1
சொற்பிரிப்பு
உரை
குற்றமற்ற வீழிமிழலையில் எழுந்தருளியிருக்கும் இறைவரே, அடியேனுக்கு வழங்கி அருளும் காசில் உள்ள உயர்வு தாழ்வு நீங்குமாறு செய்து நல்ல காசினை நல்குக. அதனால் உமக்குப் பழிப்பு இல்லை
குற்றமற்ற வீழிமிழலையில் எழுந்தருளியிருக்கும் இறைவரே, அடியேனுக்கு வழங்கி அருளும் காசில் உள்ள உயர்வு தாழ்வு நீங்குமாறு செய்து நல்ல காசினை நல்குக. அதனால் உமக்குப் பழிப்பு இல்லை
எல்லாருக்கும் இறைவனாக விளங்கும் பெருமானீரே, வேதங்களின் ஒலி நிறைந்த திருவீழிமிழலையில் எழுந்தருளி இருப்பவரே, கறை படிந்ததாக அளிக்கப்படும் காசில் . உள்ள அக்கறையை நீக்கி முறையாக அளித்தருள்க.
சிவந்த திருமேனியை உடையவரே, மெய்ம்மையாளர் வாழும் திருவீழிமிழலையில் எழுந்தருளி இருப்பவரே, படம் எடுக்கும் பாம்பை அணிகலனாகப் பூண்டுள்ளவரே, நாங்களனைவரும் உய்யுமாறு வாசியில்லாததாகக் காசு அருளுக.
திருவெண்ணீற்றை அணிந்தவரே, ஆனேற்றில் ஏறி வருபவரே, பலராலும் புகழப்பெறும் திருவீழிமிழலையில் எழுந்தருளியவரே, காசு அருளுவதோடு எமக்கு முத்திப் பேறும் அருளுவீராக.
காமனை எரித்து அழியுமாறு செய்த புகை பொருந்திய அழல் விழியை உடையவரே, புகழ் பொருந்திய திருவீழிமிழலையில் எழுந்தருளியவரே, எமக்குச் சேமத்தை அருளுவீராக.
கட்டப்பட்ட சடையை உடையவரே, நீலமணி போன்ற கண்டத்தை உடையவரே, அழகு பொருந்திய திருவீழிமிழலையில் எழுந்தருளி இருப்பவரே, எம்மைப் பணி கொண்டு அருளுவீராக.
உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவரே, உயர்வுடைய திருவீழிமிழலையில் உறைபவரே; கங்கை சூடிய திருமுடியை உடையவரே, எங்களது ஐயுறவைப் போக்கி அருளுக.
இராவணன் கயிலை மலையின்கீழ் அகப்பட்டு நெரிய இரக்கம் காட்டி அருளுபவரே, எங்கும் பரவிய புகழ் உடைய திருவீழிமிழலையில் உறைபவரே, எமக்கு அளிக்கும் காசில் உள்ள குறையைப் போக்கியருளுக.
நான்முகனும் திருமாலும் அடிமுடி காண முயலும் போது, அவர்கள் காணமுடியாத பேருருவம் கொண்டவரே, எல்லோரும் எளிதில் வழிபட இயலுமாறு திருவீழிமிழலையில் எழுந்தருளியவரே, எமக்கு வீட்டின்பத்தை அருளுவீராக.
ஒன்றொன்றாக மயிர் பறித்த தலையினை உடைய சமணர்கள் அறிய வேண்டிய உண்மை ஞானங்களை அறியாது வாழ்கின்றனர். மணம் கமழும் திருவீழிமிழலையில் உறைபவரே, நாங்களனைவரும் உம்மைப் பிரிந்து வாழ்தல் இயலாது.
இத்திருப்பதிகம் சீகாழிப். பதியாகிய பெரிய நகருள் தோன்றி வாழும் ஞானசம்பந்தன் திருவீழிமிழலை இறைவர்மேல் தாழ்ந்து பணிந்து போற்றிய மொழிகளைக் கொண்டதாகும்.