திருமுறை 10 · 10.01.17 · 2

முதல் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

அமுதூறு மாமழை நீரத னாலேஅமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும்கமுகூறு தெங்கு கரும்பொடு வாழைஅமுதூறுங் காஞ்சிரை ஆங்கது வாமே.
சொற்பிரிப்பு

உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

வரையிடை நின்றிழி வான்நீர் அருவிஉரையில்லை உள்ளத் தகத்துநின் றூறும்நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர்க்கரையில்லை எந்தை கழுமணி யாறே.