திருமுறை 10 · 10.01.21 · 10

முதல் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.
சொற்பிரிப்பு

உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பொன்னைக் கடந்திலங் கும்புலித் தோலினன்மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறைதுன்னிக் கிடந்த சுடுபொடி யாடிக்குப்பின்னிக் கிடந்ததென் பேரன்பு தானே.

3

என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும்அன்போடு உருகி அகங்குழை வார்க்கன்றிஎன்போல் மணியினை எய்தஒண் ணாதே.

4

ஆர்வம் உடையவர் காண்பர் அரன்தன்னைஈரம் உடையவர் காண்பார் இணையடிபாரம் உடையவர் காண்பார் பவந்தன்னைக்கோர நெறிகொடு கொங்குபுக் காரே.

5

என்அன் புருக்கி இறைவனை ஏத்துமின்முன்அன் புருக்கி முதல்வனை நாடுமின்பின்அன் புருக்கிப் பெருந்தகை நந்தியும்தன்அன் பெனக்கே தலைநின்ற வாறே.

6

தானொரு காலம் சயம்பு என் றேத்தினும்வானொரு காலம் வழித்துணை யாய்நிற்கும்தேனொரு பால்திகழ் கொன்றை அணிசிவன்தானொரு வண்ணம்என் அன்பில்நின் றானே.

7

முன்படைத்து இன்பம் படைத்த முதலிடைஅன்புஅடைத்து எம்பெரு மானை அறிகிலார்வன்படைத்து இந்த அகலிடம் வாழ்வினில்அன்புஅடைத் தான்தன் அகலிடத் தானே.

8

கருத்துறு செம்பொன்செய் காய்கதிர்ச் சோதிஇருத்தியும் வைத்தும் இறைவன் என்று ஏத்தியும்அருத்தியுள் ஈசனை யாரருள் வேண்டில்விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே.

9

நித்தலும் துஞ்சும் பிறப்பையும் செய்தவன்வைத்த பரிசு அறிந் தேயும் மனிதர்கள்இச்சையு ளேவைப்பர் எந்தை பிரானென்றுநச்சியே அண்ணலை நாடுகி லாரே.

10

அன்பின் உள் ளான்புறத்தான் உட லாயுளான்முன்பின்உள் ளான்முனி வர்க்கும் பிரானவன்அன்பின்உள் ளாகி அமரும் அரும்பொருள்அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே.