப்பாயுங் கருவும் உருவா மெனப்பலகாயங் கலந்தது காணப் பதிந்தபின்மாயங் கலந்த மனோலய மானதே.

10
கர்ப்பத்துக் கேவல மாயாள் கிளைகூட்ட1நிற்குந் துரியமும் பேதித்து நினைவெழவற்புறு காமியம் எட்டாதல் மாயேயஞ்சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே.பா-ம் : 1கிளைக்கூட்ட
சொற்பிரிப்பு
கர்ப்பத்துக் கேவல மாயாள் கிளைகூட்டநிற்குந் துரியமும் பேதித்து நினைவெழவற்புறு காமியம் எட்டாதல் மாயேயஞ்சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
11
என்பால் மிடைந்து நரம்பு வரிக்கட்டிச்செம்பால் இறைச்சி திருந்த மனைசெய்துஇன்பால் உயிர்நிலை செய்த இறையோங்கும்நன்பால் ஒருவனை நாடுகின் றேனே.1பா-ம் : 1நண்பால்
சொற்பிரிப்பு
என்பால் மிடைந்து நரம்பு வரிக்கட்டிச்செம்பால் இறைச்சி திருந்த மனைசெய்துஇன்பால் உயிர்நிலை செய்த இறையோங்கும்நன்பால் ஒருவனை நாடுகின் றேனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
12
பதஞ்செய்யும் பால்வண்ணன் மேனிப் பகலோன்இதஞ்செய்யு மொத்துடல் எங்கும் புகுந்துகுதஞ்செய்யும் அங்கியின் கோபந் தணிப்பான்விதஞ்செய்யு மாறே விதித்தொழிந் தானே.

13
ஒழிபல செய்யும் வினையுற்ற நாளேவழிபல நீராடி வைத்தெழு வாங்கிப்பழிபல செய்கின்ற பாசக் கருவைச்சுழிபல வாங்கிச் சுடாமல்வைத் தானே.

14
சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்அக்கிர மத்தே தோன்றுமவ் வியோனியும்புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல்அக்கரம் எட்டும்எண் சாணது வாகுமே.

15
போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனுங்கோசத்துள்1 ஆகங்கொணர்ந்த கொடைத்தொழில்ஏகத்துள் ஆங்கே இரண்டெட்டு மூன்றைந்துமோகத்துள் ஆங்கொரு முட்டைசெய் தானே.பா-ம் : 1கோகத்துள்
சொற்பிரிப்பு
போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனுங்கோசத்துள் ஆகங்கொணர்ந்த கொடைத்தொழில்ஏகத்துள் ஆங்கே இரண்டெட்டு மூன்றைந்துமோகத்துள் ஆங்கொரு முட்டைசெய் தானே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
16
பிண்டத்தில் உள்ளுறு பேதைப் புலன்ஐந்தும்பிண்டத்தி னூடே பிறந்து மரித்ததுஅண்டத்தின் உள்ளுறு சீவனும் அவ்வகைஅண்டத்து நாதத் தமர்ந்திடுந் தானே.

17
இலைபொறி யேற்றி யெனதுடல் ஈசன்துலைப்பொறி யிற்கரு ஐந்துட னாட்டிநிலைப்பொறி முப்பது நீர்மை கொளுவிஉலைப்பொறி ஒன்பதில் ஒன்றுசெய் தானே.

18
இன்புற் றிருவர் இசைவித்து வைத்தமண்துன்பக் கலசம் அணைவான் ஒருவனேஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டுவெந்தது சூளை விளைந்தது தானே.

19
அறியீ ருடம்பினி லாகிய வாறும்பிறியீ ரதனிற் பெருகுங் குணங்கள்செறியீ ரவற்றினுட் சித்திகள் இட்டதறியவீ ரைந்தினு ளானது பிண்டமே.

20
உடல்வைத்த வாறும் உயிர்வைத்த வாறும்மடைவைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத்திடம்வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்கடைவைத்த ஈசனைக் கைகலந் தேனே.

21
கேட்டுநின் றேன்எங்குங் கேடில் பெருஞ்சுடர்மூட்டுகின் றான்முதல் யோனி மயனவன்கூட்டுகின் றான்குழம் பின்கரு வையுருநீட்டுநின் றாகத்து நேர்ப்பட்ட வாறே.

22
பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின்காவுடைத் தீபங் கலந்து பிறந்திடும்நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப்பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே.

23
எட்டினுள் ஐந்தாகும் இந்திரி யங்களும்கட்டிய மூன்று கரணமு மாய்விடும்ஒட்டிய பாச உணர்வென்னுங் காயப்பைகட்டி அவிழ்த்திடுங் கண்ணுதல் காணுமே.

