1
சிவனொடுஒக் கும்தெய்வம் தேடினும் இல்லைஅவனொடுஒப் பார் இங்கு யாவரும் இல்லைபுவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்தவனச் சடைமுடித் தாமரை யானே.
சொற்பிரிப்பு
சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லைஅவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லைபுவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்தவனச் சடைமுடித் தாமரையானே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
2
அவனை ஒழிய அமரரும் இல்லைஅவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லைஅவனன்றி மூவரால் ஆவதொன் றில்லைஅவனன்றி ஊர்புகு மாறு அறியேனே.
சொற்பிரிப்பு
அவனை ஒழிய அமரரும் இல்லைஅவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லைஅவனன்றி மூவரால் ஆவதொன்று இல்லைஅவனன்றி ஊர் புகுமாறு அறியேனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
3
முன்னைஒப் பாயுள்ள மூவர்க்கு மூத்தவன்தன்னைஒப் பாய்ஒன்றும் இல்லாத் தலைமகன்தன்னைஅப் பாயெனில் அப்பனு மாயுளன்பொன்னைஒப் பாகின்ற போதகத் தானே.
சொற்பிரிப்பு
முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கு மூத்தவன்தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன்தன்னை அப்பா எனில் அப்பனுமாய் உளன்பொன்னை ஒப்பாகின்ற போதகத்தானே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
4
தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்ஆயினும் ஈசன் அருளறி வாரில்லைசேயனும் அல்லன் அணியன்நல் அன்பர்க்குத்தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.
சொற்பிரிப்பு
தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்ஆயினும் ஈசன் அருள் அறிவாரில்லைசேயனும் அல்லன் அணியன் நல் அன்பர்க்குத்தாயினும் நல்லன் தாழ் சடையோனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
5
பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப்பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்திஎன்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்தன்னால் தொழப்படு வாரில்லை தானே.
சொற்பிரிப்பு
பொன்னால் புரிந்திட்ட பொற்சடை என்னப்பின்னாற் பிறங்க இருந்தவன் பேர் நந்திஎன்னால் தொழப்படும் எம் இறை மற்று அவன்தன்னால் தொழப்படுவார் இல்லை தானே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
6
அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லைமுயலும் முயலில் முடிவும் மற் றாங்கேபெயலும் மழைமுகிற் பேர்நந்தி தானே.
சொற்பிரிப்பு
அயலும் புடையும் எம் ஆதியை நோக்கில்இயலும் பெருந்தெய்வம் யாதும் ஒன்றில்லைமுயலும் முயலில் முடிவும் மற்று ஆங்கேபெயலும் மழை முகில் பேர்நந்தி தானே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
7
கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்அண்ணல் இவன் என்றுஅறியகி லார்களே.
சொற்பிரிப்பு
கண் நுதலான் ஒரு காதலின் நிற்கவும்எண்ணிலி தேவர் இறந்தார் எனப் பலர்மண்ணுறுவார்களும் வானுறுவார்களும்அண்ணல் இவன் என்று அறியகிலார்களே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
8
மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்எண்ணளந் தின்னும் நினைக்கிலார் ஈசனைவிண்ணளந் தாந்தன்னை மேலளந் தாரில்லைகண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே.
சொற்பிரிப்பு
மண்ணளந்தான் மலரோன் முதல் தேவர்கள்எண்ணளந்து இன்னும் நினைக்கிலார் ஈசனைவிண்ணளந் தாந்தன்னை மேலளந் தாரில்லைகண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
9
அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடிஅடிகண் டிலேன் என்று அச்சுதன் சொல்லமுடிகண்டேன் என்று அயன் பொய்மொழிந் தானே.

10
கடந்துநின் றான்கம லம்மல ராதிகடந்துநின் றான்கடல் வண்ணம்எம் மாயன்கடந்துநின் றான்அவர்க்கு அப்புறம் ஈசன்கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே.

11
ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்றவேதியு மாய்விரிந்துஆர்ந்துஇருந் தான்அருள்சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்நீதியு மாய்நித்த மாகிநின் றானே.

12
கோது குலாவிய கொன்றைக் குழற்சடைமாது குலாவிய வாள்நுதல் பாகனையாது குலாவி அமரரும் தேவரும்கோது குலாவிக் குணம்பயில் வாரே.

13
காயம் இரண்டுங் கலந்து கொதிக்கினும்மாயங் கத்தூரி யதுமிகும் அவ்வழிதேசங் கலந்தொரு தேவனென் றெண்ணினும்ஈசன் உறவுக் கெதிரில்லை தானே.

14
அதிபதி செய்து அளகை வேந்தனைநிதிபதி செய்த நிறைதவம் நோக்கிஅதுபதி ஆதரித்து ஆக்கமது ஆக்கின்இதுபதி கொள்என்ற எம்பெரு மானே.

15
இதுபதி ஏலங் கமழ்பொழில் ஏழும்முதுபதி செய்தவன் மூதறி வாளன்விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கிஅதுபதி யாக அமருகின் றானே.

