திருமுறை 10 · 10.00.01 · 39

பாயிரம்

அருளியவர்
திருமூலர்

1

ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்துவென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே.
சொற்பிரிப்பு
ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்நின்றனன் மூன்றினுள் நான்கு உணர்ந்தான் ஐந்துவென்றனன் ஆறு விரிந்தனன் ஏழு உம்பர்ச்சென்றனன் தானிருந்தான் உணர்ந்து எட்டே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனைநாற்றிசைக் கும்நல்ல மாதுக்கு நாதனைமேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம்கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே.
சொற்பிரிப்பு
போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனைநாற்றிசைக்கும் நல்ல மாதுக்கு நாதனைமேற்றிசைக்குள் தென் திசைக்கு ஒரு வேந்தனாம்கூற்றுதைத்தானை யான் கூறுகின்றேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்நக்கனென்று ஏத்திடும் நாதனை(1) நாள்தொறும்பக்கநின் றார்அறி யாத பரமனைப்புக்குநின்று உன்னியான் போற்றிசெய் வேனே(2).பா-ம் 1) நம்பனை 2) கின்றேனே
சொற்பிரிப்பு
ஒக்க நின்றானை உலப்பிலி தேவர்கள்நக்கன் என்று ஏத்திடும் நாதனை நாள்தொறும்பக்கநின்றார் அறியாத பரமனைப்புக்கு நின்று உன்னி யான் போற்றி செய்வேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்புகலிடத்து என்றனைப்(1) போதவிட் டானைப்பகலிடத் தும்இர வும்பணிந் தேத்திஇகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே.பா-ம் 1) என் மெய்யைப்
சொற்பிரிப்பு
அகலிடத்தார் மெய்யை அண்டத்து வித்தைப்புகலிடத்து என் தனைப் போதவிட்டானைப்பகலிடத்தும் இரவும் பணிந்தேத்திஇகலிடத்தே இருள் நீங்கி நின்றேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்றதற்பரன் கற்பனை யாகும் சராசரத்துஅற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்நற்பத முமளித் தானெங்கள் நந்தியே.

6

நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்நந்திகள் நால்வர் சிவயோக மாமுனிமன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்என்றிவர் என்னோ டெண்மரு மாமே.

7

நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம்நந்தி அருளாலே மூலனை நாடினோம்நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்நந்தி வழிகாட்ட நானிருந் தேனே.

8

மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடுஇந்த எழுவரும் என்வழி யாமே.

9

நால்வரும் நாலு திசைக்கொன்று நாதர்கள்நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டுநால்வரும் யான்பெற்ற தெல்லாம் பெறுகெனநால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே.

10

மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்கழிந்த பெருமையைக் காட்டகி லானே.

11

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ்செழுந்தண் நியமங்கள் செய்யுமின் என்றண்ணல்கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடேஅழுந்திய நால்வர்க்கு அருள்புரிந் தானே.

12

நந்தி திருவடி யான்தலை மேற்கொண்டுபுந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய்தந்தி மதிபுனை அரனடி நாள்தொறும்சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே.

13

செப்புஞ் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்ஒப்பிலா எழுகோடி யுகமிருந் தேனே.

14

இருந்தஅக் காரணம் கேள்இந் திரனேபொருந்திய செல்வப் புவனா பதியாம்அருந்தவச் செல்வியைச் சேவித்து அடியேன்பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே.

15

சதாசிவந் தத்துவம் முத்தமிழ் வேதம்மிதாசனி யாதிருந் தேனின்ற காலம்இதாசனி யாதிருந் தேன்மனம் நீங்கிஉதாசனி யாதுடனே உணர்ந் தோமால்.

16

மாலாங்க னேஇங்கு யான்வந்த காரணம்நீலாங்க மேனியள் நேரிழை யாளொடுமூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே.

17

நேரிழை யாவாள் நிரதிச யானந்தப்பேருடை யாளென் பிறப்பறுத்து ஆண்டவள்சீருடை யாள்சிவன் ஆவடு தண்டுறைசீருடை யாள்பதம் சேர்ந்திருந் தேனே.

