திருமுறை 10 · 10.02.02 · 8

இரண்டாம்தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன்வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம்வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக்குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே.
சொற்பிரிப்பு

உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்தலையைத் தடிந்திட்டுத் தானங்கி யிட்டுநிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்தலையை யரிந்திட்டுச் சந்திசெய் தானே.

3

எங்கும் பரந்தும் இருநிலந் தாங்கியுந்தங்கும் படித்தவன் தாளுணர் தேவர்கள்பொங்கும் சினத்துள் அயன்தலை முன்னறஅங்குஅச் சுதனை உதிரங்கொண் டானே.

4

எங்குங் கலந்துமென் உள்ளத் தெழுகின்றஅங்க முதல்வன் அருமறை யோதிபாற்1பொங்கும் சலந்தரன் போர்செய்ய நீர்மையின்அங்கு விரற்குறித் தாழிசெய் தானே.பா-ம் : 1யோகிபாற்
சொற்பிரிப்பு
எங்குங் கலந்துமென் உள்ளத் தெழுகின்றஅங்க முதல்வன் அருமறை யோதிபாற்பொங்கும் சலந்தரன் போர்செய்ய நீர்மையின்அங்கு விரற்குறித் தாழிசெய் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்முப்புர மாவது மும்மல காரியம்அப்புரம் எய்தமை யாரறி வாரே.

6

முத்தீ கொளுவி முழங்கெரி வேள்வியுள்அத்தி யுரியர னாவ தறிகிலர்சத்தி கருதிய தாம்பல தேவரும்அத்தீயின் உள்ளெழுந் தன்று கொலையே.

7

மூலத் துவாரத்து மூளும் ஒருவனைமேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்காலுற்றுக் காலனைக் காய்ந்தங்கி யோகமாய்ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே.

8

இருந்த மனத்தை இசைய இருத்திப்பொருந்தி இலிங்க வழியது போக்கித்திருந்திய காமன் செயலழித் தங்கண்அருந்தவ யோகங் கொறுக்கை அமர்ந்ததே.