16
முடிவும் பிறப்பையும் முன்னே படைத்தஅடிகள் உறையும் அறனெறி* நாடில்இடியும் முழக்கமும் ஈசர் உருவம்கடிமலர்க் குன்ற மலையது தானே.*அரநெறி என்றும் பாடம்
சொற்பிரிப்பு
முடிவும் பிறப்பையும் முன்னே படைத்தஅடிகள் உறையும் அறனெறி நாடில்இடியும் முழக்கமும் ஈசர் உருவம்கடிமலர்க் குன்ற மலையது தானே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
17
மனத்தில் எழுகின்ற மாயநன் நாடன்நினைத்தது அறிவன் என்னில்தான் நினைக்கிலர்எனக்குஇறை அன்பிலன் என்பர் இறைவன்பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே.
சொற்பிரிப்பு
மனத்தில் எழுகின்ற மாயநன் நாடன்நினைத்தது அறிவன் என்னில்தான் நினைக்கிலர்எனக்குஇறை அன்பிலன் என்பர் இறைவன்பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
18
வல்லவன் வன்னிக்கு இறையிடை வாரணம்நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனைஇல்லென வேண்டா இறையவர் தம்முதல்அல்லும் பகலும் அருளுகின் றானே.

19
போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனி தன்அடிதேற்றுமின் என்றும் சிவனடிக் கேசெல்வ(1)மாற்றிய தென்று மயலுற்ற சிந்தையைமாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே.பா-ம்: 1) செல்ல
சொற்பிரிப்பு
போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனி தன்அடிதேற்றுமின் என்றும் சிவனடிக் கேசெல்வமாற்றிய தென்று மயலுற்ற சிந்தையைமாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
20
காணநில் லாய்அடி யேற்குஉறவுஆருளர்நாணநில் லேன்உன்னை நான்தழு விக்கொளக்கோணநில் லாத குணத்தடி யார்மனத்துஆணியன் ஆகி அமர்ந்துநின் றானே.

21
பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே.

22
தொடர்ந்துநின் றானைத் தொழுமின் தொழுதால்படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்கடந்துநின் றான்கம லம்மலர் மேலேஉடந்திருந் தான்(1)அடிப் புண்ணிய மாமே.பா-ம்: 1) புணர்ந்திருந்தான்
சொற்பிரிப்பு
தொடர்ந்துநின் றானைத் தொழுமின் தொழுதால்படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்கடந்துநின் றான்கம லம்மலர் மேலேஉடந்திருந் தான்அடிப் புண்ணிய மாமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
23
சந்தி எனத்தக்க தாமரை வாண்முகத்துஅந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்றுநந்தியை நாளும் வணங்கப் படும்அவர்புந்தியி னுள்ளே புகுந்துநின் றானே.

24
இணங்கிநின் றான் எங்கும் ஆகிநின் றானும்பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும்உணங்கிநின் றான்அம ராபதி நாதன்வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே.

25
வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர்ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக்கானக் களிறு கதறப் பிளந்தஎம்கோனைப் புகழுமின் கூடலு மாமே.

26
வான்நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்தானின்று அழைக்கும்கொல் என்று தயங்குவார்ஆன்நின்று அழைக்கு மதுபோல்என் நந்தியைநான்நின்று அழைப்பது ஞானம் கருதியே.

27
மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும்விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்பண்ணகத்து இன்னிசை பாடலுற் றானுக்கேகண்ணகத் தேநின்று காதலித் தேனே.

28
தேவர் பிரான்நம் பிரான்திசை பத்தையும்மேவு பிரான்விரி நீருலகேழையும்தாவு பிரான்தன்மை தானறி வாரில்லைபாவு பிரான்அருட் பாடலு மாமே.

29
பதிபல வாயது பண்டுஇவ் வுலகம்விதிபல செய்தொன்றும் மெய்ம்மை உணரார்துதிபல தோத்திரம் சொல்ல வல்லாரும்மதியிலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே.

30
சாந்து கமழுங் கவரியின் கந்தம்போல்வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந்நெறிஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும்போந்தும் இருந்தும் புகழுகின் றேனே.

31
ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப்போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்மேற்றிசைக் கும்கிழக் குத்திசை எட்டொடுமாற்றுவன் அப்படி ஆட்டவு மாமே.

32
அப்பனை நந்தியை ஆரா அமுதினைஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனைஎப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்அப்பரி சீசன் அருள்பெற லாமே.

33
நானும்நின் றேத்துவன் நாள்தொறும் நந்தியைத்தானும்நின் றான்தழல் தான்ஒக்கும் மேனியன்வானில்நின் றார்மதி போல்உடல் உள்ளுவந்துஊனில்நின் றாங்கே உயிர்க்கின்ற வாறே.

34
பிதற்றொழி யேன்பெரி யான்அரி யானைப்பிதற்றொழி யேன்பிற வாஉரு வானைப்பிதற்றொழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னைப்பிதற்றொழி யேன்பெரு மைத்தவன் தானே.

35
வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத்தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனைஏத்தியும் எம்பெரு மான்என்றுஇறைஞ்சியும்ஆத்தம் செய் தீசன் அருள்பெற லாமே.