24
கண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிடப்பண்ணுதல் செய்து பசுபாசம் நீங்கிடஎண்ணிய வேதம் இசைந்த பரப்பினைமண்முத லாக வகுத்துவைத் தானே.

25
அருளல்ல தில்லை அரனவன் அன்றிஅருளில்லை யாதலி னவ்வோர் உயிரைத்தருகின்ற போதிரு கைத்தாயர் தம்பால்வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே.

26
வகுத்த பிறவியை மாதுநல் லாளுந்தொகுத்திருள் நீக்கிய சோதி யவனும்பகுத்துணர் வாக்கிய பல்லுயிர் எல்லாம்வகுத்துள்ளும் நின்றதோர் மாண்பது வாமே.

27
மாண்பது வாக வளர்கின்ற வன்னியுங்1காண்பது ஆண்பெண் அலியெனுங் கற்பனைபூண்பது மாதா பிதாவழி போலவேஆம்பதி செய்தானச் சோதிதன் ஆண்மையே.பா-ம் : 1வன்னியைக்
சொற்பிரிப்பு
மாண்பது வாக வளர்கின்ற வன்னியுங்காண்பது ஆண்பெண் அலியெனுங் கற்பனைபூண்பது மாதா பிதாவழி போலவேஆம்பதி செய்தானச் சோதிதன் ஆண்மையே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
28
ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகிற் பெண்ணாகும்பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும்தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே.

29
பாய்ந்தபின் னஞ்சோடில் ஆயுளும் நூறாகும்பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம்பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் திவ்வகைபாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலு மாமே.

30
பாய்கின்ற வாயுக் குறையிற் குறளாகும்பாய்கின்ற வாயு விளைக்கின் முடமாகும்பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும்பாய்கின்ற வாயுமா தர்க்கில்லைப்பார்க்கிலே.

31
மாதா உதரம் மலமிகில் மந்தனாம்மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லைமாதா உதரத்தில் வந்த குழவிக்கே.

32
குழவியும் ஆணாம் வலத்தது வாகில்குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்குழவியும் இரண்டாம் அபான னெதிர்க்கில்குழவி அலியாகுங் கொண்டகால் ஒக்கிலே.

33
கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில்1கொண்ட குழவியுங் கோமள மாயிடுங்கொண்டநல் வாயு இருவர்க்குங் குழறிடில்கொண்டதும் இல்லையாங் கோள்வளை யாட்கே.பா-ம் : 1ஒத்தேறில்
சொற்பிரிப்பு
கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில்கொண்ட குழவியுங் கோமள மாயிடுங்கொண்டநல் வாயு இருவர்க்குங் குழறிடில்கொண்டதும் இல்லையாங் கோள்வளை யாட்கே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
34
கோள்வளை உந்தியிற் கொண்ட குழவியுந்தால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம்பால்வளர்ந் துள்ளே பகலவன் பொன்னுருப்போல்வளர்ந் துள்ளே பொருந்துரு வாமே.

35
உருவம் வளர்ந்திடும் ஒண்டிங்கள் பத்திற்பருவம தாகவே பாரினில் வந்திடும்மருவி வளர்ந்திடு மாயையி னாலேஅருவம தாவதிங் காரறி வாரே.

36
இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள்தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்திலன்பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே.

37
இன்புற நாடி இருவருஞ் சந்தித்துத்1துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின்முன்புற நாடி நிலத்தின்முன் தோன்றியதொன்புற நாடிநின் றோதலு மாமே.பா-ம் : 1சிந்தித்துத்
சொற்பிரிப்பு
இன்புற நாடி இருவருஞ் சந்தித்துத்துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின்முன்புற நாடி நிலத்தின்முன் தோன்றியதொன்புற நாடிநின் றோதலு மாமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
38
குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிட்டால்அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்இயக்கில்லை போக்கில்லை ஏனென்ப தில்லைமயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே.

39
முதற்கிழங் காய்முளை யாயம் முளைப்பின்அதற்புத லாய்ப்பல மாய்நின் றளிக்கும்அதற்கது வாயின்ப மாவதுபோலஅதற்கது வாய்நிற்கும் ஆதிப் பிரானே.

40
ஏனோர் பெருமைய னாகிலும் எம்மிறைஊனே சிறுமையுள் உட்கலந் தங்குளன்வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்தானே அறியுந் தவத்தினி னுள்ளே.

41
பரத்திற் கரைந்து பதிந்தநற் காயம்உருத்தரித் திவ்வுடல் ஓங்கிட வேண்டித்திரைக்கடல் உப்புத் திரண்டது போலத்திரித்துப் பிறக்குந் திருவரு ளாலே.