திருமுறை 10 · 10.02.04 · 9

இரண்டாம்தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

தந்தைபி ரான்வெகுண் டான்தக்கன் வேள்வியைவெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர்முந்திய பூசை முடியார் முறைகெட்டுச்சிந்தினர் அண்ணல் சினஞ்செய்த போதே.
சொற்பிரிப்பு
தந்தைபி ரான்வெகுண் டான்தக்கன் வேள்வியைவெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர்முந்திய பூசை முடியார் முறைகெட்டுச்சிந்தினர் அண்ணல் சினஞ்செய்த போதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

சந்தி செயக்கண் டெழுகின் றரிதானும்எந்தை யிவனல்ல யாமே உலகினிற்பந்தஞ்செய் பாசத்து வீழ்ந்து தவஞ்செய்யஅந்தமி லானும் அருள்புரிந் தானே.
சொற்பிரிப்பு
சந்தி செயக்கண் டெழுகின் றரிதானும்எந்தை யிவனல்ல யாமே உலகினிற்பந்தஞ்செய் பாசத்து வீழ்ந்து தவஞ்செய்யஅந்தமி லானும் அருள்புரிந் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

அப்பரி சேயய னார்பதி வேள்வியுள்அப்பரி சேயங்கி அதிசய மாகிலும்அப்பரி சேயது நீர்மையை யுள்கலந்தப்பரி சேசிவன் ஆலிக்கின் றானே.
சொற்பிரிப்பு
அப்பரி சேயய னார்பதி வேள்வியுள்அப்பரி சேயங்கி அதிசய மாகிலும்அப்பரி சேயது நீர்மையை யுள்கலந்தப்பரி சேசிவன் ஆலிக்கின் றானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

அப்பரி சேஅயன் மால்முதல் தேவர்கள்அப்பரி சேயவ ராகிய காரணம்அப்பரி சங்கி யுளநாளும் உள்ளிட்டப்பரி சாகி அலர்ந்திருந்1 தானே.பா-ம் : 1அலந்திருந் 1அமர்ந்திருந்
சொற்பிரிப்பு
அப்பரி சேஅயன் மால்முதல் தேவர்கள்அப்பரி சேயவ ராகிய காரணம்அப்பரி சங்கி யுளநாளும் உள்ளிட்டப்பரி சாகி அலர்ந்திருந் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

அலர்ந்திருந்1 தானென் றமரர் துதிப்பக்குலந்தரும் கீழங்கி கோளுற நோக்கிச்சிவந்த பரமிது சென்று கதுவஉவந்த பெருவழி யோடி வந்தானே.பா-ம் : 1அலந்திருந்
சொற்பிரிப்பு
அலர்ந்திருந் தானென் றமரர் துதிப்பக்குலந்தரும் கீழங்கி கோளுற நோக்கிச்சிவந்த பரமிது சென்று கதுவஉவந்த பெருவழி யோடி வந்தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

அரிபிர மன்தக்கன் அருக்க னுடனேவருமதி வாலை வன்னிநல் இந்திரன்சிரமுக நாசி சிறந்தகை1 தோள்தான்அரனருள் இன்றி அழிந்தநல் லோரே.பா-ம் : 1சிந்தைகை
சொற்பிரிப்பு
அரிபிர மன்தக்கன் அருக்க னுடனேவருமதி வாலை வன்னிநல் இந்திரன்சிரமுக நாசி சிறந்தகை தோள்தான்அரனருள் இன்றி அழிந்தநல் லோரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

செவிமந் திரஞ்சொல்லுஞ் செய்தவத் தேவர்அவிமந் திரத்தின் அடுக்களை கோலிச்சவிமந் திரஞ்செய்து தாமுற நோக்குங்குவிமந் திரங்கொல் கொடியது வாமே.
சொற்பிரிப்பு
செவிமந் திரஞ்சொல்லுஞ் செய்தவத் தேவர்அவிமந் திரத்தின் அடுக்களை கோலிச்சவிமந் திரஞ்செய்து தாமுற நோக்குங்குவிமந் திரங்கொல் கொடியது வாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

நல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புறப்பல்லார் அமரர் பரிந்தருள் செய்கெனவில்லாற் புரத்தை விளங்கெரி கோத்தவன்பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே.
சொற்பிரிப்பு
நல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புறப்பல்லார் அமரர் பரிந்தருள் செய்கெனவில்லாற் புரத்தை விளங்கெரி கோத்தவன்பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

தெளிந்தார் கலங்கினும் நீகலங் காதேஅளித்தாங் கடைவதெம் ஆதிப் பிரானைவிளிந்தா னது தக்கன் வேள்வியை வீயச்1சுளிந்தாங் கருள்செய்த தூய்மொழி யானே.பா-ம் : 1விளிந்தானத் தக்கனவ் வேள்வியை
சொற்பிரிப்பு
தெளிந்தார் கலங்கினும் நீகலங் காதேஅளித்தாங் கடைவதெம் ஆதிப் பிரானைவிளிந்தா னது தக்கன் வேள்வியை வீயச்சுளிந்தாங் கருள்செய்த தூய்மொழி யானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.