1
சொற்பிரிப்பு
உரை
திருஇடைமருதூர் இறைவன் தோட்டை, தனது இடத் திருச்செவியில் அணிந்தவன். நான்கு வேதங்களைப் பாடுபவன். சுடுகாட்டை விரும்பி அதன்கண் நின்று ஆடுகின்றவனும் ஆவான்.
திருஇடைமருதூர் இறைவன் தோட்டை, தனது இடத் திருச்செவியில் அணிந்தவன். நான்கு வேதங்களைப் பாடுபவன். சுடுகாட்டை விரும்பி அதன்கண் நின்று ஆடுகின்றவனும் ஆவான்.
தம்மைக் கருதாதவராகிய அசுரர்களின் முப்புரங்களை எய்து அழித்தவரும், எருதை வாகனமாகக் கொண்டு இனிதாக ஊர்பவரும் ஆகிய சிவபெருமானுக்கு திருவிடைமருதூரே விரும்பி உறையும் இடம் ஆகும். அவரைத் தொழுதால் புகழ் சேரும். தீய வினைகள் தீர்ந்து விடும்.
மனத்தால் எண்ணி வழிபடும் அன்பர்களின் தலைமையாளராய் விளங்கும் மருதவாணரைப் பண்ணிசையோடு அவர்தம் புகழைப் போற்ற, விண்ணுலகமும் அவர்கள் வசமாகும்.
விரிந்த சடைமுடியை உடையவரும், எரிபோன்ற சிவந்த மேனியருமாகிய மருதவாணரைத் தாமதியாது துதிப்பவர் உலகில் பெரியவர் எனப் போற்றப்படுபவர்.
கட்டுத்தறியில் கட்டத்தக்க விடையின் மேல் ஏறி ஊர்ந்து வரும் எந்தையாராகிய மருதவாணரை மனத்தால் தியானிப்பவர்கள் அறிவால் மேம்பட்டவர் ஆவர்.
ஒரு காலில் கழலும், பிறிதொரு காலில் சிலம்பும் ஒலிக்கும் உமை பாகராகிய அழகிய மருதவாணரை விரும்பித் தொழுவதை நியமமாகக் கொண்டவர்க்கு வருத்துவதற்கு உரிய வினைகள் துன்புறுத்தாது அகன்று விடும்.
பிறை பொருந்திய சடைமுடியினை உடைய தலைமையாளர் சிவபெருமான். அவர் வேதங்களை அருளியவர். திருஇடைமருதூரில் விளங்கும் இந்த மருதவாணரை நிறைந்த மனத்தால் நினைப்பவர் இன்பம் நிறையப் பெறுவர்.
கயிலை மலையை எடுத்த இராவணனின் தோள்களை நெரித்த மருதவாணருக்கு மாலை சூட்டுவதற்கு மலர் தொடுத்தவர்கள், பிறவிக்குக் காரணமான ஆசையை விடுத்தவர்கள் ஆவர்.
திருமால் பிரமர் அடிமுடி அறிய முடியாதவாறு எரி உருவமாய் நின்றவர் மருதவாணர். அவரைப் புகழ்ந்து ஏத்தித் துதிப்பவர் எல்லா நலன்களோடும் மருவி வாழும் வாழ்க்கையைப் பெறுவர்.
நின்றுண்ணும் சமணரும், புத்தரும் எக்காலத்தும் இடைமருது இறைவனாகிய சிவபெருமானை மாறுபட்ட உரைகளால் கூறுவதால் அவர் எக்காலத்தும் நல்லனவே கூறார்.
இறைவன் திருவருளையே கருதும் ஞானசம்பந்தன் மருதவாணரின் திருவடிகளைப் பெரிதும் போற்றிப் பாடிய இத்தமிழ் மாலையை ஓதுபவர்க்குத் துன்புறுத்திய வினைகள் போகும்.