திருமுறை 10 · 10.01.07 · 10

முதல் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கேவிழக்கண்டும் தேறார் விழியிலா மாந்தர்குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்விழக்கண்டும் தேறார் வியனுல கோரே.
சொற்பிரிப்பு

உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப்பூண்டுகொண் டாரும் புகுந்தறி வாரில்லைநீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும்தூண்டு விளக்கின் சுடரறி யாரே.

3

தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறைஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள்பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியைஓர்ந்துற்று கொள்ளும் உயிருள்ள போதே.

4

விரும்புவர் முன்என்னை மெல்லியன் மாதர்கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல்அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்குக்கரும்பொத்துக் காஞ்சிரங் காயுமொத் தேனே.

5

பாலன் இளையன் விருத்தன் எனநின்றகாலங் கழிவன கண்டும் அறிகிலார்ஞாலம்கடந்து அண்டம் ஊடறுத் தான்அடிமேலுங் கிடந்து விரும்புவன் நானே.

6

காலை ஏழுந்தவர் நித்தலும் நித்தலும்மாலை படுவதும் வாணாள் கழிவதும்சாலும்அவ் ஈசன் சலவிய னாகிலும்ஏல நினைப்பவர்க்கு இன்பம்செய் தானே.

7

பருவூசி ஐந்துமோர் பையினுள் வாழும்பருவூசி ஐந்தும் பறக்கும் விருகம்பருவூசி ஐந்தும் பனித்தலைப் பட்டால்பருவூசிப் பையும் பறக்கின்ற வாறே.

8

கண்ணதும் காய்கதி ரோனும் உலகினைஉண்ணின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார்விண்ணுறு வாரையும் வினையுறு வாரையும்எண்ணுறும் முப்பதில் ஈர்ந்தொழிந் தாரே.

9

ஒன்றிய ஈரெண் கலையும் உடனுறநின்றது கண்டு நினைக்கிலர் நீசர்கள்கன்றிய காலன் கருக்குழி வைத்தபின்சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே.

10

எய்திய நாளில் இளமை கழியாமைஎய்திய நாளில் இசையினால் ஏத்துமின்எய்திய நாளில் எறிவது அறியாமல்எய்திய நாளில் இருந்துகண் டேனே.