திருமுறை 10 · 10.02.13 · 9

இரண்டாம்தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடுவட்டத் திரையனல் மாநிலம் ஆகாயம்ஒட்டி உயிர்நிலை என்னுமிக் காயப்பைகட்டி அவிழ்ப்பன்1 கண்ணுதல் காணுமே.பா-ம் : 1அவிழ்க்கின்ற
சொற்பிரிப்பு
எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடுவட்டத் திரையனல் மாநிலம் ஆகாயம்ஒட்டி உயிர்நிலை என்னுமிக் காயப்பைகட்டி அவிழ்ப்பன் கண்ணுதல் காணுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தைநச்சியே இன்பங்கொள் வார்க்கு நமன்இல்லைவிச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத்தச்சு மவனே சமைக்கவல் லானே.
சொற்பிரிப்பு
உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தைநச்சியே இன்பங்கொள் வார்க்கு நமன்இல்லைவிச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத்தச்சு மவனே சமைக்கவல் லானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக்1குசவன் மனத்துற்ற தெல்லாம் வனைவன்1குசவனைப் போல்எங்கள் கோன்நந்தி வேண்டில்2அசைவில் உலகம் அதுயிது வாமே.3பா-ம் : 1குயவன் 2குயவனைப் 3அயைவில்
சொற்பிரிப்பு
குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக்குசவன் மனத்துற்ற தெல்லாம் வனைவன்குசவனைப் போல்எங்கள் கோன்நந்தி வேண்டில்அசைவில் உலகம் அதுயிது வாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

விரியுடை யான்விகிர் தன்மிகு பூதப்படையுடை யான்பரி சேஉல காக்குங்கொடையுடை யான்குணம் எண்குண மாகுஞ்சடையுடை யான்சிந்தை சார்ந்துநின் றானே.
சொற்பிரிப்பு
விரியுடை யான்விகிர் தன்மிகு பூதப்படையுடை யான்பரி சேஉல காக்குங்கொடையுடை யான்குணம் எண்குண மாகுஞ்சடையுடை யான்சிந்தை சார்ந்துநின் றானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

உகந்துநின் றேபடைத் தான்உல கேழும்உகந்துநின் றேபடைத் தான்பல ஊழிஉகந்துநின் றேபடைத் தான்ஐந்து பூதம்உகந்துநின் றேஉயிர் ஊன்படைத் தானே.
சொற்பிரிப்பு
உகந்துநின் றேபடைத் தான்உல கேழும்உகந்துநின் றேபடைத் தான்பல ஊழிஉகந்துநின் றேபடைத் தான்ஐந்து பூதம்உகந்துநின் றேஉயிர் ஊன்படைத் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

படைத்துடை யான்பண் டுலகங்கள் ஏழும்படைத்துடை யான்பல தேவரை முன்னேபடைத்துடை யான்பல சீவரை முன்னேபடைத்துடை யான்பர மாகிநின் றானே.
சொற்பிரிப்பு
படைத்துடை யான்பண் டுலகங்கள் ஏழும்படைத்துடை யான்பல தேவரை முன்னேபடைத்துடை யான்பல சீவரை முன்னேபடைத்துடை யான்பர மாகிநின் றானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

ஆதி படைத்தனன் ஐம்பெரும்1 பூதம்2ஆதி படைத்தனன்1 ஆசில்பல் ஊழி3ஆதி படைத்தனன் எண்ணிலி தேவரை1ஆதி படைத்தவை தாங்கிநின் றானே.1பா-ம் : 1அனாதி 2பூதங்கள் 3ஆயபல் ஊழிகள்
சொற்பிரிப்பு
ஆதி படைத்தனன் ஐம்பெரும் பூதம்ஆதி படைத்தனன் ஆசில்பல் ஊழிஆதி படைத்தனன் எண்ணிலி தேவரைஆதி படைத்தவை தாங்கிநின் றானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

உண்ணின்ற சோதி உறநின்ற ஓருடல்விண்ணின் றமரர் விரும்பும் விழுப்பொருள்மண்ணின்ற வானோர் புகழ்திரு மேனியன்கண்ணின்ற மாமணி மாபோத மாமே.1பா-ம் : 1மாபோதகமே
சொற்பிரிப்பு
உண்ணின்ற சோதி உறநின்ற ஓருடல்விண்ணின் றமரர் விரும்பும் விழுப்பொருள்மண்ணின்ற வானோர் புகழ்திரு மேனியன்கண்ணின்ற மாமணி மாபோத மாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

ஆரும் அறியாத அண்டத் திருவுருப்பார்முத லாகப் பயிலுங் கடத்திலேநீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையைச்சோராமற் காணுஞ் சுகம்அறிந் தேனே.
சொற்பிரிப்பு
ஆரும் அறியாத அண்டத் திருவுருப்பார்முத லாகப் பயிலுங் கடத்திலேநீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையைச்சோராமற் காணுஞ் சுகம்அறிந் தேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.