36
குறைந்துஅடைந் தீசன் குரைகழல் நாடும்நிறைந்துஅடை செம்பொனின் நேர்ஒளி ஒக்கும்மறைஞ்சடம் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப்புறஞ்சடம் செய்வான் புகுந்துநின் றானே.

37
சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்புனஞ்செய்த நெஞ்சிடை போற்றவல் லார்க்குக்கனஞ்செய்த வாள்நுதல் பாகனும் அங்கேஇனஞ்செய்த மான்போல் இணங்கிநின் றானே.

38
போய்அரன் தன்னைப் புகழ்வார் பெறுவதுநாயக னான்முடி செய்தது வேநல்குமாயகம் சூழ்ந்து வரவல்ல ராகிலும்வேயன தோளிக்கு வேந்தொன்றும் தானே.

39
அரனடி சொல்லி அரற்றி அழுதுபரனடி நாடியே பாவிப்ப நாளும்உரன்அடி செய்துஅங்கு ஒதுங்கவல் லார்க்குநிரன்அடி செய்து நிறைந்துநின் றானே.

40
போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடிபோற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடிபோற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடிபோற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே.

41
விதிவழி அல்லதுஇவ் வேலை உலகம்விதிவழி இன்பம் விருத்தமும் இல்லைதுதிவழி நித்தலும் சோதிப் பிரானும்பதிவழி காட்டும் பகலவ னாமே.

42
அந்திவண் ணாஅர னேசிவ னேஎன்றுசிந்தைசெய் வண்ணம் திருந்தடி யார்தொழமுந்திவண் ணாமுதல் வாபர னேஎன்றுவந்தி வண்ணன்எம் மனம்புகுந் தானே.

43
மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்பனையுள் இருந்த பருந்தது போலநினையாத வர்க்கில்லை நின்இன்பந் தானே.

44
அடியார் பரவும் அமரர் பிரானைமுடியால் வணங்கி முதல்வனை முன்னிப்படியால் அருளும் பரம்பரன் எந்தைவிடியா விளக்கென்று மேவிநின் றேனே.

45
பரைபசு பாசத்து நாதனை உள்ளிஉரைபசு பாசத்துஒருங்கவல் லார்க்குத்திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக்கரைபசு பாசம் கடந்து எய்த லாமே.

46
சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்றுபாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின்றாடுவன் ஆடி அமரர்பி ரான்என்றுநாடுவன் யானின் றறிவது தானே.

47
அளவில் இளமையும் அந்தமும் ஈறும்அளவியல் காலமும் நாலும் உணரில்தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல்அளவில் பெருமை அரியயற் காமே.

48
ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்ஆதிக் கமலத்து அலர்மிசை யானும்சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றெனார்பேதித் துலகம் பிணங்குகின் றார்களே.

49
ஈசன் இருக்கும் இருவினைககு அப்புறம்பீசம் உலகில் பெருந்தெய்வம் ஆனதுஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார்தூசு பிடித்தவர் தூரறிந் தார்களே.

50
சிவன்முதல் மூவரோடு ஐவர் சிறந்தஅவைமுதல் ஆறிரண்டு ஒன்றோடு ஒன் றாகும்அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்சவைமுதற் சங்கரன் தன்பெயர் தானே.

51
பயன் அறிந்து அவ்வழி எண்ணும் அளவில்அயனொடு மால்நமக்கு அன்னியம் இல்லைநயனங்கள் மூன்றுடை நந்தி தமராம்வயனம் பெறுவீர் அவ் வானவ ராலே.

52
ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்பாலொத்த மேனியன் பாதம் பணிந்துய்ய1மாலுக்கும் ஆதி பிரமற்கும் மன்னவன்2ஞாலத் திவன்மிக நல்லன்என் றாரே.3பா-ம் : 1மேனி பணிந்தடியேன் தொழ 2ஒப்புநீ 3ஞாலத்து நம்மடி நல்கிடென்றாலே
சொற்பிரிப்பு
ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்பாலொத்த மேனியன் பாதம் பணிந்துய்யமாலுக்கும் ஆதி பிரமற்கும் மன்னவன்ஞாலத் திவன்மிக நல்லன்என் றாரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
53
வானவர் என்றும் மனிதர் இவர் என்றும்தேனமர் கொன்றைச் சிவனருள் அல்லதுதானமர்ந்து ஓரும் தனித்தெய்வம் மற்றில்லைஊனமர்ந் தோரை உணர்வது தானே.

54
சோதித்த பேரொளி மூன்று ஐந்து எனநின்றஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்நீதிக்கண் ஈசன் நெடுமால் அயனென்றுபேதித் தவரைப் பிதற்றுகின் றாரே.

55
பரத்திலே ஒன்றாய் உள் ளாய்ப்புற மாகிவரத்தினுள் மாயவ னாய்அய னாகித்தரத்தினுள் தான்பல தன்மைய னாகிக்கரத்தினுள் நின்று கழிவுசெய் தானே.

56
தானொரு கூறு சதாசிவன் எம்மிறைவானொரு கூறு மருவியும் அங்குளான்கோனொரு கூறுஉடல் உள்நின்று உயிர்க்கின்றதானொரு கூறு சலமய னாமே.