திருமுறை 10 · 10.00.00 · 1

விநாயகர் காப்பு

1

ஐந்து கரத்தனை யானை முகத்தனைஇந்தின் இளம்பிறை போலும் எயிற்றனைநந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
சொற்பிரிப்பு
ஐந்து கரத்தனை யானை முகத்தனைஇந்தின் இளம்பிறை போலும் எயிற்றனைநந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.