1
சொற்பிரிப்பு
உரை
இன்றே திருமுதுகுன்றம் சென்று, அங்குள்ள இறைவனை மலரால் அருச்சித்து நின்று நல்லமுறையில் துதிப்பீராயின் உமக்கு எக்காலத்தும் இன்பம் உளதாம்.
இன்றே திருமுதுகுன்றம் சென்று, அங்குள்ள இறைவனை மலரால் அருச்சித்து நின்று நல்லமுறையில் துதிப்பீராயின் உமக்கு எக்காலத்தும் இன்பம் உளதாம்.
நீர் திருமுதுகுன்றத்துத் தலைவனாய் விளங்கும் இறைவன்மீது பக்தி செலுத்தி நாள்தோறும் வழிபட்டு வருவீராயின் உமக்குச் செல்வம் பெருகும்.
உய்த்தல் செல்வமே - பொருந்துதல் செல்வமேயாகும் என்றது பொருள் பெருகும் என்பதாம்.
திருமுதுகுன்றத்து ஈசனை நீர் அன்போடு மணம் பொருந்திய மலர்களால் அருச்சித்துவரின் உம் பாசங்களும் அவற்றால் விளைந்த வினைகளும் நீங்கும்.
அழகிய திருமுதுகுன்றத்து இறைவனைப் பணிபவர்கள், பிணிகளில் இருந்து விடுபட்டு உலகில் அமைதியோடு வாழ்வார்கள்.
அன்பர்கள் நெருங்கித் திரண்டுள்ள திருமுதுகுன்றத்து இறைவனை, நீங்கள், ‘ஐயா’ என அன்போடு அழைத்துத் துதிக்க வல்லீர்களாயின் இரப்பவர்க்கு இல்லை என்னாத நிலையில் திருமகள் நிறை செல்வத்தோடு உங்களுக்கு அணியனள் ஆவாள்.
விடை ஊர்தியை உடைய திருமுதுகுன்றத்து சிவபிரானை இடையீடுபடாது ஏத்துகின்றவர் படைகள் பல சூழ உலகத்தை ஆட்சிசெய்யும் உயர்வை உடையவர் ஆவர்.
பத்துத் தலைகளை உடைய இராவணனை அவன் கதறி அழுமாறு கால் விரலை ஊன்றி அடர்த்த திருமுதுகுன்றத்துத் தலைவனாகிய சிவபிரானை நெருங்கிச் சென்று பணிவீராக.
திருமால் மற்றும் பிரமன் ஆகிய இருவரும் அறியவொண்ணாத திருமுதுகுன்றத்தில் விளங்கும் பெருமானை மனம் உருகி நினைப்பவர் பெருக்கத்தோடு வாழ்வர்.
புத்தர் சமணர் ஆகியோர்க்குத் தன்னை வந்தடையும் புண்ணியத்தை அளிக்காத சிவபெருமானுடைய திருமுதுகுன்றத்தை வாய்ப்பு நேரின், நீர் நேரில் நின்று தியானியுங்கள்.
திருமுதுகுன்றம் சென்று நின்று பெருமை உடையவனாகிய ஞானசம்பந்தன் ஒன்றி உரைத்த இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர் எக்காலத்தும் உயர்வு பெறுவர்.