1
சொற்பிரிப்பு
உரை
சிராப்பள்ளிக் குன்றில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை, “நன்மைகளையே தனக்கு உடைமையாகக் கொண்டவனே! தீயது ஒன்றுமே இல்லாதவனே! மிக வெண்மையான ஆனேற்றைத் தனக்கு ஊர்தியாகக் கொண்டவனே! பார்வதியை ஒரு பாகமாக உடையவனே! அவனது அருளால் அன்றி சென்று அடைய முடியாத வீடுபேறு என்ற செல்வத்தை உடையவனே!’ என்று போற்ற என் உள்ளம் குளிரும்.