திருமுறை 10 · 10.01.05 · 25

முதல் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்திண்ணென்று இருந்தது தீவினைச் சேர்ந்ததுவிண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானாற்போல்எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே.
சொற்பிரிப்பு

உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்உண்ட அப் பெண்டிரும் மக்களும் பின்செலார்கொண்ட விரதமும் ஞானமும் அல்லதுமண்டி அவருடன் வழிநட வாதே.

3

ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டுநீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.

4

காலும் இரண்டு முகட்டலகு ஒன்றுளபாலுள் பருங்கழி முப்பத் திரண்டுளமேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன்போலுயிர் மீளப் புக அறி யாதே.

5

சீக்கை விளைந்தது செய்வினை மூட்டிற்றஆக்கை பிரிந்தது அலகு பழுத்ததுமூக்கினிற் கைவைத்து மூடிட்டுக் கொண்டுபோய்க்காக்கைக் குப்பலி காட்டிய வாறே.

6

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.

7

மன்றத்தே நம்பி மாடம் எடுத்ததுமன்றத்தே நம்பி சிவிகைபெற் றேறினான்மன்றத்தே நம்பி முக்கோடி வழங்கினான்சென்றத்தா என்னத் திரிந்திலன் தானே.

8

வாசந்தி பேசி மணம்புணர்ந்து அப்பதிநேசந் தெவிட்டி நினைப்பொழி வார்பின்னைஆசந்தி மேல்வைத்து அமைய அழுதிட்டுப்பாசந்தீச் சுட்டுப் பலியட்டி னார்களே.

9

கைவிட்டு நாடிக் கருத்தழிந் தச்சறநெய்யட்டிச் சோறுண்ணும் ஐவரும் போயினார்மையிட்ட கண்ணாளும் மாடும் இருக்கவேமெய்விட்டுப் போக விடைகொள்ளு மாறே.

10

பந்தல் பிரிந்தது பண்டாரங் கட்டற்றஒன்பது வாசலும் ஒக்க அடைத்தனதுன்புறு காலந் துரிசுவர மேன்மேல்அன்புடை யார்கள் அழுதகன் றார்களே.

11

நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன்காட்டுச் சிவிகையொன்று ஏறிக் கடைமுறைநாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்டநாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே.

12

முப்பதும் முப்பதும் முப்பத் தறுவரும்செப்ப மதிளுடைக் கோட்டையுள் வாழ்பவர்செப்ப மதிளுடைக் கோட்டை சிதைந்தபின்ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே.

13

மதுவூர் குழலியும் மாடும் மனையும்இதுவூர் ஒழிய இதணம தேறிப்பொதுவூர் புறஞ்சுடு காடது நோக்கிமதுவூர வாங்கியே வைத்தகன் றார்களே.

14

வைச்சகல் வுற்றது கண்டு மனிதர்கள்அச்சக லாதென நாடும் அரும்பொருள்பிச்சது வாய்ப்பின் தொடர்வுறு மற்றவர்எச்சக லாநின் றிளைக்கின்ற வாறே.

15

ஆர்த்தெழு சுற்றமும் பெண்டிரும் மக்களும்ஊர்த்துறைக் காலே ஒழிவர் ஒழிந்தபின்வேர்த்தலை போக்கி விறகிட்டு எரிமூட்டிநீர்த்தலை மூழ்குவர் நீதியி லோரே.

16

வளத்திடை முற்றத்தோர் மாநிலம் முற்றுங்குளத்தின் மண்கொண்டு குயவன் வனைந்தான்குடமுடைந் தால் அவை ஓடென்று வைப்பர்உடலுடைந் தால்இறைப் போதும் வையாரே.

17

ஐந்து தலைப்பறி ஆறு சடையுளசந்தவை முப்பது சார்வு பதினெட்டுப்பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்துவெந்து கிடந்தது மேலறி யோமே.

18

அத்திப் பழமும் அறைக்கீரை நல்வித்தும்கொத்தி உலைபெய்து கூழட்டு வைத்தனர்அத்திப் பழத்தை அறைக்கீரை வித்துண்ணக்கத்தி எடுத்தவர் காடுபுக் காரே.

19

மேலும் முகடில்லை கீழும் வடிம்பில்லைகாலும் இரண்டு முகட்டலக் கொன்றுண்டுஓலையான் மேய்ந்தவர் ஊடு வரியாமைவேலையான் மேய்ந்ததோர் வெள்ளித் தளிகையே.

20

கூடம் கிடந்தது கோலங்கள் இங்கில்லைஆடும் இலையமும் அற்றது அறுதலும்பாடுகின் றார்சிலர் பண்ணில் அழுதிட்டுத்தேடிய தீயினில் தீயவைத் தார்க்களே.

21

முட்டை பிறந்தது முந்நூறு நாளினில்இட்டது தானிலை ஏதேனும் ஏழைகாள்பட்டது பார்மணம் பன்னிரண்டு ஆண்டினில்கெட்டது எழுபதில் கேடறி யீரே.

22

இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டால்முடிஞ்ச தறியார் முழங்குவர் மூடர்விடிஞ்சுஇரு ளாவது அறியா உலகம்படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே.

23

மடல்விரி கொன்றையன் மாயன் படைத்தஉடலும் உயிரும் உருவந் தொழாமல்இடர்ப்படந்து ஏழா நரகிற் கிடப்பர்குடர்ப்பட வெந்தமர் கூப்பிடு மாறே.

24

குடையும் குதிரையும் கொற்றவா ளுங்கொண்டுஇடையும்அக் காலம் இருந்து நடுவேபுடையு மனிதனார் போகும்அப் போதேஅடையும் இடம்வலம் ஆருயி ராமே.

25

காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென்பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென்தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டுங்கூத்தன் புறப்பட்டுப் போன இக்கூட்டையே.