திருமுறை 10 · 10.01.14 · 10

முதல் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

வசையில் விழுப்பொருள் வானும் நிலனும்திசையும் திசைபெறு தேவர் குழாமும்விசையும் பெருகிய வேத முதலாம்அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே.
சொற்பிரிப்பு

உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்போகதி நாடிப் புறங்கொடுத்து உண்ணுவர்தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறிதாமறி வாலே தலைப்பட்ட வாறே.

3

அணைதுணை அந்தணர் அங்கியுள் அங்கிஅணைதுணை வைத்ததின் உட்பொரு ளானஇணைதுணை யாமத்து இயங்கும் பொழுதுதுணையணை யாயதோர் தூய்நெறி யாமே.

4

போதிரண் டோ திப் புரிந்தருள் செய்திட்டுமாதிரண் டாகி மகிழ்ந்துட னேநிற்குந்தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள்வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறே.

5

நெய்நின்று எரியும் நெடுஞ்சுட ரேசென்றுமைநின்று எரியும் வகையறி வார்க்கட்குமைநின்று அவிழ்தரு மந்திரமும் என்றும்செய்நின்ற செல்வமும் தீயது வாமே.

6

பாழி அகலும் எரியும் திரிபோலிட்டுஊழி அகலும் உறுவினை நோய்பலவாழிசெய்து அங்கி உதிக்க அவைவிழும்வீழிசெய்து அங்கி வினைசுடு மாமே.

7

பெருஞ்செல்வம் கேடென்று முன்னே படைத்ததருஞ்செல்வம் தந்த தலைவனை நாடும்வருஞ்செல்வத்து இன்பம் வரஇருந் தெண்ணிஅருஞ்செல்வத்து ஆகுதி வேட்கநின் றாரே.

8

ஒண்சுட ரானை உலப்பிலி நாதனைஒண்சுட ராகிஎன் உள்ளத்து இருக்கின்றகண்சுட ரோன் உலகு ஏழும் கடந்த அத்தண்சுடர் ஓமத் தலைவனு மாமே.

9

ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்மிறைஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன்வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல்கோமத்துள் அங்கி குரைகடல் தானே.

10

அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணத்துதங்கி இருக்கும் வகையருள்செய்தவர்எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதிபொங்கி நிறுத்தும் புகழது வாமே.