1
சொற்பிரிப்பு
உரை
நீலநிறம் பொருந்திய கண்டத்தினை உடைய திருஆலவாய் இறைவனைச் சென்று தொழுது மனத்தால் அவன் அருகில் இருப்பதாக உணர்பவர்கள், இவ்வுலகை ஆள்வர்.
நீலநிறம் பொருந்திய கண்டத்தினை உடைய திருஆலவாய் இறைவனைச் சென்று தொழுது மனத்தால் அவன் அருகில் இருப்பதாக உணர்பவர்கள், இவ்வுலகை ஆள்வர்.
எம பயம் இன்றி வாழ, ஏழுலகங்களிலும் எழுந்தருளி இருக்கும் ஆலவாய் இறைவனது மெய்ப்புகழையே உரையால் போற்றி வருவீர்களாக.
கல்லால மர நிழலில் வீற்றிருப்பவரும், காலனுக்குக் காலனாய் அவனை அழித்தருளிய பெருவீரரும் ஆகிய ஆலவாய் இறைவனை மனத்தால் அணுகியிருப்பீர்களாக.
ஆலவாய்க் கோயிலில் உள்ள எந்தையாகிய சிவபெருமானுடைய அழிவில்லாத புகழுக்கு இருப்பிடமான திருவடிகளை மனங்கொள்ளுங்கள்.
வெற்றியோடு கூடிய எருதை வாகனமாகக் கொண்ட சிவபெருமான் நான்மாடக்கூடல் என்னும் ஆலவாயில், வீற்றிருந்து அருள் புரிந்து வருகின்றார். அவர் புகழைப் பாடி மனத்தால் அவ்விறைவனையே நாடி வாழ்வீர்களாக.
தலைமையாளனும் ஆலவாய் என்னும் மதுரைப் பதியின் கோயிலில் வீற்றிருந்து அருன் வழங்கி வருபவனுமாகிய சோமசுந்தரப் பெருமானையே எண்ணித் தொழுதுவரின் இன்பம் பெறுவது திண்ணமாகும்.
அழகிய பொன் மயமான ஆலவாய்த் திருக்கோயிலில் விளங்கும் இறைவனுடைய திருவடிகளே நமக்குச் சார்வாகும், என நம்பி வாழ்பவரின் துன்பம் நீங்கும்.
அரக்கனாகிய பெருவலி படைத்த இராவணனைக் கால் விரலால் நெரித்தருளிய ஆலவாய் அரன் புகழை உரைக்கும் உள்ளத்தார்க்கு அவனது கருணை உளதாகும் (இத்தகு உள்ளத்தார்க்கு இயல்பாகவே உயிர்கள் மாட்டு இரக்க உணர்வு கூடும் எனப் பொருள் கோடலும் சாலும்).
அருவனாய் விளங்கும் இறைவன் திருவாலவாயில் திருமால் பிரமன் ஆகிய இருவர் போற்றும் உருவனாய் மருவி ஓங்கி நிற்கின்றான்.
பாம்பாகிய ஆரத்தை அணிந்தவனாய், ஆலவாயில் பெரும் புகழாளனாய் விளங்கும் இறைவன், புத்தரையும் சமணரையும் அழித்த பெருவீரன் ஆவான் என்று அடியவர்கள் அவனைப் புகழ்ந்து போற்றுவார்கள்.
ஆலவாயில் எழுந்தருளிய அடிகளாகிய இறைவனது திருவருளில் தோய்ந்த ஞானசம்பந்தனின் அழிவற்ற இனிய இத்தமிழ் மாலை நமக்கு வரும் வினைகளைப் போக்குவதாகும்.