திருமுறை 10 · 10.01.08 · 10

முதல் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்இழைக்கின்றது எல்லாம் இறக்கின்ற கண்டும்பிழைப்பின்றி எம்பெரு மானடி ஏத்தார்அழைக்கின்ற போதுஅறி யாரவர் தாமே.
சொற்பிரிப்பு

உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்ததுஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள்ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால்ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.

3

மத்தளி** ஒன்றுள தாளம் இரண்டுளஅத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன்அத்துள்ளே வாழும் அரசன் புறப்பட்டால்மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே.** {பாட பேதம் 1 - தருமபுர ஆதீனப் பதிப்பின்படி}மத்தளி ஒன்றுளே தாளம் இரண்டுளஅத்துள்ளே வாழும் அமைச்சும் அஞ்சுள்ளனஅத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன்மத்தளி மண்ணாய் மயங்கியவாறே.** ( பாட பேதம்: 2 - திருப்பனந்தாள் மடத்துப் பதிப்பின்படி )மத்தளி ஒன்றுள தாளம் இரண்டுளஅத்துள்ளே வாழும் அரசரும் அஞ்சுள்ளஅத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன்மத்தளி மண்ணாய் மயங்கியவாறே.
சொற்பிரிப்பு
மத்தளி ஒன்றுள தாளம் இரண்டுளஅத்துள்ளே வாழும் அரசரும் அஞ்சுள்ளஅத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன்மத்தளி மண்ணாய் மயங்கியவாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனைவேங்கடத் துள்ளே விளையாடு நந்தியைவேங்கடம் என்றே விரகுஅறி யாதவர்தாங்கவல் லாருயிர் தாமறி யாரே.

5

சென்றுணர் வாந்திசை பத்துந் திவாகரன்அன்றுணர் வால் அளக் கின்ற தறிகிலர்நின்றுண ரார்இந் நிலத்தின் மனிதர்கள்பொன்றுணர் வாரிற் புணர்க்கின்ற மாயமே.

6

மாறு திருத்தி வரம்பிட்ட பட்டிகைபீறும் அதனைப் பெரிதுணர்ந் தாரிலைகூறும் கருமயிர் வெண்மயி ராவதுஈறும் பிறப்புமொ ராண்டெனும் நீரே.

7

துடுப்பிடு பானைக்கும் ஒன்றே அரிசிஅடுப்பிடு மூன்றிற்கும் அஞ்செரி கொள்ளிஅடுத்தெரி யாமற் கொடுமின் அரிசிவிடுத்தன நாள்களும் மேற்சென் றனவே.

8

இன்புறு வண்டிங்கு இனமலர் மேற்போய்உண்பது வாச மதுபோல் உயிர்நிலைஇன்புற நாடி நினைக்கிலும் மூன்றொளிகண்புற நின்ற கருத்துள்நில் லானே.

9

ஆம்விதி நாடி அறஞ்செய்மின் அந்நிலம்போம்விதி நாடிப் புனிதனைப் போற்றுமின்நாம்விதி வேண்டும தென்சொலின் மானிடர்ஆம்விதி பெற்ற அருமைவல் லார்க்கே.

10

அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்வெவ்விய னாகிப் பிறர்பொருள் வவ்வன்மின்செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போதொருதவ்விக்கொ டுண்மின் தலைப்பட்ட போதே.