திருமுறை 10 · 10.01.04 · 30

முதல் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டுதண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்துஉண்ணின்று உருக்கியோர் ஒப்பிலா ஆனந்தக்கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே.
சொற்பிரிப்பு

உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்திகளிம்பறுத் தான்அருள் கண்விழிப் பித்துக்களிம்பணு காத கதிரொளி காட்டிப்பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே.

3

பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்பதியினைப் போற்பசு பாசம் அனாதிபதியினைச் சென்றணு காப்பசு பாசம்பதியணு கிற்பசு பாசம் நில் லாவே.

4

வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனும்கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்திதாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும்தோயம தாய் எழுஞ் சூரிய னாமே.

5

சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவேசூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடாசூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே.

6

மலங்கள்ஐந் தாமென மாற்றி அருளித்தலங்கள்ஐந் தானற் சதாசிவ மானபுலங்களைந் தான்அப் பொதுவினுள் நந்திநலங்களைந் தான்உள் நயந்தான் அறிந்தே.

7

அறிவுஐம் புலனுட னேநான் றதாகிநெறியறி யாதுற்ற நீர்ஆழம் போலஅறிவுஅறி வுள்ளே அழிந்தது போலக்குறியறி விப்பான் குருபர னாமே.

8

ஆமேவு பால்நீர் பிரிக்கின்ற அன்னம்போல்தாமே தனிமன்றில் தன்னந் தனிநித்தம்தீமேவு பல்கர ணங்களுள் உற்றனதாமேழ் பிறப்பெரி சார்ந்தவித் தாமே.

9

வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச்சுத்தத் துரியம் பிறந்து துடக்கறஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடுசெத்திட் டிருப்பர் சிவயோகி யார்களே.

10

சிவயோக மாவது சித்தசித் தென்றுதவயோகத் துள்புக்குத் தன்னொளி தானாய்அவயோகஞ் சாராதவன்பதி போகநவயோக நந்தி நமக்களித் தானே.

11

அளித்தான் உலகெங்கும் தானான உண்மைஅளித்தான் அமரர் அறியா உலகம்அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள்அளித்தான் பேரின்பத்து அருள்வெளி தானே.

12

வெளியில் வெளிபோய் விரவிய வாறும்அளியில் அளிபோய் அடங்கிய வாறும்ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்தெளியும் அவரே சிவ சித்தர் தாமே.

13

சித்தர் சிவலோகம் இங்கே தெரிசித்தோர்சத்தமும் சத்த முடிவுந்தம் முள்கொண்டோர்நித்தர் நிமலர் நிராமயர் நீள்பரமுத்தர்தம் முத்தி முதல்முப்பத் தாறே.

14

முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியாய்ஒப்பிலா ஆனந்தத் துள்ளொளி புக்குச்செப்ப அரிய சிவங்கண்டு தான்தெளிந்துஅப்பரி சாக அமர்ந்திருந் தாரே.

15

இருந்தார் சிவமாகி எங்குந் தாமாகிஇருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கிஇருந்தார் முக்காலத்து இயல்பைக் குறித்தங்குஇருந்தார் இழவுவந்து எய்திய சோம்பே.

16

சோம்பர் இருப்பது சுத்த வெளியிலேசோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலேசோம்பர் உணர்வு சுருதி முடிந்திடஞ்சோம்பர் கண் டார்அச் சுருதிக்கண் தூக்கமே.

17

தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்முள்ளேதூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்முள்ளேதூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்முள்ளேதூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே.

18

எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லைஅவ்வாறு அருட்செய்வன் ஆதிஅரன் தானும்ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடும்செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கம்.

19

மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்ஆணிப்பொன் மன்றில் ஆடுந் திருக்கூத்தைப்பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே.

20

பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறிபெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன்பெற்றார் அம்மன்றில் பிரியாப் பெரும்பேறுபெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே.

21

பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல்அருமை எளிமை அறிந்தறி வார்ஆர்ஒருமையுள் ஆமைபோல் உள்ஐந்து அடக்கிஇருமையுங் கேட்டிருந் தார்புரை அற்றே.

22

புரைஅற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல்திரைஅற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும்உரையற்று உணர்வோர் உடம்பிங்கு ஒழிந்தால்கரையற்ற சோதி கலந்தசத் தாமே.

23

சத்த முதல் ஐந்துந் தன்வழித் தான்சாரில்சித்துக்குச் சித்தன்றி சேர்விடம் வேறுண்டோசுத்த வெளியிற் சுடரிற் சுடர்சேரும்அத்தம் இதுகுறித் தாண்டுகொள் அப்பிலே.

24

அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால்உப்பெனப் பேர்பெற்று உருச்செய்த அவ்வுருஅப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோல்செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே.

25

அடங்குபேர் அண்டத்து அணுஅண்டம் சென்றங்குஇடங்கொண்டது இல்லை இதுவன்றி வேறுண்டோகடந்தொறும் நின்ற உயிர்க்கரை காணில்திடம்பெற நின்றான் திருவடி தானே.

26

திருவடி யேசிவ மாவது தேரில்திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்திருவடி யேசெல் கதியது செப்பில்திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே.

27

தெளிவு குருவின் திருமேனி காண்டல்தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.

28

தானே புலன்ஐந்துந் தன்வசம் ஆயிடும்தானே புலன்ஐந்துந் தன்வசம் போயிடும்தானே புலன்ஐந்துந் தன்னில் மடைமாறும்தானே தனித்துஎம் பிரான்தனைச் சந்தித்தே.

29

சந்திப் பதுநந்தி தன்திருத் தாளிணைசிந்திப் பதுநந்தி செய்ய திருமேனிவந்திப் பதுநந்தி நாமம் என் வாய்மையால்புந்திக்குள் நிற்பது நந்திபொற் போதமே.

30

போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்போதந் தனில்வைத்துப் புண்ணியர் ஆயினார்நாதன் நடத்தால் நயனங் களிகூரவேதந் துதித்திடப் போயடைந்தார் விண்ணே.