18

சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்டுறைசேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில்சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே.

19

இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடிஇருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தேஇருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தேஇருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே.

20

பின்னைநின்று என்னே பிறவி பெறுவதுமுன்னைநன் றாக முயல்தவம் செய்கிலர்என்னைநன் றாக இறைவன் படைத்தனன்தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே.

21

ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்குஊனமில் ஒன்பது கோடி யுகந்தனுள்ஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்துநானும் இருந்தேன்நற் போதியின் கீழே.

22

செல்கின்ற வாறறி சிவமுனி சித்தசன்வெல்கின்ற ஞானத்து மிக்கோர் முனிவராய்ப்பல்கின்ற தேவர் அசுரர்நரர் தம்பால்ஒல்கின்ற வான்வழி யூடுவந் தேனே.

23

சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்உத்தம மாகவே ஓதிய வேதத்தின்ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்திஅத்தன் எனக்குஇங்கு அருளால் அளித்ததே.

24

யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.

25

பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பிமறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலைஉறைப்பொடுங் கூடிநின்று ஓதலு மாமே.

26

அங்கிமி காமைவைத் தானுடல் வைத்தான்எங்குமி காமைவைத் தான்உலகு ஏழையும்தங்குமி காமைவைத் தான் தமிழ்ச் சாத்திரம்பொங்கிமி காமைவைத் தான்பொருள் தானுமே.

27

ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினைமாயத்தை மாமாயை தன்னில் வரும்பரைஆயத்தை யச்சிவன் தன்னை யகோசரவீயத்தை முற்றும் விளக்கியிட் டேனே.

28

விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதிஅளப்பில் பெருமையன் ஆனந்த நந்திதுளக்கறும் ஆனந்தக் கூத்தன்சொற் போந்துவளப்பில் கயிலை வழியில்வந் தேனே.

29

நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன்நந்தி அருளால்மெய்ஞானத்துள் நண்ணினேன்நந்தி அருளாலே நானிருந் தேனே.

30

இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடிஅருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும்அருக்கனும் சோமனும் ஆரழல் வீசஉருக்கிய ரோமம் ஒளிவிடுந் தானே.

31

பிதற்றுகின் றேனென்றும் பேர்நந்தி தன்னைஇயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும்முயற்றுவன் ஓங்கொளி வண்ணன்எம் மானைஇயற்றிகழ் சோதி இறைவனு மாமே.

32

ஆரறி வார் எங்கள் அண்ணல் பெருமையையாரறி வார்இந்த அகலமும் நீளமும்பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்வேரறி யாமை விளம்புகின் றேனே.

33

பாடவல் லார்நெறி பாட அறிகிலேன்ஆடவல் லார்நெறி ஆட அறிகிலேன்நாடவல் லார்நெறி நாட அறிகிலேன்தேடவல் லார்நெறி தேடகில் லேனே.

34

மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர்இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்பின்னை உலகம் படைத்த பிரமனும்உன்னும் அவனை உணரலு மாமே.

35

தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரைமுத்திக்கு இருந்த முனிவரும் தேவரும்ஒத்துடன் வேறா இருந்து துதிசெயும்பத்திமை யால் இப் பயனறி யாரே.

36

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்ஞாலம் அறியவே நந்தி அருளதுகாலை எழுந்து கருத்தறிந் தோதிடின்ஞாலத் தலைவனை நண்ணுவர் அன்றே.

37

வைத்த பரிசே வகைவகை நன்னூலின்முத்தி முடிவிது மூவா யிரத்திலேபுத்திசெய் பூர்வத்து மூவா யிரம்பொதுவைத்த சிறப்புத் தருமிவை தானே.

38

வந்த மடம்ஏழும் மன்னும்சன் மார்க்கத்தின்முந்தி உதிக்கின்ற மூலன் மடவரைதந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே.

39

கலந்தருள் காலாங்கர் தம்பால்அ கோரர்நலந்தரு மாளிகைத் தேவர்நா தாந்தர்புலங்கொள் பரமானந் தர்போக தேவர்நிலந்திகழ் மூவர் நிராமயத் தோரே.