திருமுறை 10 · 10.01.03 · 10

முதல் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்அஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும்அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே.
சொற்பிரிப்பு

உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் யானே(1).பா-ம்: 1) நானே
சொற்பிரிப்பு
அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் யானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம்விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரிதெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே.

4

பரனாய் பராபரம் காட்டி உலகில்தரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத்தரனாய் அமரர்கள் அர்ச்சிக்கு நந்திஉரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே.

5

சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம்உவமா மகேசர் உருத்திர தேவர்தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்றநவஆ கமமெங்கள் நந்திபெற் றானே.

6

பெற்றநல் ஆகமங் காரணம் காமிகம்உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்மற்றவ் வியாமளம் ஆகும்கா லோத்தரந்துற்றநற் சுப்பிரம் சொல்லு மகுடமே.

7

அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்எண்ணிலி கோடி தொகுத்திடும் ஆயினும்அண்ணல் அறைந்த அறிவுஅறி யாவிடின்எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே.

8

மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்றுஏரியும் நின்றங்கு இளைக்கின்ற காலத்துஆரிய முந்தமி ழும்உட னேசொலிக்காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.

9

அவிழ்கின்ற வாறும் அதுகட்டு மாறும்சிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும்தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்உணர்த்தும் அவனை உணரலு மாமே.

10

பண்டிதர் ஆவார் பதினெட்டும் பாடையும்கண்டவர் கூறும் கருத்தறி வார்என்கபண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே.