திருமுறை 10 · 10.01.20 · 10

முதல் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தனஒட்டிய நல்லறம் செய்யா தவர்செல்வம்வட்டிகொண்டு ஈட்டியே மண்ணில் முகந்திடும்பட்டிப் பதகர் பயன்அறி யாரே.
சொற்பிரிப்பு

உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயினகழிந்தன கற்பனை நாளுங் குறுகிப்பிழிந்தன போலத்தம் பேரிடர் ஆக்கைஅழிந்தன கண்டும் அறம்அறி யாரே.

3

அறம்அறி யார்அண்ணல் பாதம் நினையுந்திறம்அறி யார்சிவ லோக நகர்க்குப்புறம்அறி யார்பலர் பொய்மொழி கேட்டுமறம்அறி வார்பகை மன்னிநின் றாரே.

4

இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும்தருமஞ்செய் யாதவர் தம்பால தாகும்உருமிடி நாகம் உரோணி கழலைதருமம்செய் வார்பக்கல் சாரகி லாவே.

5

பரவப் படுவான் பரமனை ஏத்தீர்இரவலர்க்கு ஈதலை யாயினும் ஈயீர்கரகத்தால் நீரட்டிக் காவை வளர்க்கீர்நரகத்தில் நிற்றிரோ நல்நெஞ்சி னீரே.

6

வழிநடப் பாரின்றி வானோர் உலகம்கழிநடப் பார்நடந் தார்கருப் பாரும்மழிநடக் கும்வினை மாசற ஓட்டிட்டுவழிநடப் பார்வினை ஓங்கிநின் றாரே.

7

கனிந்தவர் ஈசன் கழலடி காண்பர்துணிந்தவர் ஈசன் துறக்கமது ஆள்வர்மலிந்தவர் மாளும் துணையும்ஒன் றின்றிமெலிந்த சினத்தினுள் வீழ்ந்தொழிந் தாரே.

8

இன்பம் இடரென்று இரண்டுற வைத்ததுமுன்பவர் செய்கையி னாலே முடிந்ததுஇன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள்அன்பிலார் சிந்தை அறமறி யாரே.

9

கெடுவதும் ஆவதும் கேடில் புகழோன்நடுவல்ல செய்து இன்பம் நாடவும் ஒட்டான்இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம்படுவது செய்யின் பசுவது வாமே.

10

செல்வம் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும்புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல்இல்லங் கருதி இறைவனை ஏத்துமின்வில்லி இலக்கெய்த விற்குறி யாமே.