திருமுறை 10 · 10.01.15 · 14

முதல் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டுளோர்செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய்தந்தவ நற்கரு மத்துநின்று ஆங்கிட்டுச்சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே.
சொற்பிரிப்பு

உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

வேதாந்தங் கேட்க விருப்பொடு முப்பதப்போதாந்த மான பிரணவத் துள்புக்குநாதந்த வேதாந்த போதாந்த நாதனைஈதாந்தம் எனாதுகண்டு இன்புறு வோர்களே.

3

காயத் திரியே கருதுசா வித்திரிஆய்தற்கு உவப்பர் மந்திரம் ஆங்கு உன்னிநேயத் தேரேறி நினைவுற்று நேயத்தாய்மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே.

4

பெருநெறி யான பிரணவம் ஓர்ந்துகுருநெறி யாலுரை கூடிநால் வேதத்திருநெறி யான கிரியை யிருந்துசொரூபமது ஆனோர் துகளில்பார்ப் பாரே.

5

சத்திய மும்தவம் தானவன் ஆதலும்எய்த்தரும் இந்தியம் ஈட்டியே வாட்டலும்ஒத்த உயிர்கள் உண்டா யுணர்வுற்றுபெத்தம் அறுத்தலும் ஆகும் பிரமமே.

6

வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர்வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர்வேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடம்வேதாந்தங் கேட்டவர் வேட்கை விட்டாரே.

7

நூலும் சிகையும் நுவலிற் பிரமமோநூலது கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம்நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்நூலுடை அந்தணர் காணும் நுவலிலே.

8

சத்தியம் இன்றித் தனிஞானம் தானின்றிஒத்த விடயம்விட் டோரும் உணர்வின்றிப்பத்தியும் இன்றிப் பரன் உண்மை யின்றிப்பித்தேறும் மூடர் பிராமணர் தாமன்றே.

9

திருநெறி யாகிய சித்தசித் தின்றிக்குருநெறி யாலே குருபதம் சேர்ந்துகரும நியமாதி கைவிட்டுக் காணும்துரிய சமாதியாந் தூய்மறை யோர்க்கே.

10

மறையோர் அவரே மறையவர் ஆனால்மறையோர்தம் வேதாந்த வாய்மையில் தூய்மைகுறையோர்தல் மற்றுள்ள கோலா கலமென்றுஅறிவோர் மறைதெரிந்து அந்தண ராமே.

11

அந்தண்மை பூண்ட அருமறை அந்தத்துச்சிந்தைசெய் அந்தணர் சேரும் செழும்புவிநந்துதல் இல்லை நரபதி நன்றாகும்அந்தியும் சந்தியும் ஆகுதி பண்ணுமே.

12

வேதாந்த ஞானம் விளங்க விதியிலோர்நாதாந்த போதம் நணுகிய போக்கதுபோதாந்த மாம்பரன் பாற்புகப் புக்கதால்நாதாந்த முத்தியும் சித்தியும் நண்ணுமே.

13

தானே விடும்பற்று இரண்டும் தரித்திடநானே விடப்படும் ஏதொன்றை நாடாது*இம்மந்திரத்தின் இரண்டு அடிகள் கிடைத்தில.
சொற்பிரிப்பு
தானே விடும்பற்று இரண்டும் தரித்திடநானே விடப்படும் ஏதொன்றை நாடாது----------------------------------------------------------------------------------------------------------------
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

14

பூமேவு நான்முகன் புண்ணிய போகனாய்ஓமேவும் ஓர்ஆ குதிஅவி உண்ணவே*இம்மந்திரத்தின் இரண்டு அடிகள் கிடைத்தில.
சொற்பிரிப்பு
பூமேவு நான்முகன் புண்ணிய போகனாய்ஓமேவும் ஓர்ஆ குதிஅவி உண்ணவே----------------------------------------------------------------------------------------------------------------
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.