திருமுறை 10 · 10.01.09 · 2

முதல் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்நற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும்உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே.
சொற்பிரிப்பு

உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களைவல்லடிக் காரர் வலிக்கயிற் றாற்கட்டிச்செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடைநில்லிடும் என்று நிறுத்துவர் தாமே.